ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக ரோஜா பூக்கள் பூக்க வீட்டிலேயே நீங்க என்ன செய்யனும் தெரியுமா? இதை தண்ணீரிலே கலந்து கொடுத்தால் போதுமே!

murungai-ilai-rose-plant
- Advertisement -

ரோஜா பூ செடிகள் கொத்து கொத்தாக பூக்கும் அற்புதமான ஒரு கண்கொள்ளா காட்சியை பார்க்கும் பொழுது எப்படி இருக்கும்? நாம் வளர்க்கும் ரோஜா செடியில் ஒவ்வொரு கிளையிலும் கொத்துக்கொத்தாக பூக்கள் மலர செய்வதற்கு நாம் பெரிதாக செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நம் வீட்டில் இருக்கக் கூடிய இந்த பொருளை தண்ணீரில் கலந்து கொடுத்தால் போதும், செடிகள் அவ்வளவு அருமையாக பெரிய பெரிய பூக்களை கொடுக்கும். அப்படியான ஒரு எளிய உரம் என்ன? என்பதைத் தான் இந்த தோட்டக்குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா செடியில் பூக்கள் அதிகம் பூப்பதற்கு நாம் செய்ய வேண்டியது அதற்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உரத்தை வாரம் ஒரு முறையாவது கொடுத்து வருவது தான். பொதுவாக ரோஜா செடியை அவ்வப்பொழுது பூக்கள் பூத்தவுடன் கட்டிங் செய்வது அவசியமாகும். அப்போது தான் புதிய தளிர்களும், புதிய கிளைகளும் நிறைய துளிர்க்கும். இதனால் பூக்களும் உத்வேகமாக புத்துணர்வுடன் பூப்பதை காண முடியும்.

- Advertisement -

ஃப்ரெஷான இந்த ரோஜா செடியில் அதிகமான பூக்களை அள்ளுவதற்கு முதலில் அமினோ அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ள முருங்கைக்கீரை தேவை. ரோஜா செடி அமிலங்களை அதிகம் ஈர்த்து பெரிய பெரிய பூக்களை கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. எனவே ஐந்து கொத்து முருங்கை இலையை சிறுசிறு கிளைகளாக அப்படியே ஒடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

முருங்கை இலையில் இருக்கக்கூடிய ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மனிதனுக்கு மட்டுமல்ல ரோஜா செடிகளுக்கும், மற்ற செடி வகைகளுக்கும் கூட நல்ல ஒரு உரமாக இருக்கிறது. இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்களுக்கு அதிகம் நன்மைகளை செய்யக்கூடியது. எனவே அடிக்கடி பெண்கள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது.

- Advertisement -

முருங்கை இலைகளை இப்பொழுது சிறு சிறு காம்புகளுடன் சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்த இந்த கலவையை அரை பாக்கெட் தண்ணீரில் நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை வாரம் ஒரு முறை நீங்கள் உங்களுடைய எல்லா வகையான ரோஜா செடிகளுக்கும் ஒவ்வொரு மக் வீதம் நீங்கள் கொடுத்து வரலாம்.

இந்த கலவையுடன் அரிசி மாவு அல்லது தோசை மாவு உங்களிடம் இருந்தால் ஒரு கரண்டி அளவிற்கு சேர்த்து கலந்து விடுங்கள். புளித்த தோசை மாவு சேர்த்து ஊத்தலாம். இப்படி நல்ல ஒரு ஊட்டச்சத்தை உங்களுடைய ரோஜா செடிக்கு வாரம் ஒரு முறை ஆவது தவறாமல் கொடுத்து வந்து பாருங்கள். ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக பூக்கள் பூக்கும். பூக்காத செடிகள் கூட பூத்துக்குலுங்க இது போல நீங்கள் கொடுத்து வரலாம்.

இதையும் படிக்கலாமே:
தோட்டம் வைத்திருப்பவர்கள் இந்த விஷயங்களை தெரிந்து கொண்டாலே செலவே இல்லாம உரங்களை தயாரித்து செடி வளர்க்கலாம். புதிதாக தோட்டம் வைப்பவர்கள் கூட எளிதாக தோட்டம் வைக்க எளிமையான டிப்ஸ்.

அது மட்டும் இல்லாமல் கற்றாழையில் இருக்கக்கூடிய ஜெல்லை கூட நீங்கள் இதற்கு உரமாக கொடுக்கலாம். மேலும் வீட்டில் இருக்கக்கூடிய பழக் கழிவுகள், காய்கறி கழிவுகளை மக்க செய்து உரமாக கொடுக்கலாம். முட்டை, தேயிலை தூள் போன்றவற்றையும் வெயிலில் காய வைத்து பொடித்துக் கொடுக்கலாம். இப்படி இயற்கையான முறையில் பராமரித்து பாருங்கள். கண்கொள்ளா காட்சியாக உங்களுடைய ரோஜா செடியும் ஒரு கிளையிலேயே அதிக பூக்களை பூத்து தள்ளும்.

- Advertisement -