இப்படி ஒரு கொத்தமல்லி சட்னியை இதுவரைக்கும் நீங்கள் கேள்விப்பட்டு கூட இருக்க மாட்டீங்க. வித்தியாசமான சுவையில் சட்னி ரெசிபி உங்களுக்காக.

kothamalli-chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள வகைவகையாக எத்தனையோ சைடிஸ் இருந்தாலும் சட்னி வகைகளுக்கு என்று ஒரு தனி சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, காரச் சட்னி, தக்காளி சட்னி, இந்த வரிசையில் சூப்பரான ஒரு கொத்தமல்லிதழை சட்னி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க வீட்ல ஒரு முறை இந்த சட்னி ரெசிபி செஞ்சு பாருங்க. எப்பவும் சாப்பிடும் இடியுடன் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவீங்க.

puli-karaisal

முதலில் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை, 1/4 கப் தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து கொஞ்சம் பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். 2 கைப்பிடி அளவு கொத்த மல்லித் தழை நமக்கு தேவைப்படும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் வெள்ளை எள்ளு – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், போட்டு எண்ணெய் எதுவும் ஊற்றாமல் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது எள்ளு படபடவென பொரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இதை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

ellu

அடுத்தபடியாக அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணை காய்ந்ததும் அதில் பச்சைமிளகாய் – 10, கருவேப்பிலை ஒரு கொத்து, பெருங்காயம் – 1/2 ஸ்பூன், 2 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகளை சேர்த்து ஒரு நிமிடம் போல நன்றாக வதக்கி விட வேண்டும். மல்லி தழைகள் உடனடியாக சுருங்கி வந்துவிடும்.

- Advertisement -

அதன் பின்பு 4 தக்காளி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி கடாயில் சேர்த்துக்கொள்ளுங்கள். மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், உப்பு – 1/4 ஸ்பூன், போட்டவுடன் தக்காளியில் இருந்து தண்ணீர் விடத் தொடங்கும். கடாயில் இருக்கும் பொருட்களை ஒரு முறை நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு 3 நிமிடங்கள் வேக வைத்து விடுங்கள். தக்காளிப்பழம் நன்றாக வெந்து வரும்.

தக்காளி

3 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு, இந்த கலவையை நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் முதலில் வறுத்து வைத்திருக்கும் எள்ளு சீரகத்தை சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் பொடித்து விட்டு, அதன் பின்பு இந்த எள்ளு சீரகப்பொடியோடு, ஆற வைத்திருக்கும் கொத்தமல்லி தக்காளி வதக்கியதை சேர்த்து, சட்னிக்கு தேவையான அளவு உப்புப் போட்டு, இதோடு பூண்டு பல் 6, ஏற்கனவே ஊற வைத்திருக்கும் புளி, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கெட்டியாக சட்னியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு சூப்பரான தாளிப்பு கொடுக்கலாம். ஒரு சிறிய கடலையை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக கிள்ளிய வரமிளகாய் – 2, இடித்த பூண்டுப் பல் –  2, இந்த பொருட்களை போட்டு தாளித்து இதை அப்படியே சட்னியில் கொட்டி கலந்து பரிமாறுங்கள். சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டாலும் இந்த சட்னி அருமையாக இருக்கும். இந்த சட்னி கொஞ்சம் காரம் தூக்கலாகவே இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -