கொத்தமல்லி செடி ஒரே வாரத்தில் காடு போல தழைத்து வளர, இதை மட்டும் தெளிச்சு விடுங்க போதும். இந்த முறையில் வெறும் தேங்காய் சிரட்டையில் கூட கொத்தமல்லியை செழிப்பா வளர வைச்சிடலாம்

- Advertisement -

இந்த கொத்தமல்லி செடியை வளர்க்க பெரிய தோட்டமோ அல்லது பெரிய தொட்டியோ தான் வேண்டும் என்ற எந்த அவசியமில்லை. இது ஒரு சிறு தாவரம் தான் எனவே இதற்கு சிறிய கொட்டாங்குச்சி இருந்தாலே போதும், அதிலேயே நாம் கொத்தமல்லியை செழிப்பாக வளர்த்து விட முடியும். அதை எப்படி வளர்ப்பது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செடி வளர்ப்பில் மிக மிக சுலபமாக வளர்க்கக் கூடிய செடிகளில் ஒன்று இந்த கொத்தமல்லி செடி. ஆனால் இந்த கொத்தமல்லி செடி வளர்ப்பிற்கு அதன் விதைகள் நல்ல தரமானதாக இருக்க வேண்டும். விதைகள் பிளவு பட்டதை போல் இருந்தால் அந்த விதைகளை செடி வளர்ப்பிற்கு பயன் படுத்த வேண்டாம். கொத்தமல்லி செடி வளர்ப்புக்கு விதைகளை ஊற வைத்து முளைத்த பிறகு வளர்க்கும் முறை எல்லாம் இதற்கு தேவையே படாது. நேரடியாக மண்ணில் விதைகளை தூவி செடிகளை முளைக்க வைத்து விடலாம். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு எந்த வகை மண் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் சாதாரண மண்ணை கூட எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மண் எந்த அளவிற்கு எடுக்கிறீர்களோ அதை அளவிற்கு ஏதாவது ஒரு உரத்தை தனியாக கலந்து கொள்ளுங்கள். தேங்காய் நார் உரம், சமையல் கழிவு உரம், மண் புழு உரம், மாட்டுச்சாண உரம் இப்படி உங்களிடம் இருக்கும் எந்த உரம் இருந்தாலும் அதை இந்த மண்ணுடன் கலந்து கொள்ளுங்கள்.

முதலில் கொட்டாங்குச்சின் அடியில் தண்ணீர் வடிய துளைகள் போட்டு கொள்ளுங்கள் . அதன் பிறகு அந்த ஓட்டையில் தண்ணீர் மொத்தமும் வெளியேறி விடாதவாறு சிறு தேங்காய் சிரட்டை வைத்து அதன் மேல் இந்த மண் கலவையை சேர்த்து எடுத்து கொள்ளுங்கள். மண்ணை அதிக அழுத்தம் கொடுத்து வைக்க கூடாது. அடுத்ததாக கொத்தமல்லி விதைகளை ஒரு பேப்பரில் வைத்து அதன் மேல் பூரி கட்டையை லேசாக தேய்த்தாலே போதும் விதைகள் இரண்டாக பிளவு படும். அந்த விதைகளை இந்த மண் தூவி அதன் மேல் லேசாக மணலை பரப்பி விடுங்கள். இப்போது இந்த செடி நன்றாக வளர தேவையான அந்த உரத்தை கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அதற்கு கொஞ்சம் முருங்கை இலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் அதை வடிகட்டிய பிறகு அந்த தண்ணீரை மட்டும் லேசாக காய்ந்த மண் மீது தெளித்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் விதை போட்டு இருக்கும் கொட்டாங்குச்சியின் அதன் மேல் ஒரு பேப்பர் அல்லது அட்டை வைத்து மூடி அதை பறக்காத அளவிற்கு சின்னதாக கல் வைத்து விடுங்கள். இதை அப்படியே வெயில் இல்லாமல் வெயிலின் நிழல் மட்டும் படும் இடத்தில் வைத்து விடுங்கள்.

இதில் தண்ணீர் இல்லாமல் வற்றி விட்டால் மட்டும் கொஞ்சம் தண்ணீரை லேசாக தெளித்து விட்டால் போதும். ஒரே வாரத்தில் நீங்கள் விதைத்த விதைகள் அனைத்தும் நன்றாக முளைத்து இருக்கும். இது மிக மிக எளிமையான முறை இந்த சிறிய கொட்டாங்குச்சியில் ஒரு கட்டு கொத்தமல்லி வரை நீங்கள் பயிரிட்டு வளர்த்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க கிட்ட கொஞ்சம் வேப்பிலையும், வாழைப்பழம் இருந்தா, அதோட இதையும் சேர்த்து உங்க ரோஜா செடிக்கு ஊத்தி விட்டுடுங்க. ரோஜா செடி இனி கருகவே கருகாது. அப்புறம் பாருங்க செடியில் தாறுமாறா பூ பூக்கும்.

ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்கு இந்த கொத்தமல்லி கிடைக்கும். அதை விட்டு இதை எல்லாம் செய்ய வேண்டுமா? என்று நினைக்கலாம். என்ன இருந்தாலும் நாமே பயிரிட்டு இயற்க்கையான முறையில் வளர்த்து சாப்பிடும் போது மனதிற்கும் ஒரு நிறைவை கொடுக்கும். அது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் மிக மிக நல்லது

- Advertisement -