உங்க கிட்ட கொஞ்சம் வேப்பிலையும், வாழைப்பழம் இருந்தா, அதோட இதையும் சேர்த்து உங்க ரோஜா செடிக்கு ஊத்தி விட்டுடுங்க. ரோஜா செடி இனி கருகவே கருகாது. அப்புறம் பாருங்க செடியில் தாறுமாறா பூ பூக்கும்.

- Advertisement -

வீட்டு தோட்டம் வைத்திருப்பவர்கள் எல்லாம் கட்டாயமாக வித விதமான ரோஜா செடிகளை வளர்த்து வருவார்கள். இந்த ரோஜா வகைகளை பொறுத்த வரையில் அனைத்து சமயத்திலும் பூக்காது. ஒரு சில வகைகள் மட்டுமே எப்போதும் பூத்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் நாட்டு ரோஜாக்கள் அதிகம் பூக்களை கொடுத்து கொண்டே இருக்கும். இப்போது இந்த ரோஜா செடியில் சில நேரங்களில் இலைகள், தளர்கள், மொட்டுக்கள் எல்லாம் கருகிப் போய் விடும் வாய்ப்புகள் அதிகம். அப்படி ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த குறிப்பில் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரோஜா செடிகளை பொறுத்த வரையில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஆகையால் செடிகளை வைக்கும் போது அதில் தேங்காய் நார் உரங்களை சேர்த்து வைத்தால் தண்ணீர் வற்றி விடாமல் ஓரளவிற்கு ஈரம் இருந்து கொண்டே இருக்கும். இந்த ரோஜா செடிகளுக்கு உரங்களை அதிக அளவில் கொடுத்தாலும், இப்படி இலை, தளிர், மொட்டு எல்லாம் கருகி போகும் வாய்ப்பு உண்டு.

- Advertisement -

இப்போது இந்த ரோஜா செடி கருகாமல் நல்ல மொட்டுக்கள் வைத்து அதிகமாக பூக்க தேவையான அந்த உரத்தை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். அதற்கு நமக்கு தேவையானது நல்ல பழுத்த வாழைப்பழங்கள்  வேண்டும் .(ஒரு வேலை உங்களிடம் வாழைப்பழங்கள் இல்லை என்றால் வாழைப்பழ தோள்களை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்). அதன் பிறகு வேப்பிலை, கற்றாழை இந்த மூன்றையும் சம அளவு எடுத்து கொள்ளுங்கள்.

இந்த உரம் தயாரிக்க வாழைப்பழம், கற்றாழை இரண்டையும் சின்ன சின்னதாக நறுக்கி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த கலவையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இறுக்கமாக மூடி வைத்து விடுங்கள். ஒரு நாள் முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். அடுத்த நாள் இதை திறந்து பார்க்கும் போது ஓரளவிற்கு புளித்து இருக்கும். இந்த ஒரு லிட்டர் உரத் தண்ணீரை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி செடிகளுக்கு ஸ்பிரே செய்து விட்டால் போதும்.

- Advertisement -

இந்த உரத்தை ஒரு வாரம் கூட புளிக்க வைத்து செடிகளுக்கு ஊற்றலாம். அப்படி வைக்கும் போது அதில் கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உரமும் இன்னும் நல்ல பலனை கொடுக்கும். நாட்டுச் சர்க்கரை கலப்பதால் பூச்சி வந்து விடும் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு வாரம் வரை ஊறும் போது அந்த நாட்டுச் சர்க்கரை உள்ள இனிப்பு தன்மை அனைத்தும் நீங்கி விடும். அது மட்டும் இன்றி இதில் வேப்பிலையும் நாம் அரைத்து சேர்த்திருப்பதால் செடியில் பூச்சிகள் வராது.

இதையும் படிக்கலாமே: Happy new year 2023 wishes in Tamil | புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

இந்த உரம் செடியில் நன்றாக மொட்டு வைத்து வளரவும் உதவி செய்யும். அதே நேரத்தில் ஒரு பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும். செடி கருகி இருந்தால் மட்டும் தான் இதைக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நன்றாக இருக்கும் செடிகளுக்கு கூட இந்த உரத்தை கொடுத்து வரலாம். செடிகள் நல்ல செழிப்பாக வளர்ந்து அதிக மொட்டுக்களை வைத்து பூத்து குலுங்கும்.

- Advertisement -