வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வராம இருக்க கோவம் வரும் போது 10 நிமிஷம் வாய மூடிட்டு இத செஞ்சு பாருங்க!

fight-mudra
- Advertisement -

இன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை தான். உப்பு சப்பில்லாத விஷயத்தைக் கூட ஊதி பெரிதாக்கி, ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆகிய கதை ஆக்கிவிடுகிறார்கள். பிள்ளைகள் கண் முன்னே நடக்கும் இந்த கணவன், மனைவிக்குள் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நாளை அந்தக் குழந்தைகளையும் பெரிதளவு பாதிக்கும் என்பதை சிறிதளவு நினைத்து கூட பார்க்காமல் அவர்களுடைய சண்டையே பெரிதாக நினைத்து சண்டை போடுபவர்களுக்கு, பின்னர் அமைதியான பின்பு தான் தோன்றுகிறது. குழந்தைகள் மீது இவ்வளவு அக்கறை உள்ள உங்களால் சண்டை போடும் போது மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் கத்தி விடுகிறீர்களா? அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கு தான்.

fight4

நம் அறிவு சொல்லும் விஷயத்தை எப்பொழுதும், மனது இடைமறித்து கொண்டே இருக்கும். நம் அறிவு கெட்ட மனதிற்கு இதுவே வேலையாக இருக்கிறது என்று பலரும் நினைப்பது உண்டு. அறிவு தெளிவாக ஒரு விஷயத்தை இதை செய்யாதே, இது தவறு என்று கூறும் ஆனால் மனமோ ஆத்திரம், கோபம் போன்ற துர்க்குணங்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் மறுத்து விடுகிறது. இந்த துர் குணங்களை நீக்கி அறிவும், மனமும் ஒன்றாக செயல்பட செய்யக்கூடிய அற்புத தியான முறையை தான் நாம் இப்பொழுது கையாளப் போகிறோம்.

- Advertisement -

கோபம் வருவதற்கு முன்னரே ஒரு சில அறிகுறிகள் உங்களுக்கு தோன்றும். நம்மை வெறுப்பேற்றும் படி பேசிக் கொண்டிருக்கிறார்கள், எப்படியும் நமக்கு கோபம் வந்து விட போகிறது என்று உள்மனது எச்சரிக்கை மணி அடிக்கும். அந்த எச்சரிக்கை மணி அடிக்கும் பொழுது இந்த தியானத்தை நீங்கள் துவங்கி விடுங்கள். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.

thiyanam-mantra

உங்களை சுற்றி எந்த விதமான ஓசைகளும் உங்களை பாதிக்காத வண்ணம் கதவுகளையும், காதுகளையும் அடைத்துக் கொள்ளுங்கள். மொபைல் போன், டிவி, லேப்டாப், கம்ப்யூட்டர் என்று எதில் நீங்கள் கவனம் செலுத்தி கொண்டிருந்தாலும் அல்லது வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் அதனை அப்படியே போட்டு விட்டு அமைதியாக ஒரு பத்து நிமிடம் தியானம் செய்யுங்கள்.

- Advertisement -

சம்மணங்கால் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். முதுகு தண்டுவடம் நேராக இருக்குமாறு நிமிர்ந்து உட்காருங்கள். உங்கள் இரண்டு கைகளையும் படத்தில் காட்டியபடி ஒன்றாக இறுக்கி பிடித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு இறுக்கமாக இறுக்கி பிடிக்க முடியுமோ அவ்வளவு இறுக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்த, இது போல் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதனை கணேச யோக முத்திரை என்று கூறுவார்கள். பின்னர் ஒரு பத்து நிமிடத்திற்கு எதுவும் பேசாமல், யாரையும் கண்டு கொள்ளாமல் அமைதியான தியான நிலையில் உங்கள் மனதை சாந்தப்படுத்த முயலுங்கள்.

ganesha-yoga-mudra

உங்கள் அறிவு சொல்வதைக் கேளுங்கள். இப்போது கோபப்பட்டால் தேவையில்லாத சண்டை, சச்சரவு தான் வரும். நம் ஆரோக்கியம் தான் இதனால் கெட்டு விட போகிறது மேலும் நம் குழந்தைகள் எதிர்காலமும் இதில் அடங்கியிருக்கிறது. தேவையற்ற மற்றும் உபயோகமற்ற இந்த சண்டையை தவிர்க்க வேண்டும் என்பதை மனதார நினைத்து தியானம் மேற்கொள்ளுங்கள். பத்து நிமிடம் கழித்து கண்களை திறந்து உங்கள் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுங்கள். அதன் பிறகு யார் என்ன சொன்னாலும், உங்களுக்கு சிறிதும் உரைக்காது போல் உங்கள் மனம் அதனை ஏற்றுக் கொள்ளத் துவங்கி விடும் அற்புதத்தை நீங்களே பார்க்கலாம், ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -