கோவிலில் கொடுக்கக்கூடிய ஐயர்வீட்டுப் தயிர்சாதம் வீட்டிலேயும் செய்து பாருங்கள். இதன் சுவை அசத்தலாகவே இருக்கும்

curd-rice
- Advertisement -

வீட்டில் பலவிதமான உணவுகளை வகை வகையான சுவையில் செய்து கொடுத்தாலும், கோவிலில் கொடுக்கக்கூடிய தயிர்சாதம், பொங்கல், புளியோதரையின் சுவைக்கு ஈடாகாது. எப்போது கோவிலுக்கு சென்றாலும் இவற்றை வாங்கி ருசிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் அங்கு கொடுக்கப்படும் பிரசாதங்களில் இருக்கக்கூடிய தனிப்பட்ட ருசிதான். இதே புளியோதரை, தயிர் சாதத்தை வீட்டில் செய்யும் பொழுது அவ்வாறான ருசி இருக்காது. இதற்கு காரணம் அவர்கள் ஒரு தனிப்பட்ட முறையை பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி கோவிலில் கொடுக்கக்கூடிய ருசியில் தயிர் சாதத்தை வீட்டிலேயும் செய்து கொடுத்தால் ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் வைக்காமல் குழந்தைகள் சாப்பிட்டு முடிப்பார்கள். அனைவரின் உடல் சூடு குறையவும் இந்த தயிர்சாதம் பெரிதும் வழி வகுக்கிறது. வாருங்கள் இந்த சுலபமான சுவையான தயிர் சாதத்தை ஐயர் வீட்டு ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தயிர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி – ஒரு கப், பால் – ஒரு கப், பட்டர் – 15 கிராம், தயிர் – ஒரு கப், பிரஷ் பாலாடைக்கட்டி – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மாதுளை பழம் – ஒரு கப், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கேரட் – 1, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, எண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – 4, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் அரிசியை ஒரு குக்கரில் சேர்த்து இரண்டு, மூன்று முறை தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு கப் பால் சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பிறகு இவற்றுடன் உப்பு மற்றும் 15 கிராம் பட்டர் மற்றும் பாலாடை கட்டி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இறுதியாக இவற்றுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, குக்கரை மூடி, அடுப்பின் மீது வைத்து 6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

பிறகு 15 நிமிடத்திற்கு இவற்றை அப்படியே விட்டு விட்டு குக்கரை திறந்து கலந்து விட வேண்டும். பின்னர் சிறிய துண்டு இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு கேரட்டை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இவற்றுடன் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு கப் தயிரையும் சேர்த்து, அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவேண்டும்.

இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்துவிட்டு, இவற்றை சாதத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இறுதியாக துருவிய கேரட் மற்றும் மாதுளை பழத்தை சேர்த்து கலந்து வைத்தால் சுவையான தயிர்சாதம் தயாராகிவிடும்.

- Advertisement -