10 நிமிடத்தில் வித்தியாசமான சுவையில் கோயம்புத்தூர் ஸ்டைலில் பச்சைபயிறு மசியல் எப்படி செய்வது.

pachaipayaru
- Advertisement -

தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. பச்சைபயிரை வைத்து ஒரு கடையல் சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே கோயம்புத்தூர் பக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் இப்படி தான் பச்சை பயிறு கடையில் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். கோயம்புத்தூர் பச்சைப்பயறு கடையல் எப்படி செய்வது. இப்போவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

முதலில் ஒரு 100 கிராம் அளவு பச்சைப்பயிறு எடுத்துக்கொள்ளுங்கள். 1 கப் பச்சை பயிறை குக்கரில் போட்டு 2 லிருந்து 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும். பச்சைப்பயிறு வறுபட்டு வாசம் வந்தவுடன், தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி விடவேண்டும். கழுவிய இந்த 1 கப் அளவு பச்சைப்பயிறுக்கு, 2 1/2 அளவு தண்ணீரை ஊற்றி, இந்தத் பச்சைப்பயிருடன் குக்கரில் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், பூண்டு தோல் உரித்தது – 3 பல், சின்ன வெங்காயம் – 6, கறிவேப்பிலை – 1 கொத்து, தக்காளி – 1, நல்லெண்ணெய் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு குக்கரை மூடி 5 லிருந்து 6 விசில் விட்டால் பச்சைப்பயிறு நன்றாக வெந்து வரும்.

- Advertisement -

இந்த கடைகளுக்கு ஒரு ஸ்பெஷல் தலைப்பை கொடுக்கப் போகின்றோம். ஒரு கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, வரமல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், பொடியாக கிள்ளிய வரமிளகாய் – 3, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், கறிவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து வெங்காயம் நன்றாக சிவக்கும் வரை வதக்கி, இதை அப்படியே குக்கரில் வேக வைத்திருக்கும் பச்சைப் பயறுடன் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு மத்தை வைத்து லேசாக கடைந்து விடவேண்டும்.

pachaipayaru1

பச்சைப் பயிறை கொழகொழவென மசித்து விடக்கூடாது. ஆங்காங்கே ஒன்றிரண்டு மாக தெரிய வேண்டும். அதே சமயம் நாம் சேர்த்த வெங்காயமும் மற்ற மசாலா பொருட்களும் பச்சைப்பயிறுடன் சேரும்படி கடைந்து விட்டுவிடுங்கள். சுட சுட இந்த மசியலை சுட சுட சாதத்தோடு போட்டு ஒரு ஸ்பூன் நெய் விட்டு மணக்க மணக்க அப்படியே சாப்பிட்டு பாருங்களேன். அற்புதமான சுவை.

மிஞ்சிப்போனால் பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் இந்த ரெசிபியை தயார் செய்துவிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் கூட. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. ருசித்துப்பாருங்க, சந்தோஷமா இருங்க.

- Advertisement -