பித்ரு தோஷம் நீங்க

kovil siva lingam
- Advertisement -

பிரதோஷம் என்றாலே நம்முடைய பாவங்கள் தோஷங்கள் ஆகியவற்றை நீக்கக் கூடியது தான். ஆகையால் தான் இந்த பிரதோஷ வழிப்பாடானது சிவபெருமானுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது. அனைவரின் பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி வளமான வாழ்வை அளிக்கக் கூடிய வரும் அவரே. அத்தகைய பிரதோஷ நாளில் பெரும்பாலான விரதம் இருந்து தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது வழக்கம்.

இந்த சிவாலயத்திற்கு சென்ற பிரதோஷ நாளில் இவரை வழிபடும் போது ஆயிரம் பிரதோஷங்கள் வழிபட்ட பலனை ஒரு பிரதோஷ நாளிலே பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அதிலும் ஒரு சனிப் பிரதோஷ நாளில் இவரை வழிபட்டால் கோடி பிரதோஷங்கள் விரதம் இருந்து வழிபட்ட பலனை பெறலாம். இது எத்தனை பெரிய விஷயம் அது எந்த சிவாலயம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பிரதோஷ நாளில் வழிபட வேண்டிய சிவாலயம்

இந்த சிவாலயம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயம் தான். இங்கிருக்கும் இறைவன் குசலபுரீஸ்வரர், இறைவனின் பெயர் தர்ம சம்வர்த்தினி. இந்த ஆலயத்தில் அம்பிகை தனது இடது காலை முன்னோக்கி வைத்த படி காட்சி தருவது மேலும் ஒரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இது தன்னை நோக்கி வரும் பக்தர்களின் துயரை விரைந்து சென்று காப்பாள் என்பதை நமக்கு இந்த அன்னை உணர்த்துகிறார். இவரை வணங்கும் போது திருமண தடைகள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதே போல் இந்த ஆலயத்தில் உள்ள நந்தீஸ்வரரும் விசேஷமானவர். ஏனெனில் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் நந்தீஸ்வரர் மூக்கனாகயிருடன் காட்சி தருவார். இந்த ஆலயத்தை ஆதி பிரதோஷ ஸ்தலம் என்றும் குறிப்பிடுகிறார்கள். அத்தனைய சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக இது கருதப்படுகிறது.

சோழ மன்னர் ஒருவரின் தேரின் சக்கரம் ஏறி பூமியில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதனைக் கண்டு அச்சமுற்ற மன்னன் பூமிக்கு அடியில் லிங்கம் இருப்பதை கண்டான். தன்னுடைய தேரின் சக்கரம் பட்டதால் ஏற்பட்ட வீபரீதத்தை சரி செய்ய அந்த இடத்தில் கோவில் எழுப்பினார்.

- Advertisement -

தேரின் சக்கரம் பட்டதால் இந்த ஆலயத்தில் சிவபெருமான் குறுகியவராக கற்றுத் தருகிறார். அதனால் இவருக்கு குருங்காலீஸ்வரர் என்றும், குசேலம் என்றால் குள்ளம் என்ற ஒரு பொருளும் உண்டு. ஆகையால் இவரை குசலபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுவதாக புராண கதை உண்டு.

மற்றொரு புறம் தந்தை ராமனை எதிர்த்து போரிட்டு லவகுசர்களை பித்ரு தோஷம் தாக்கியதாகவும், அதிலிருந்து அவர்கள் வெளியிட இந்த சிவபெருமானை வணங்க முற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிறுவர்களான லவகுசர்கள் சிவபெருமானை வணங்க சிரமமாக இருந்ததால் சிவபெருமான் தன்னுடைய திருமேனியை குறுக்கிவராய் காட்சி தந்ததால் இந்த ஸ்தலத்திற்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

பித்ரு தோஷம் நீங்க லவகுசர்கள் இத்தளத்தில் உள்ள சிவபெருமானை வணங்கியதால் இத்தலமானது பித்ரு தோஷம் நீங்க வழிபடக்கூடிய முக்கிய ஸ்தலமாக பின்னாளில் உருவாகி உள்ளது. பித்ரு தோஷத்தால் தாக்கப்பட்டவர்கள் இந்த கோவிலின் தீர்த்தத்தில் பூஜை புனஸ்காரங்கள் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கும்.

பெற்றோருக்கு நீண்ட நாட்களாக திதி கொடுக்காதவர்கள் இந்த ஆலயத்தில் வந்து கொடுக்கலாம் என்றும், இறந்தவர்களின் நாள், தேதி, நட்சத்திரம் எதுவும் தெரியவில்லை என்றாலும் இங்கு வந்து தர்ப்பணம் கொடுக்கும் போது அவர்களுக்கு புண்ணிய பலத்தை சேர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி இத்தளத்தில் உள்ள சரபேஸ்வரருக்கு ஞாயிறு அன்று ராகு கால நேரத்தில் செய்யப்படும் பூஜை மிகவும் விஷேசமானதாக உள்ளது. கடன் தீர பெரும்பாலானோர் இந்த ஆலயத்தின் சரபேஸ்வரரை வணங்கி வருகிறார்கள் என்பது ஆலயத்தில் மற்றொரு சிறப்பு அம்சம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க

இத்தகைய சிறப்பு அம்சங்களையும் பலன்களையும் கொண்ட இந்த ஆலயத்தை நாமும் சேர்ந்து வழிபட்டு சிவபெருமானின் அருளை முழுமையாக பெறலாம்.

- Advertisement -