இந்தப் பொருளை தலையை சுற்றி நெருப்பில் போட்டாலே போதும். பெண்களுக்கு இருக்கும் மன அழுத்தமும், முன்கோபமும் ஒரு நொடிப்பொழுதில் காணாமல் போகும்.

women

ஒரு வீட்டின் பெண் என்பவள், மகாலட்சுமி சொரூபமாக இருப்பவள். வீட்டில் இருக்கும் அனைவரையும் சரியான பாதையில் வழி நடத்திச் சென்று, குடும்பத்தை நல்வழி படுத்தும் பொறுப்பும் பெண்களிடத்தில் தான் உள்ளது. இப்படிப்பட்ட பெண்கள் பூமாதேவியை போல பொறுமையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால சூழ்நிலையில், வேலை பளு காரணமாக, மன அழுத்தம் காரணமாக, பெண்களுடைய வாழ்க்கை முறையே மாறிவிட்டது. எப்பவும் சில பெண்கள் கோபத்தோடு, மன அழுத்தத்தோடு இந்த பரபரப்பான உலகத்தில் தங்களுடைய பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அழுத்தமாக சொல்லப்போனால் சாப்பிடக் கூட நேரம் இல்லாமல்!

women8

சரி, இந்த மன அழுத்தத்தை போக்க என்ன செய்யலாம்? காலையில் கண் விழித்த உடன், சுத்தபத்தமாக விட்டு, சிறிது நேரம் இறைவழிபாடு செய்து, கண்களை மூடி 5 நிமிடம் தியானம் செய்யலாம். ஆனால் அந்த ஐந்து நிமிடத்திற்கு கூட நேரமில்லை என்பவர்களுக்காக, தினமும் தியானம் செய்ய முடியாதவர்களாகவும், ஒரு சுலபமான தாந்திரீக முறையைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகிறோம்.

உங்களுக்கு எப்போது மன அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ, அப்போது நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இல்லை, வாரத்திற்கு ஒரு முறை இந்த பரிகாரம் செய்வதை வழக்கமாக மாற்றிக்கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இந்த பரிகாரத்தை குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நீங்கள் எப்போது ஓய்வு எடுக்கிறார்கள் அந்த நேரத்தில் ஐந்து நிமிடம் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.

women2

இந்த பரிகாரத்திற்க்கு தேவை 5 கிராம்பு. 5 கிராம்பை எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, மகாலட்சுமியை நினைத்துக்கொண்டு, உங்கள் தலையை 27 முறை சுற்றி, அதை ஒரு கிண்ணத்தில் போட்டு, அந்த கிண்ணத்தில் ஒரு சூடத்தை (கற்பூரம்) போட்டு, ஏற்றி விட்டு விடுங்கள். சிறிது நேரத்தில் அந்த கிராம்பு எரியத் தொடங்கும். அந்தப் புகை உங்கள் வீடு முழுவதும் பரவும். நீங்கள் அந்த புகையை சுவாசித்து உடனேயே உங்கள் மனது லேசாகி விடும்.

- Advertisement -

கருகிய அந்த கிராம்பை கால் படாத இடத்தில் தூக்கிப் போட்டுவிடலாம். இல்லை என்றால், ஒரு கவரில் கொட்டி உங்களது குப்பைக் கூடையில் போட்டு விடுங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் அந்த கிராம்பு கிரஹித்துக்கொண்டு, உங்கள் கஷ்டத்தை சாம்பலாக்கி, உங்கள் மனதை லேசாக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

krambu

இது மாயமும் இல்லை. மந்திரமும் இல்லை. மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது கிராம்பு‌‌. உங்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தத்தை நீக்கி விடும் இந்த கிராம்பு பரிகாரம். அவ்வளவு தான். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பெண்கள், மகாலட்சுமியின் ஸ்வரூபமாகவே உங்களுடைய வீட்டில் வளம் வர வேண்டுமென்றால், ஒரு வாட்டி இதையும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறு ஒன்றும் கிடையாது. பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

இதையும் படிக்கலாமே
தங்கம் வாங்க முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டாம். குலதெய்வத்திற்கு இந்த பூஜையை செய்தால் தங்கம் தானாகவே வந்து உங்கள் வீட்டில் தங்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.