நம் குடும்பத்திற்கு வரக்கூடிய கெடுதலை முன்கூட்டியே அறிந்து கொண்டு, அதை தடுத்து நிறுத்தகூடிய சக்தி இந்த தீபத்திற்கு உண்டு. ‘குடும்ப தெய்வ’ தீபத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

deepam11

நம்முடைய குடும்பத்திற்கு எதிர்பாராமல் கூட கெடுதல் நடந்து விடக்கூடாது என்பது தான், இறைவனிடம் நாம் கேட்கும் முதல் வரம். ஆனால் விதியின் பயனால் சில குடும்பங்களில், சில எதிர்பாராத பிரச்சனைகளின் மூலம் பூகம்பமே வெடிக்கும். ஒருவருடைய குடும்பத்தில் சுப காரிய தடைகள் இருந்தால், எதிர்பாராமல் விபத்துக்களினால் இழப்புகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், வீட்டில் வீண் விரயங்கள், தீராத நோய் பிரச்சனைகள், குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது என்று தேவையற்ற பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தால், ஆன்மீக ரீதியாக அதை சரி செய்வதற்கு எந்த பரிகாரத்தை சுலபமான வழியில் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

deepam

இன்றளவில் பொதுவாகவே குலதெய்வ வழிபாட்டின் முன்னுரிமையை நாம் எல்லோரும் அறிந்திருக்கின்றோம். ஆனால், குலதெய்வம் அல்லாது, ஒரு குடும்பத்திற்கு என்று, குடும்ப தெய்வம், காவல் தெய்வம், கன்னி தெய்வம், ஊர் எல்லை தெய்வம் என்று எத்தனையோ தெய்வங்கள் உள்ளன. அந்த வரிசையில் நம் வீட்டு குடும்ப தெய்வங்களை எப்படி நினைத்து வழிபட வேண்டும் என்றுதான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

குடும்ப தெய்வங்களை ஒருவர் வீட்டில் தினந்தோறும் நினைத்து வழிபாடு செய்தால், அந்த வீட்டில் மறந்தும்கூட கெடுதல் நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது. குலதெய்வம் என்பது தெரியும். அது என்ன குடும்ப தெய்வம்? நம்முடைய முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள், நம்முடைய குடும்பத்தின் தெய்வங்கள் தான்.

deepam

இவர்களது ஆத்மா நம்மை சுற்றி பாதுகாப்பு வட்டமாக அமையும். எதிர்பாராமல் வரும் தீயதை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி இந்த குடும்ப தெய்வங்களுக்கு உண்டு. அந்த காலத்திலெல்லாம் ஒரு மரத்தை அவர்களுடைய முன்னோர்களாக பாவித்து, அந்த மரத்திற்கு கீழே ஒரு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து வருவார்கள். இறந்த முன்னோர்களை நினைத்து!

- Advertisement -

நாம் கூட சில இடங்களில் பார்த்திருப்போம். இந்த மரம் எங்களுடைய கொள்ளுத் தாத்தா! இந்த மரம் எங்களுடைய கொள்ளுப் பாட்டி! என்று வீட்டின் கொல்லைப்புறத்தில் இருக்கும் வேப்பமரம், புளியமரம் இப்படியாக ஏதாவது ஒரு மரத்தில் அவர்களுடைய முன்னோர்கள் வசிப்பதாக சொல்லி கேள்விப்பட்டு இருப்போம் அல்லவா?

maram

அந்த மரத்திற்கு அடியில் செங்கலை முக்கோண வடிவத்தில் வைத்து, ஒரு மண் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றி, வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ, சில வீடுகளில் தினம்தோறும் கூட வழிபாடு செய்து வருவார்கள். காலப்போக்கில் அதெல்லாம் மறைந்தே போய்விட்டது. இன்றைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களை நினைத்து, உங்கள் குடும்ப தெய்வங்களை நினைத்து மரத்தினடியில் தீபமேற்றும் சூழ்நிலை எல்லாம் இப்போது இல்லை.

vilakku1

முக்கோண வடிவத்தில் இப்போதெல்லாம் தீபம் ஒன்று கடைகளில் விற்கிறது. அகல் விளக்கு விற்கும் கடைகளில் இந்த தீபம் சுலபமாகவே கிடைக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள். இது போன்ற தீபத்தை வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறை அல்லாத, வேறு எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இந்த தீபத்தை தினம்தோறும் நல்லெண்ணெய் ஊற்றி எரிய வையுங்கள். இந்த தீபத்தை மாட விளக்கு என்று சொல்லுவார்கள்.

வீட்டின் புழக்கடையில், பால்கனி, முன் பக்கம் இடவசதி இருந்தால் அங்கும் இந்த தீபத்தை ஏற்றி வைக்கலாம். வரவேற்பறையிலும் ஏற்றலாம். இப்படி எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் இந்த தீபத்தை மாலை 6 மணிக்கு உங்களுடைய குடும்ப தெய்வங்களான முன்னோர்களை நினைத்து ஏற்றி வைத்து வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுடைய வீட்டில் கெடுதல்கள் நடக்க வாய்ப்பு இல்லை. நல்லதே நடக்கும், என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.