குடும்பத்தில் சண்டை சச்சரவு குறைந்து, ஒற்றுமை அதிகரிக்க வியாழக்கிழமை அன்று இந்த கோவிலுக்கு போங்க.

krishna
- Advertisement -

சில வீடுகளில் கணவன் மனைவி சண்டை இருக்கும். சில வீடுகளில் அப்பா மகன், அம்மா மகள், மாமியார் மருமகள், நாத்தனார், இப்படி என்று சொல்லி உறவுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். சண்டை வருவதற்கு உறவுகளோ அல்லது உறவுகளுக்குள் வரக்கூடிய பிரச்சனைகளோ காரணம் இல்லை. நம்முடைய மனசுதான் காரணம்.

சண்டை போட வேண்டும் என்று நினைத்தால் சண்டை போடலாம். சண்டை வேண்டாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒற்றுமையாக இருக்கலாம். அவ்வளவுதான். இதை படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது. ஆனால் பின்பற்றுவது ரொம்ப ரொம்ப கஷ்டம். எல்லா விஷயத்திலும் பக்குவப்பட்டவன் தான் வாழ்க்கையை சுலபமாக எடுத்துக் கொள்வான்.

- Advertisement -

இன்று நம்முடைய வாழ்க்கையில் பக்குவம் எல்லாம் போய்விட்டது. யார் பெரியவர்கள் என்ற போட்டியில், சண்டையும் பிரிவும் மட்டும்தான் நிலையாக நிற்கிறது. வீட்டில் இருக்கும் உறவுகள் பலம் பெற, வீட்டில் இருக்கும் உறவுகளுக்குள் சண்டை வராமல் இருக்க என்ன செய்யலாம். இதோ உங்களுக்காக ஒரு எளிய பரிகாரம். குடும்பத்தில் அக்கறை உள்ளவர்கள் பதிவை முழுமையாக படித்து பரிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் பரிகாரம்:

இந்த பரிகாரத்துக்கு உங்களுக்கு ஒரு கிருஷ்ணர் கோவில் தேவை. கண்ணன் கோவிலை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கிருஷ்ண பகவான் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். சதுர வடிவில் ஒரு மஞ்சள் துணி எடுத்துக் கொள்ளவும். பயன்படுத்தாத புது துணையாக இருக்கட்டும்.

- Advertisement -

அதில் துளசி இலைகள் 3, மருதாணி இலைகள் 3, மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழம், (எலுமிச்சம் பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்,) எந்த பழவகையை வேண்டும் என்றாலும் வைக்கலாம். அது நம்முடைய சௌகரியம்தான். ஒன்று மூன்று ஐந்து ஒற்றைப்படையில் பழத்தை வைத்து முடிச்சு போட்டு இதைக் கொண்டு போய், கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணரது பாதத்தில் வைத்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரின் பெயரையும் சொல்லி அர்ச்சனை செய்து வீட்டிற்கு வர வேண்டும்.

இந்த முடிச்சில் இருக்கும் இலையை பூஜை அறையில் வைத்து விடுங்கள். வாடிய பின் எடுத்து கால் படாத இடத்தில் போடலாம். அந்த முடிச்சுக்குள் வைத்த பழத்தை குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 வியாழக்கிழமை செய்து வந்தால் நீண்ட நாள் இருந்து வந்த குடும்ப பிரச்சனைகள் சரியாகும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும்.

- Advertisement -

ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் சண்டை போட்டுக் கொள்வார்கள் அல்லவா. மாமியார் மருமகளாக இருக்கட்டும். கணவன் மனைவியாக இருக்கட்டும், அல்லது பிள்ளைகளாக இருக்கட்டும். ஒருவர் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை இன்னொருவர் புரிந்து கொண்டு சுமூகமான உறவை மேற்கொள்வார்கள். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: சுவர்ண தோஷம் நீக்கும் சிவபெருமானின் அபிஷேக பொருள்

பின்குறிப்பு: நீங்கள் வைக்கும் வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருக்க வேண்டும். இருதரப்பினருக்குள் பிரச்சனை என்றால், உண்மையிலேயே உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்னும் பட்சத்தில் நீங்கள் வைக்கும் இந்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். போலியான நட்பு, போலியான உறவு, உண்மை இல்லாத பாசம் இருப்பவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்யும் போது பெருசாக எந்த ஒரு பலனும் இருக்காது.

- Advertisement -