கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டைகள் நீங்க விளக்கு பரிகாரம்

amman1
- Advertisement -

சில வீடுகளில் எல்லாம் விடியும் பொழுது, சண்டையோடு தான் விடியும். இரவு தூங்கச் செல்லும் போதும் சண்டையோடு தான் தூங்கச் செல்வார்கள். இப்படிப்பட்ட குடும்பங்கள் எல்லாம் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரமே இருக்காது. கணவன் மனைவிக்குள் சண்டை, அப்பா மகன் இருவருக்கும் சண்டை, அம்மா மகன், அம்மா மகள் இருவருக்கும் சண்டை, உடன் பிறந்தவர்களுக்குள் சண்டை என்று வீடு எப்போதும் கலவரமாக தான் இருக்கும்.

அதாவது ஒரு பொழுதுபோக்குக்கு சின்ன சண்டை போட்டுக்கொண்டு பிறகு ஒன்று சேர்வதில் தவறு கிடையாது. ஆனால் ரொம்பவும் வன்மத்தோடு சண்டை போட்டு கொள்வது தவறு. அப்படிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் உங்களுடைய வீட்டில் இருந்தால் இந்த வழிபாடு உங்களுக்கு தான். வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி மனதார குல தெய்வத்தை வேண்டி இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் நிச்சயம் குடும்ப சண்டைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கணவன் மனைவிக்குள் அன்னியூன்யம் இல்லை, எப்போதும் சண்டை வருகிறது எனும் போது இந்த பரிகாரத்தை உடனே செய்யுங்கள்.

- Advertisement -

குடும்ப ஒற்றுமைக்கு விளக்கு பரிகாரம்

வெள்ளிக்கிழமை வீட்டு வாசலை கூட்டி கோலம் போட்டு விட வேண்டும். உங்கள் நிலை வாசலில் மஞ்சள் தூள் கொண்டு ஒரு சதுரம் வரைந்து கொள்ளுங்கள். அந்த சதுர வடிவத்திற்கு நடுவே கொஞ்சம் வேப்ப இலைகளை உருவி போட்டு, அந்த வேப்ப இலையின் மேல் ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு குலதெய்வத்தை நினைத்து இந்த விளக்கை ஏற்றி வையுங்கள்.

நிலை வாசல் படி அருகே இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார நினைத்து எங்களுடைய வீட்டில் வரும் சண்டை சச்சரவுகள் குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு இந்த விளக்கை ஏற்றி வேண்டுதல் வைத்தால் உங்கள் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். வீட்டில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் குறையும். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டைகள் நீங்கி அந்நியோனியம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குறைந்தது 5 வெள்ளிக்கிழமை இந்த விளக்கை ஏற்றவும். நிச்சயமாக குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் தெரியும். அதேபோல உங்களுடைய வீட்டில் கணவன் மனைவி ஒன்றாக இருக்கக்கூடிய சுவாமியின் திருவுருவப் படங்களை வைக்கலாம். சிவனும் பார்வதியும் போல நாங்கள் வாழ வேண்டும் என்று தினமும் மனதில் நினைக்கணும். ராமர் சீதை போல ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து காதலோடு வாழ வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழக்கூடிய தம்பதிகளோடு உங்களுடைய நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதை பார்க்கும்போது, நம்முடைய மனதிலும் அதேபோல மனப்பான்மை தோன்றும். நம்முடைய மனைவிக்கு நாம் விட்டுத் தர வேண்டும், நம்முடைய கணவருக்கு நாம் விட்டு தர வேண்டும் என்ற எண்ணம் உங்களுடைய மனதில் ஆழப் பதிந்து விட்டாலே போதும், உங்களுடைய குடும்பத்தில் விரிசல் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: ஆயுள் முழுவதும் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க சிவ வழிபாடு

குடும்பத்தில் நிம்மதி கெட்டுப் போகாது. இதை சொல்லுவதற்கு சுலபமாக இருக்கலாம் பின்பற்றுவதில் கஷ்டம் இருக்கும் ஆனால் பின்பற்ற தொடங்கி விட்டால் உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக மாறிவிடும். கணவன் மனைவி சண்டை போடக்கூடிய குடும்பத்தை திரும்பி கூட பார்க்க கூடாது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -