தீராத துயரெல்லாம் தீர்த்து வைக்கும் குலதெய்வம் எப்பொழுதும் உங்களுடனே இருக்க வருடம் ஒரு முறை இதை மட்டும் தவறாமல் செய்தால் போதும்.

- Advertisement -

ஒரு குழந்தையை எத்தனை பேர் பார்த்துக் கொண்டாலும் தாய் பார்த்துக் கொள்வது போல் ஆகாது என்று சொல்லுவார்கள். அதே போல தான் குலதெய்வ வழிபாடும். நாம் என்ன தான் ஆயிரம் தெய்வங்களை வணங்கினாலும் நமக்கு துன்பம் என வரும் போது நம் குலதெய்வம் தான் முதலில் வந்து துணை நிற்கும். மற்ற தெய்வங்கள் இடம் கேட்டு கிடைக்காத வரங்கள் கூட குலதெய்வத்திடம் நாம் மனம் உருகி நின்றாலே போதும் தானாகவே நடக்கும். அத்தகைய சக்தி வாய்ந்த குலதெய்வத்தை நாம் எப்போதும் நம் வீட்டில் தங்க வைத்துக் கொள்ள இந்த ஒரு செயலை மட்டும் செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குலதெய்வ வழிபாடு என்பது நம்முடன் மட்டும் முடிந்து விடக் கூடிய விஷயம் கிடையாது. நம் முன்னோர்கள் வழிபட்டு நாம் வழிபட்டு நம்முடைய அடுத்த சந்ததியினரும் வழிபட வேண்டிய தெய்வம். இந்த தெய்வம் எப்போதும் நம்முடன் இருந்தால் எத்தகைய துன்பம் வந்தாலும் அதிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம். இந்த வழிபாட்டை குலதெய்வம் இதுவென்று தெரிந்தவர்களும் செய்யலாம், தெரியாதவர்களும் செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வெள்ளி, செவ்வாய், பௌர்ணமி போன்ற தினங்களில் தொடங்கலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு முதலில் விபூதியை ஒரு தட்டில் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஏலக்காயை தூள் செய்து அந்த பவுடரை அதில் சேர்த்து விடுங்கள். அதன் பிறகு அதில் கஸ்தூரி மஞ்சள் கொஞ்சம் அது சேர்த்த பிறகு மரிக்கொழுந்தையும் கொஞ்சமாக சேர்த்து இதை ஒரு கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

மஞ்சளை ஒரு கைப்பிடி எடுத்து அதில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்த பிறகு இந்த மஞ்சளை ஒரு தட்டில் வைத்த கொள்ளுங்கள். அந்த மஞ்சளை சுற்றி நீங்கள் தயார் செய்து வைத்த விபூதி உருண்டைகளை மூன்றாக பிரித்து மஞ்சளை சுற்றி வைத்து விடுங்கள். குலதெய்வம் எதுவென்று தெரிந்து வழிபாடு செய்பவர்கள் என்ன நெய்வேத்தியம், மலர்கள் வைத்து வணங்குவீர்களோ வணங்கலாம்.

- Advertisement -

குலதெய்வமே தெரியாதவர்கள் நல்ல வாசனை மிக்க மலர்களை வைத்து ஒரு டம்ளர் பால் வைத்து வெற்றிலை, பாக்கு, பழத்துடன் தீபம் ஏற்றி வணங்கி எங்களுடன் நீங்கள் எப்போதும் இருந்து எங்களையும் எங்கள் குலத்தையும் காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த விபூதி, மஞ்சள் அனைத்தும் பூஜை அறையில் இருக்கட்டும். இதை தினமும் உங்கள் நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் இந்த விபூதி மஞ்சள் கலந்த தண்ணீரை உங்கள் வீட்டிலும் தெளித்து விடுங்கள். வருடம் ஒரு முறை இந்த வழிபாட்டை நம் வீட்டு பூஜை அறையில் செய்தாலே போதும். குலதெய்வம் நம்முடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நீங்கள் இப்படிப்பட்டவராக தவறியும் இருந்து விட்டால் உங்களுக்கு கண்டிப்பாக இதெல்லாம் நடந்தே தீரும் தெரியுமா? அப்படிப்பட்டவரா நீங்கள்?

நம்பிக்கையுடன் கல்லை வணங்கினாலும் கல்லிலும் தெய்வம் இருக்கும் என்பது நம் முன்னோர்களின் வாக்கு. அதனால் தான் செங்கலில் விபூதி, மஞ்சள், குங்குமம் வைத்து அதையும் குலதெய்வமாக வணங்கும் பழக்கம் இன்றும் நம் வழக்கத்தில் உள்ளது. இதுவும் அது போன்றதொரு வழிபாடு தான் இந்த மஞ்சள், விபூதி வழிபாடும். நீங்கள் பிடித்து வைக்கும் இந்த மஞ்சள் விபூதியை குலதெய்வமாக பாவித்து வணங்கும் போது, குலதெய்வம் நேரில் குடும்பத்தை காக்கும் என்பது தான் இந்த வழிபாட்டின் பொருள்.

- Advertisement -