நீங்கள் இப்படிப்பட்டவராக தவறியும் இருந்து விட்டால் உங்களுக்கு கண்டிப்பாக இதெல்லாம் நடந்தே தீரும் தெரியுமா? அப்படிப்பட்டவரா நீங்கள்?

cash-sadman
- Advertisement -

ஒரு மனிதன் தான் சம்பாதித்த பணத்தை என்ன செய்கிறான்? என்பதை பொறுத்தே அவர்களுடைய வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுகிறது என்று சாஸ்திரங்கள் ஆணித்தரமாக கூறுகிறது. அந்த வகையில் நாம் இப்படிப்பட்டவராக தவறியும் இருந்து விட்டால், நமக்கு இதெல்லாம் நடந்தே தீருமாம்! அப்படி என்ன நடக்கும்? நாம் எப்படி இருக்க கூடாது? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நாம் உழைத்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமானது நமக்கு சொந்தமே கிடையாது. நாம் தானே சம்பாதிக்கிறோம்? அப்படி என்றால் யாருக்கு சொந்தம்? என்று நீங்கள் கேட்கலாம். நாம் சம்பாதிக்கும் பணமானது, செல்வமானது 4 பேருக்கு சொந்தம் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. முதலாவதாக நம்மை ஏமாற்றுபவனுக்கு சொந்தமானது நம்முடைய உழைப்பு என்றும், இரண்டாவதாக நம்மிடம் கொள்ளையடிப்பவனுக்கு சொந்தம் என்றும், மூன்றாவதாக நம்மிடம் திருடி தின்பவனுக்கு என்றும் குறிப்பிடுகிறது. கடைசியாக நான்காவதாக நாம் உழைத்த பணமானது தர்மத்திற்கு சொந்தம் என்றும் கூறுகிறது.

- Advertisement -

நாம் கஷ்டப்பட்டு உழைத்து, அரும்பாடு பட்டு சம்பாதித்த பணம் அல்லது செல்வங்கள் நிலைக்க நம்மை யாரும் ஏமாற்றாமல் இருக்க வேண்டும், கொள்ளையடிக்காமல் இருக்க வேண்டும், நம்மிடமிருந்து திருடி சாப்பிடாமல் இருக்க வேண்டும், சிறு சிறு திருட்டுகளும் கூட நம்மை அறியாமல் நம்மை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் சம்பாதித்த பணத்தை வட்டியாகவோ அல்லது மற்றவர்களிடம் ஏமாந்து போயோ கொடுத்து விட்டு தான் வருகிறோம். இப்படி எல்லாம் நமக்கு நடப்பதற்கு காரணம் என்ன?

உழைத்த மொத்த பணமும் நமக்கே சொந்தம் என்று சுயநலமாக இருப்பது தான் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்திலிருந்து 10% தான, தர்மங்களை செய்திருக்க வேண்டும் என்கிற நியதி உண்டு அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திலிருந்து சிறு தொகையாவது நான்காவதாக இருக்கக்கூடிய அந்த தர்மத்திற்கு செலவு செய்ய வேண்டும்.

- Advertisement -

அன்னதானமாகவோ, இல்லாத மற்றும் இயலாதவர்களுக்கு ஏதாவது ஒரு வகையிலோ நீங்கள் தானங்கள், தர்மங்கள் செய்து வந்தால் மற்ற மூன்று விஷயங்கள் உங்களுக்கு நடக்காமலேயே இருக்கும். சம்பாதித்த பணம் வீண் விரயம் ஆகாமலும் இருக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து இந்த விஷயத்தை வாங்க வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் அதற்கு மாற்றாக வேறு ஏதாவது ஒரு காரியத்திற்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு திடீரென மருத்துவமனையில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து விடுவீர்கள். உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறாமல் போகும்.

இதையும் படிக்கலாமே:
தரித்திரம் தரும் இந்த 10 பொருட்கள் உங்க வீட்டில் இருந்தால் உடனே தூக்கி போட்டு விடுங்கள்! இனி பீடை ஒழிந்து செல்வம் பெருகும்.

உங்களுக்கு முக்கியமான நன்கு வேலை செய்து கொண்டிருந்த தொழில்நுட்பக் கருவிகள் உடைந்து போகலாம். அதை மீண்டும் வாங்க வேண்டும் என்கிற சூழ்நிலை உருவாகும், இதனால் உங்களுடைய கனவுகள் நிறைவேறாமல் போகும். இப்படி ஏதோ ஒரு விஷயத்தில், நீங்கள் உங்களுடைய உழைப்பை இழக்க வேண்டி இருக்கும். இதனால்தான் சம்பாதித்த பணத்திலிருந்து ஒரு சிறு தொகையை அன்னதானம் செய்வது, தானம் செய்வது போன்றவற்றை நீங்கள் கடைப்பிடித்து வந்தால் உங்களுடைய உழைப்பு வீணாகாது என்கிறது சாஸ்திரங்கள்.

- Advertisement -