நம் குடும்பத்திற்கு வரப்போகும் கெட்டதை தடுத்து நிறுத்த, குலதெய்வத்திற்கு எந்த பொருளை வாங்கித் தந்து அபிஷேகம் செய்ய வேண்டும்?

abishegam1
- Advertisement -

நம்முடைய குல தெய்வத்தின் அருமை பெருமைகளையும், வழிபாட்டையும் பற்றி மீண்டும் மீண்டும், சொல்வதற்கு ஒரே காரணம், நம் குலத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு குலதெய்வம் கையில்தான் உள்ளது. குலதெய்வத்தை மறக்காமல் வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்துக் கொண்டே இருக்கும். வரக்கூடிய ஆபத்திலிருந்து நம்முடைய குடும்பத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கும் குலதெய்வத்தை, நாம் மறப்பது அவ்வளவு சரியான முறை அல்ல. நம்முடைய குடும்பத்திற்கு ஏற்படப்போகும் எதிர்பாராத கஷ்டங்கள், எதிர்பாராத விபத்துக்கள் எதிர்பாராத துர்மரணங்கள் இவைகளை தடுக்கக்கூடிய சக்தி குலதெய்வத்திற்கு தான் முதலிடம்.

kuladheivam 1

நமக்கு இருக்கக்கூடிய பெரிய கண்டத்திலிருந்து, நம்மை காப்பாற்றவும், வரப்போகின்ற கெடுபலன்கள் வராமல் தடுக்கவும், குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்? எந்த பொருளை அபிஷேகத்திற்காக வாங்கிக் கொடுத்து குலதெய்வத்தை மகிழ்விக்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சரி, குலதெய்வத்திற்கு வாங்கி கொடுக்க வேண்டிய அந்த அபிஷேகப் பொருட்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, நம் குலத்திற்கு வரப்போகும் கெடுதலை நாம் எப்படி முன் கூட்டியே அறிவது? சிலருக்கு ஜாதகம் பார்க்கும் பழக்கம் இருக்கும். அந்த ஜாதகர் கட்டத்தை பார்த்து, சிறந்த ஜோதிடர்கள் முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். இவர்களுக்கும் இந்த வயதில், இந்த கண்டம் உள்ளது என்று.

abishegam

அந்தக் கண்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் சொல்லி இருப்பார்கள். ஆனால் அந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக, நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, குலதெய்வ வழிபாடு, ஏனென்றால், ‘அந்த ஜோதிடரின் மூலம் உங்களுக்கு கண்டம் இருக்கிறது என்பதை அறிவுறுத்தியதே அந்த குலதெய்வம் தான்’.

- Advertisement -

அடுத்ததாக, ஒருவருடைய வீட்டில் எதிர்பாராமல் வௌவால்கள் படை எடுக்க ஆரம்பிக்கும். சிலசமயங்களில் வௌவால்கள், வீட்டை சுற்றி வரும். சில சமயங்களில் வீட்டு தோட்டத்தில் வந்து குடி கொள்ளும். வீட்டுத் தோட்டத்தில் கூடு கட்டும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் உங்கள் வீட்டில் நடந்தால், அது உங்களுக்கு அபசகுனம் என்பதை குறிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

kaali-abishegam1

இதையெல்லாம் தாண்டி விதி. விதிப்படி நடப்பதை, சில சிலசமயங்களில் எப்போதுமே யாராலும் தடுக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், சில சமயம் அந்த விதியின் கையில் இருந்தும், நம் குடும்ப உறுப்பினர்களை மீட்டுத் தரக் கூடிய சக்தி குலதெய்வத்தின் கையில் உள்ளது என்றும் சொல்லுவார்கள்.

- Advertisement -

விதியையும் எதிர்த்துக்கொண்டு நம் குலத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கும், குலதெய்வத்திற்க்கு இளநீர் அபிஷேகமும், நல்லெண்ணெய் காப்போம் தொடர்ந்து செய்துவருவது நம்முடைய கெடுபலன்களை குறிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் குலதெய்வ கோவிலுக்கு செல்கிறீர்களோ அப்போதெல்லாம் அதிகாலையில் குலதெய்வத்திற்கு, உங்களுடைய செலவில் அபிஷேகம் செய்து வைப்பது மிகவும் நல்லது. குறிப்பாக 9 இளநீர் வாங்கிக் கொடுக்க வேண்டும். எவ்வளவு நல்லெண்ணெய் வாங்கி கொடுக்க முடியுமோ அவ்வளவு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுங்கள். குலதெய்வத்திற்கு நீங்கள் வாங்கிக் கொடுத்த நல்லெண்ணையில் காப்பு அணிவிப்பது என்பது, மிக மிக நல்லது என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

abishegam

கண்ணுக்குத் தெரியாத ஏவல், பில்லி, சூனியம் போன்ற பிரச்சனைகளின் மூலம் உயிர் சேதம் ஏற்படுவதாக இருந்தாலும் சரி, அல்லது உங்களின் ஜாதக கட்டத்தில் உள்ள கண்டதினால் உயிர் சேதம் ஏற்படுவதாக இருந்தாலும் சரி, அல்லது உங்களது விதிப் பயனால் ஏதாவது எதிர்பாராத விபத்துக்கள் நேரிட இருப்பதாக இருந்தாலும் சரி, அந்த கெடுபலனை தடுத்து நிறுத்தி, சரி செய்யக் கூடிய சக்தி இந்த குலதெய்வத்திற்கு மட்டும்தான் உள்ளது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சீதாப்பழ மரத்திற்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -