உங்கள் குடும்பத்தை காக்கும் குல தெய்வத்தை மறந்தும் கூட இவ்வாறு சொல்லி விடாதீர்கள். தீராத துன்பங்கள் உங்கள் குடும்பத்தை சூழ்ந்து விடும்

kuladeivam
- Advertisement -

குல தெய்வம் என்பது நம்முடைய குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் தெய்வமாகும். பெரும்பாலும் குலதெய்வங்கள் சிறிய தெய்வங்களாகவே இருக்கும். ஆனால் இவர்களுக்கு இருக்கும் சக்தி அபரிமிதமானதாக இருக்கும். எந்த ஒரு நல்ல விஷயங்களை தொடங்குவதற்கு முன்னரும் முதலில் நாம் குலதெய்வத்தை வணங்கிய பின்னரே செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் செய்யவிருக்கும் காரியத்திற்கு எந்தவித தடைகள் வந்தாலும் அவற்றை சரிசெய்து அந்த விஷயம் நல்ல படியாக முடிய குலதெய்வம் அருள் புரியும். இவ்வாறான குலதெய்வத்தை மறந்தும் கூட நாம் வாய் தவறி திட்டிவிடக்கூடாது. குலதெய்வத்தை திட்டி விட்டால் என்ன பிரச்சனை உண்டாகும் என்பதையும், அதற்கான பரிகாரம் என்ன என்பதனை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

kula-dheivam

நமது வீடுகளில் உள்ள பூஜை அறையில் எப்பொழுதும் குல தெய்வத்தின் படத்தை முதலில் வைத்திருக்க வேண்டும். நமக்கு பிடித்த தெய்வங்களின் படங்கள் பல இருந்தாலும் அதில் முக்கியமாக இடம் பெற வேண்டியது குல தெய்வ படமே. தினமும் நாம் குல தெய்வத்திற்கு பூஜை செய்து வணங்கி வந்தால் நமது குடும்பத்திற்கும் நமது தலைமுறைக்கும் சிறந்த பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

குடும்பத்தில் எந்த ஒரு நல்ல விஷயங்கள் செய்வதாக இருந்தாலும் உதாரணமாக மொட்டை அடிப்பது, காது குத்துவது, குழந்தைக்கு பெயர் சூட்டுவது, திருமணம் இதுபோன்ற எந்த விஷேஷங்களுக்கு முதலில் நமது குலதெய்வத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே துவங்க வேண்டும். ஆனால் சிலர் குல தெய்வத்தை வணங்குவதையே மறந்து விட்டு பல காரியங்களை செய்கின்றனர்.

mottai

நமக்கு இஷ்டமான தெய்வங்கள் பலவற்றை வணங்கி வந்தாலும், குலதெய்வத்தை மறந்து குலதெய்வ பூஜை செய்யாமல் இருப்பதனால் குலதெய்வ தோஷம் உண்டாகும். நாம் எவ்வளவு பணம், புகழ் சம்பாதித்தாலும் மனநிம்மதியும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் ஆரோக்கியம் இல்லாமல் போகும்.

- Advertisement -

அதேபோல் வீட்டில் எந்த ஒரு பிரச்சனை, குழப்பம், வறுமை, உடல்நலக்குறைவு இவ்வாறு எந்த ஒரு தீமையான செயல்கள் நடந்தாலும் அதற்காக குலதெய்வத்தினை திட்டி தவறாக சிறு வார்த்தை பேசி விட்டோம் என்றாலும், குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம். குலதெய்வம் நம் மீது கோபமாக இருந்தால் நமது தலைமுறைக்கு ஏழு ஏழு ஜென்மும் தீராத சாபம் உண்டாகும்

mamiyar-marumagal-sandai.

குலதெய்வ பரிகாரம்:
அமாவாசை தோறும் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஒரு எலுமிச்சை பழத்தை சூலாயுதத்தில் பதித்து, குலதெய்வத்திடம் நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எங்கள் குடும்பத்தை காத்தருள வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ள வேண்டும்.

amman

குடும்பத்தில் இவ்வளவு கஷ்டங்கள் வருகின்றது. ‘அந்த குல தெய்வத்திற்கு கண் இருக்கின்றதா இல்லையா’? என்று குலதெய்வத்தை கோபத்தோடு எக்காரணத்தைக் கொண்டும் திட்டக்கூடாது. குல தெய்வம் நமக்கு கஷ்டம் கொடுக்கிறது என்றால், அது நமக்காக வைக்கப்படும் சோதனைகள். சோதனையை என்றால்தான் சாதனை படைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

thirisoolam

முடிந்தவரை குல தெய்வ வழிபாடுகளை தொடர்ந்து செய்துவர வேண்டும். நிச்சயம் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வத்தை வணங்கி வந்தால் உங்கள் குலதெய்வம் மனமகிழ்ந்து நிச்சயம் உங்களை மன்னித்து உங்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளித் தருவார்கள்.

- Advertisement -