குலதெய்வ அருளை பரிபூரணமாக பெற வழிபாடு

kuladeiva arul
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் வழிபாடு என்பது இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக குலதெய்வ வழிபாடு என்பதை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். இஷ்ட தெய்வத்தை வழிபடுவதற்கு முன்பாக குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால்தான் அனைத்து விதமான தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்றும், அதே சமயம் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் பரிகாரங்களும் நமக்கு பலனை தரும் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறவும் நம் இல்லம் தேடி குலதெய்வத்தை வர வைக்கவும் செய்யக்கூடிய எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக குலதெய்வம் என்பது நம்முடைய குலத்தை காக்கும் தெய்வம் என்று பலருக்கும் தெரியும். குலதெய்வ வழிபாட்டை முறையாக எவர் ஒருவர் மேற்கொள்கிறாரோ அவருடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. மேலும் குலதெய்வ வழிபாட்டை வருடத்திற்கு ஒரு முறையாவது அண்ணன், தம்பி, அப்பா, அம்மா என்று அனைத்து உறவுகளும் சேர்ந்து குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற வழிபாடு மேற்கொள்ள அதில் இருக்கக்கூடிய பலன் என்பது மிகவும் பெரியதாகவே இருக்கும். சரி குலதெய்வ வழிபாட்டின் அருளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

ஆண் தெய்வத்தை குலதெய்வமாக கொண்டவர்கள் அமாவாசை தினங்களில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். இதே போல் பெண் தெய்வத்தை குலதெய்வமாக கொண்டவர்கள் பௌர்ணமி நாளில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செல்லும் பொழுது நம்மால் இயன்ற அளவு குலதெய்வ அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி நம் கைப்பட தர வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பன்னீர் பாட்டிலாவது வாங்கி நம் கையால் கொடுக்க வேண்டும்.

இப்படி செய்த பிறகு நல்ல தேங்காயாக பார்த்து ஐந்து தேங்காயை வாங்கி அந்த தேங்காயை இரண்டாக உடைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து நமக்கு பத்து மூடிகள் கிடைக்கும். இதில் ஒன்பது தேங்காய் மூடியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தேங்காய் மூடியிலும் மஞ்சளை தடவுங்கள். பிறகு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் மூடியை ஒரு சிறிய அகல் விளக்கை வைத்து அதன் மீது வைக்க வேண்டும்.

- Advertisement -

அதாவது ஒன்பது அகல் விளக்குகளை வரிசையாக வைத்து அந்த ஒன்பது அகல் விளக்குகள் மேலேயும் நாம் மஞ்சள் சந்தனம் குங்குமம் வைத்த தேங்காய் மூடிகளை வைக்க வேண்டும். அடுத்ததாக இதில் சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். ஒன்பது தேங்காய் மூடிகளிலும் ஊற்றிய பிறகு இரண்டு பஞ்சுத்திரிகளை ஒன்றாக திரித்து போட வேண்டும். பிறகு இந்த தேங்காய்க்கு முன்பாக வெற்றிலை பாக்கு வாழைப்பழம் ஒரு எலுமிச்சம் பழம் இதை வைத்து கொள்ள வேண்டும்.

தேங்காய் தீபத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார நினைத்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஒன்பது தீபங்களையும் ஏற்றி முடித்த பிறகு “என் குலதெய்வமே வெற்றிலை பாக்கு வைத்து உன்னை அழைக்கிறேன் என்னுடன் வந்து என் வேண்டுதலை நிறைவேற்று” என்ற கோரிக்கையை மனதார வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அதில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து வீட்டிற்கு வாங்கி வந்து நம்முடைய வீட்டின் பூஜையறிலோ அல்லது நிலை வாசலிலோ வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நாளை ஏகாதசி திதி வழிபாடு

இந்த முறையில் நாம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நம்முடைய வேண்டுதலும் நிறைவேறும். அதே சமயம் குலதெய்வமும் நம் வீட்டிற்கு வந்து அருள் புரியும்.

- Advertisement -