குலதெய்வம் என்பது, நம் குலத்தைக் காக்கும் தெய்வம். தலைமுறை தலைமுறையாக வணங்கி வரும் தெய்வம். இது நம் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தரக்கூடியது. குலதெய்வம் தெரியாதவர்கள் அதைத் தெரிந்து கொள்ள கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும். வீட்டு பெரியவர்கள் அல்லது உங்கள் சொந்த ஊரில் இருக்கக்கூடிய முக்கியஸ்தர்கள், வயது முதிர்ந்தவர்கள் மூலமாக கேட்டு அறிவது முதல் வழி ஆகும். என்ன செய்தும், குலதெய்வம் அறிய முடியாதவர்கள், இந்த வழிபாட்டை மேற்கொள்வது நற்பலன்களை அளிக்கும். குலதெய்வம் அறிய செய்ய வேண்டிய பரிகாரம்? பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
குலதெய்வம் அறிய முடியாதவர்கள், பௌர்ணமி நாட்களில் குலதெய்வ அருளை வேண்டி, இந்த பரிகாரத்தை செய்யலாம். பௌர்ணமி தினத்தன்று குலதெய்வத்தை வழிபடுவது அதிக பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. குலதெய்வக் கோவில் தெரிந்தவர்கள், அன்று சென்று அபிஷேக, ஆராதனைகள் செய்து, கோவிலுக்கு முடிந்த அளவுக்கு உதவலாம். இதனால் வாழ்க்கையில் இருக்கும் பல தடைகள் அகன்று, உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான பாதைகள் திறக்கும் என்பது நம்பிக்கை.
குலதெய்வம் தெரியாதவர்கள், பௌர்ணமிகளில் களிமண் குலதெய்வ வழிபாடு செய்து, ஒரு மரப் பீடத்தின் முன் உண்டியல் வைத்து காணிக்கை செலுத்தி வர வேண்டும். கொஞ்சம் களிமண்ணை எடுத்து அதில் தெய்வ உருவத்தை உங்களுக்கு எப்படி வருகிறதோ, அப்படி உருவாக்கி நன்கு காய வையுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து, இந்த காரியத்தை செய்யுங்கள்.
காய்ந்ததும் கிழக்கு நோக்கி ஓரிடத்தில் தெய்வத்தை பிரதிஷ்டை செய்து, அதற்கு முன்பாக மரபீடத்தின் உண்டியலில் தினமும் காணிக்கை செலுத்தி வழிபாடு செய்து வாருங்கள். தினமும் செய்ய முடியாதவர்கள் பௌர்ணமி நாட்களில் மட்டுமாவது இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். தொடர்ந்து 48 பௌர்ணமிகளில் களிமண் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு வந்தால், சீக்கிரமே உங்களுடைய குலதெய்வத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் அல்லது அதன் மூலமாகவே நீங்கள் குலதெய்வ அருளை பரிபூரணமாக பெறுவீர்கள் என்பது நம்பிக்கை.
இரண்டாவது ஒரு வழி உண்டு. ஒரு அனுபவம் வாய்ந்த ஜோதிடரை அணுகி, உங்கள் ஜாதகத்தை வைத்து குலதெய்வத்தைக் கண்டறிய முயற்சிக்கலாம். குறிப்பாக, ஜாதகத்தில் ஐந்தாம் இடம் (பூர்வ புண்ணிய ஸ்தானம்) குலதெய்வத்தைக் குறிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். உதாரணமாக, ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்தால், சிவன் சம்பந்தப்பட்ட தெய்வம், சந்திரன் இருந்தால், சக்தி வடிவ அம்மன் குலதெய்வமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில ஜோதிடர்கள் பிரசன்ன ஜோதிடம் மூலமாகவும் குலதெய்வம், அதன் இருப்பிடம், கோவிலின் பெயர் போன்ற விவரங்களை துல்லியமாக கண்டறிவதாகக் கூறுகிறார்கள்.
இதையும் படிக்கலாமே:
தேய்பிறை அஷ்டமி காவலன் காலபைரவர் வழிபாடு
குலதெய்வம் என்பது நம் குடும்பத்தின் ஏழு தலைமுறைகளை காக்கும் தெய்வம். குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியம், ஏனெனில் இது குடும்பத்திற்கு சகல நலன்களையும், வளங்களையும் தரும். குழந்தை பாக்கியம், பொருளாதார மேன்மை போன்ற பல்வேறு விஷயங்களுக்கு குலதெய்வ அருள் அவசியம். நம்பிக்கைதான் அடிப்படை, எந்த பரிகாரத்தை செய்தாலும், முழு நம்பிக்கையோடு செய்வது முக்கியம். குலதெய்வம் தெரியவில்லை என்று கவலைப்படாமல், நம்பிக்கையுடன் மேற்கண்ட வழிகளில் முயற்சி செய்து, உங்கள் குலதெய்வத்தின் அருளைப் பெறுங்கள்.