குலதெய்வம் நம்முடனே இருக்க வழிபாடு

kula dheivam poojai arai
- Advertisement -

குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் காலம் தொட்டு பின்பற்றி வருவது. இந்த குலதெய்வ வழிபாடு மட்டும் நம் ஒருவரோடு நின்று விடக்கூடிய விஷயம் கிடையாது நம் முன்னோர்கள் வழிபட்டு நாம் வழிபட்டு நமக்கு பின்வரும் நம் சந்ததியினரும் வழிபடக்கூடிய ஒரு முறை. நமக்கு ஆபத்து என்று வந்த பிறகு நாம் பிற தெய்வத்திடம் சென்று முறையிடுவோம்.

ஆனால் குலதெய்வமோ நமக்கு வரும் ஆபத்தை முன்னமே உணர்ந்து ஆபத்து வருவதற்கு முன் நம்மை காக்கும். அப்படியான குலதெய்வத்தை நாம் முறைப்படி வழங்கும் போது நம்முடைய குலம் சீரும் சிறப்புமாக தழைத்து வாழும் என்பது நம் முன்னோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

- Advertisement -

குலதெய்வத்தை ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாதவர்களும் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களும் வருடத்திற்கு ஒரு முறை வீட்டில் இதுபோல பூஜை செய்தால் குலதெய்வம் நம்முடன் நிரந்தரமாக இருக்கும். இந்த பூஜையை எப்படி செய்வது எந்த நாளில் செய்வது என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

குலத்தை காக்கும் குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாட்டை பொருத்த வரையில் வெள்ளி செவ்வாய் பௌர்ணமி போன்ற தினங்களில் செய்வது சிறப்பு. இந்த பூஜை செய்யும் நாள் அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு பெரிய தாம்பாள தட்டை எடுத்து அதில் விபூதியை முழுவதுமாக நிரப்பிக் கொள்ளுங்கள். அந்த விபூதியில் கொஞ்சம் ஏலக்காய் தூள் கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள், கைப்பிடி அளவு மரிக்கொழுந்தையும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். இதை மூன்று மாவு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக மஞ்சளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கெட்டியாக குறைத்து அதில் பிள்ளையார் பிடித்து வைத்து விடுங்கள். இப்போது பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் பிடித்து வைத்த பிள்ளையாரை தட்டி நடுவில் வைத்து விடுங்கள். இதை சுற்றி நீங்கள் முதலில் தயார் செய்த விபூதி உருண்டைகளை வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டின் போது உங்கள் குலதெய்வத்திற்கு ஏதேனும் ஒரு இனிப்பு வகை செய்து வைத்து விடுங்கள். நல்ல வாசனை மிக்க மலர்களை இந்த மஞ்சள் பிடித்து வைத்து தட்டை சுற்றி வைத்து விடுங்கள். இந்த மஞ்சளையும் சுற்றி இருக்கும் விபூதி உருண்டைகளை உங்களுடைய குலதெய்வமாக பாவித்து கொள்ளுங்கள்.

இவைகளுக்கு ஊதுபத்தி சாம்பிராணி போன்றவற்றை காட்டுங்கள். உங்கள் குலதெய்வ வழிபாட்டில் என்னென்ன விதிமுறைகளை பின்பற்றுவீர்களோ அதை செய்யலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் வெற்றிலை பாக்கு, பூ, பழம், தேங்காய் போன்றவற்றை வைத்து எப்போதும் போல வழிபடுங்கள்.

இப்படி வழிபடும் போது உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து நீங்கள் எப்பொழுதும் எங்கள் இல்லத்தில் வீற்றிருந்து எங்களை காக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுங்கள். சிறு குழந்தைகள் இருந்தால் முதலில் அவர்களுக்கு கொடுங்கள்.

இந்த விபூதி உருண்டை பூஜை அறையில் இருக்கட்டும். இதை தினமும் திலகமாக நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். விநாயகராக பிடித்து வைத்த மஞ்சளையும் இதே போல செய்யலாம். இவை இரண்டையும் வெள்ளி,செவ்வாய் நாளில் கொஞ்சமாக தண்ணீரில் கலந்து வீட்டை சுற்றி தெளித்து விடுங்கள். இதனால் வீட்டில் இருக்கும் துர்சக்திகள், கண் திருஷ்டி போன்றவை நீங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய விநாயகர் வழிபாடு

நம்பிக்கை வைத்து கல்லை வணங்கினால் கல்லிலும் இறைவனை காணலாம். எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் அதில் நல்ல பலனை பெறலாம். இந்த பரிகாரத்தை உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்யுங்கள் உங்கள் குலதெய்வம் என்றென்றைக்கும் உங்கள் அன்புடன் துணை நிற்கும்.

- Advertisement -