இந்த விளக்கை ஏற்றி குலதெய்வத்தை வீட்டுக்குள் அழைத்தால் போதும். எந்த தடையும் இல்லாமல் குலதெய்வம் வீட்டிற்குள் வந்து குடும்ப பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும்.

kuladeivam
- Advertisement -

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யக்கூடிய சக்தி கொண்ட தெய்வம்தான் குல தெய்வம். என்னதான் நமக்கு பிடித்த இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு நாம் முன்னுரிமை கொடுத்தாலும், நம் வீட்டில் தீபம் ஏற்றும்போது முதலில் மனதார குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி தான் வழிபாட்டைத் தொடங்க வேண்டும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. குலதெய்வத்திடைய மனது எப்போதுமே சந்தோஷமாக இருக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய குடும்பமும் சந்தோஷமாக இருக்க முடியும். குலதெய்வத்தின் மனது வருத்தப்பட்டால், குலதெய்வம் நமக்கு சாபம் கொடுத்து விடுமா? என்று யாரும் பயப்பட வேண்டாம். எந்த தெய்வமும் யாருக்கும் கெடுதலை நினைக்காது.

ஆனால் நாம் குலதெய்வத்தை மறந்து விட்டோம் என்பதை உணர்த்துவதற்கு சில அறிகுறிகளை காட்டும். நம்முடைய தாத்தா பாட்டி சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ‘எதற்காக நம்முடைய வீட்டில் எதிர்பாராத இப்படி அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. நம் தெய்வத்திற்கு ஏதாவது குறை வைத்து விட்டோமோ! குல தெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டுமோ’! என்று யார் வாயிலிருந்து வரும். அப்போது குலதெய்வத்தை நினைவு கூறுவதற்காக, அந்த குலதெய்வமே யார் ரூபத்திலாவது வந்து உணர்த்தும் என்பதுதான் நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது.

- Advertisement -

நம்முடைய அப்பா அம்மாவைப் போலத்தான் குலதெய்வமும். நாம் எதுவுமே பெற்றவர்களுக்காக செய்யாவிட்டாலும், அப்பாவும் அம்மாவும் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை கட்டாயம் செய்து முடிப்பார்கள். ஆனால், நம்முடைய பிள்ளைகள் நம்மை நன்றியுடன் நினைத்து பார்த்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு, அந்த பெற்றவர்களுக்கு இருக்குமல்லவா? இதேபோல் தான் நம்முடைய குல தெய்வத்திற்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

நாம் குல தெய்வமாக நின்று காக்கும் இந்த குடும்பம் நம்மை தினந்தோறும் நினைத்துக் கொள்கிறதா! என்ற எதிர்பார்ப்பு, குல தெய்வத்திற்கும் நிச்சயம் இருக்கும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தினம் தோறும் வீட்டில் குலதெய்வத்தை நினைத்து தீப வழிபாடு செய்வது சிறப்பு. அதிலும் குறிப்பாக குலதெய்வத்தின் மனதை இன்னும் சந்தோஷப்படுத்த அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் ஒரு அற்புதமான பரிகார தீபத்தை சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

ஒரு மண் அகல் விளக்கை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி குலதெய்வத்தை நினைத்து அந்த எண்ணெயில் ஒரு சொட்டு தேன், 3 மிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து, பஞ்சு திரி போட்டு குலதெய்வத்தை நினைத்து தீபமேற்றினால் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் அந்த குலதெய்வம் விலக்கி விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

குலதெய்வத்திற்கு இனிமையான தேன் கலந்த, மங்களகரமான மஞ்சள் கலந்த, கரும் மூலிகையான மிளகு சேர்த்து தீபம் ஏற்றும் போது நம்முடைய வீட்டில் தடைப்பட்டுவந்த மங்களகரமான காரியங்கள் நடக்கும். நம்முடைய வீட்டில் தேன் போல இனிமையான விஷயங்கள் நடக்கத் தொடங்கும். நம் கண்ணுக்குத் தெரியாத வரக்கூடிய பிரச்சனைகள், எதிரி பிரச்சனை, பணக்கஷ்டம், எதிர்மறை ஆற்றலினால் வரக்கூடிய பிரச்சனைகள் இன்னும் பல கசப்பான விஷயங்களை இந்த மிளகு அழித்துவிடும்.

இப்படியாக குடும்பத்திற்கு தேவையான ஒட்டுமொத்த நல்லதையும் நம் குல தெய்வத்திடம் இருந்து பெற வேண்டுமென்றால் குலதெய்வத்தை நினைத்து வாரம்தோறும் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றலாம். உங்களுடைய குலதெய்வமே உங்களுக்கு தெரியவில்லை என்றால் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தீபத்தை வீட்டில் ஏற்றுங்கள்.

பெயர் தெரியாத என் குலதெய்வம் என் குலத்தைக் காக்க வேண்டும் என்று நினைத்து, தெரியாத குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு தீபமேற்றினாளும் உங்கள் குல தெய்வத்திற்கு தெரியும். நீங்கள் யார் என்பது! குலதெய்வமே தெரியவில்லை என்றாலும், அந்த குல தெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் உங்களுடைய வீட்டிலும் இந்த தீபத்தை ஏற்றி குலதெய்வத்தின் மனதை மகிழ்விக்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -