உங்கள் வீட்டின் குலதெய்வம் எது என்று உங்களுக்கு தெரியாதா? குலதெய்வம் எது என்பதை அறிந்துகொள்ள உதவும் மந்திரம்.

kula
- Advertisement -

குலதெய்வ வழிபாடு தான் நம்முடைய குலத்தை காக்கும். குலதெய்வம் நம் வீட்டில் இல்லை என்றால் நம் குடும்பத்தில் சந்தோஷம் நிச்சயமாக இருக்காது. குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யவில்லை, குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வது இல்லை, குறிப்பாக குலதெய்வத்தை மனதில் கூட நினைப்பதில்லை என்றால், கஷ்ட நேரத்தில் மற்ற தெய்வங்களும் நமக்கு நிச்சயமாக துணையாக நிற்காது. குலதெய்வத்திற்கு பின்னே மற்ற தெய்வங்கள் நமக்கு உதவ வரும் என்பது நம்பிக்கை. இது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். குலதெய்வம் தெரிந்தவர்கள் குலதெய்வத்தை தினமும் மனதார நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை தரும்.

வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வீட்டின் அங்காளி பங்காளிகளுடன் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்கள் வழக்கப்படி குலதெய்வத்தை வழிபட்டு வர வேண்டும். இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. சிலபேருக்கு குலதெய்வம் எது என்று தெரியாமல் இருக்கும். தெரியாத குலதெய்வமாக இருந்தாலும் தெரியாத குல தெய்வமே, எங்கள் குலத்தைக் காக்க வேண்டும் என்று வழிபாடு செய்வது தான் முறை. சரி தெரியாத குலதெய்வத்தை தெரிந்துகொள்ள ஆன்மீக ரீதியாக வேறு ஏதேனும் வழி உண்டா? நிச்சயம் உண்டு. தெரியாத குலதெய்வத்தை தெரிந்து கொள்ள ஒரு சிறிய வழிபாட்டுமுறை உங்களுக்காக இதோ.

- Advertisement -

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும். ஒரு சிறிய டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துளசி இலையை போட்டு கொள்ளுங்கள். இந்த டம்ளர் தண்ணீருக்கு முன்பு நீங்கள் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை உச்சரிக்கவும். கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.

ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே
இஷ்ட தர்ஷய நமஹா

- Advertisement -

தெரியாத குலதெய்வத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து முடித்த பின்பு, டம்ளரில் இருக்கும் தண்ணீரை குடித்து விட வேண்டும். இதேபோல தொடர்ந்து 48 நாட்கள் இரவு நேரத்தில், மேல் சொன்னபடி இந்த வழிபாட்டு முறையை செய்ய வேண்டும். கட்டாயமாக மந்திரத்தை நம்பிக்கையோடு உச்சரிக்க வேண்டும். இப்படி செய்தால் தெரியாத உங்கள் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்கு தெரியவரும் என்பது ஒரு நம்பிக்கை.

நாற்பத்தி எட்டு நாட்களில் குலதெய்வம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றாலும் பரிகாரத்தை விட்டுவிட வேண்டாம். 90 நாட்கள் தொடர்ந்து இப்படி வழிபாட்டை மேற்கொள்ள நிச்சயமாக உங்களுடைய குல தெய்வத்தைப் பற்றிய ஏதாவது ஒரு தகவல், குல தெய்வத்தைப் பற்றிய விபரத்தை யார் மூலமாகவாவது   நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் மட்டுமே முழு பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -