நீங்கள் செயயும் குழம்பின் மனத்தை அதிகரிக்கவும் சுவையை கூட்டவும் இந்த வடகம் மட்டும் வீட்டில் இருந்தால் போதும். உங்கள் சமையல் இனிமேல் நம்பர் 1ஆக மாறிவிடும்

vadagam
- Advertisement -

நமது அம்மா மற்றும் பாட்டி காலத்தில் எல்லாம் அஞ்சறைப்பெட்டி என்பது அனைவரது வீட்டிலும் இருக்கும். அதில் சமையலில் தினமும் சேர்ப்பதற்கான அனைத்து விதமான பொருட்களும் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும். கடுகு, சீரகம், உளுந்து, சீரகம், வெந்தயம், வடகம் என அனைத்து விதமான பொருட்களும் இருக்கும். ஆனால் இன்றைய தலைமுறையினரின் வீடுகளுக்கு சென்று பார்த்தோம் என்றால் பார்ப்பதற்கு அழகான டப்பாக்கள் நிறைந்திருக்கும். அதில் ஒவ்வொரு டப்பாவிலும் ஒவ்வொரு பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். அவசர அவசரமாக வேலை செய்யும் பொழுது ஒவ்வொரு டப்பாவை தேடி எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்கு அழகு மட்டும் இருந்தால் போதாது. உங்களின் சமையலில் அழகும் வெளிபட வேண்டும். அதற்கு நம் பாட்டி, அம்மா பயன்படுத்திய இந்த தாளிப்பு வடகத்தைப் வீட்டிலேயே செய்து வைத்துக் கொள்ளுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – அரை கிலோ, மஞ்சள்தூள் – 50 கிராம், கடுகு – 50 கிராம், வெந்தயம் – 25 கிராம், சீரகம் – 25 கிராம், மிளகு – 10 கிராம், பூண்டு – கால் கிலோ, நல்லெண்ணெய் – 50 கிராம், உப்பு – ஒன்றரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதல் சின்ன வெங்காயத்தின் தலைப்பகுதியை மற்றும் வால் பகுதியை நறுக்கி எடுக்க வேண்டும். பின்னர் தோல் உரித்துக் கொண்டு அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உரித்து வைத்துள்ள வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் 50 கிராம் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இதனை இறுக்கமாக அழுத்தி, தட்டி வைத்து தொடர்ந்து இரண்டு நாட்கள் வெயிலில் உலர வைக்க வேண்டும். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து இதனை எடுத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் கால்கிலோ பூண்டை தோல் உரித்துக் கொண்டு, அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்த பூண்டை ஊறவைத்த வெங்காயத்துடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 50 கிராம் கடுகு, 25 கிராம் சீரகம் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் இவற்றுடன் 25 கிராம் வெந்தயம், 10 கிராம் மிளகு, உப்பு மற்றும் 50 கிராம் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கைகளை வைத்து நன்றாக பிசைந்து விட வேண்டும். அனைத்து பொருட்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விடும் படி ஒரு 10 நிமிடத்திற்கு மேல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் தட்டு போட்டு மூடி, ஒரு இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மறுநாள் காலை இதனைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் எப்பொழுதும் நீங்கள் குழம்பு வைக்கும்போது எண்ணெயில் சிறிதளவு வடகத்தை சேர்த்து வந்தால் போதும். உங்கள் குழம்பின் சுவை அதிகரித்துவிடும்.

- Advertisement -