ஒரு எலுமிச்சம் பழம் இருந்தாலே போதும் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

kulatheiva arul
- Advertisement -

தெய்வ வழிபாடு என்பது ஒருவருடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு செயல் ஆகும். மனிதனுக்கு மீறி நடக்கக்கூடிய அனைத்து செயல்களையும் தெய்வத்தின் செயல்களாகவே நாம் கருதுகிறோம். அப்படி நாம் வணங்கக்கூடிய தெய்வங்களுள் மிகவும் முக்கியமான தெய்வமாக கருதப்படுவது தான் நம்முடைய குலதெய்வம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம் குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு எலுமிச்சம் பழத்தை வைத்து எப்படி பரிகாரம் செய்வது என்று பார்ப்போம்.

ஆயிரம் தெய்வங்களை வணங்கினாலும் குலதெய்வத்தின் அருள் இருந்தால் தான் ஒருவருடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதே போல் தான் எந்த ஒரு பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் குலதெய்வத்தின் அருளோடு நாம் செய்தால் தான் அந்த பரிகாரம் வெற்றியடையும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் ஆசைப்படுவோம். அதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு தான் என்றாலும், குலதெய்வம் நம் வீட்டிற்கு வரும் பொழுது நமக்கு அனைத்து நன்மைகளையும் வழங்க வேண்டும் என்று நினைப்பது நியாயமான கோரிக்கை.

அப்படி குலதெய்வம் நமக்கு அனைத்து நன்மைகளையும் வழங்குவதற்கு நமக்கு எலுமிச்சம் பழமும், மூன்று ஒரு ரூபாய் நாணயமும் இருந்தாலே போதும். இந்த பரிகாரத்தை நாம் வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். ஒரு அடி அகலமும் நீளமும் கொண்ட மஞ்சள் நிற துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணியை நன்றாக சுத்தம் செய்து பன்னீரில் நனைத்து காய வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த துணியை விரித்து அதில் மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை முக்கோண வடிவில் வைக்க வேண்டும். பிறகு அதற்கு மேல் எந்தவித கரும்புள்ளிகளும் இல்லாத சுத்தமான எலுமிச்சம் பழம் ஒன்றை வைத்து, இந்த துணியை பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது “ஓம் குலதெய்வாய நமஹ” என்று கூறவேண்டும். கட்டிய இந்த மூட்டையை வீட்டு நிலை வாசலில் மாட்டி விட வேண்டும்.

எக்காரணம் கொண்டும் நிலை வாசலில் ஆணி அடிக்கக் கூடாது. நிலை வாசல் என்பது குலதெய்வம் இருக்கும் இருப்பிடம் என்று கருதுவதாலும், கிரகலட்சுமி இருக்கும் இடமாக அது கருதப்படுவதாலும் அதில் ஆணி அடிக்கக் கூடாது. அதற்கு மாறாக வேறு முறைகளில் இந்த மூட்டையை நிலை வாசலில் கட்டி விட வேண்டும்.

- Advertisement -

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த மூட்டையில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தையும் ஒரு ரூபாய் நாணயங்களையும் மாற்ற வேண்டும். பழைய ஒரு ரூபாய் நாணயங்களை தனியாக குலதெய்வத்திற்கு ஒரு உண்டியலை வைத்து அதில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணமும் தங்கமும் சேர ஜாதிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் குலதெய்வத்தை நம்மால் வீட்டிற்கு வரவழைக்க முடியும். அதே சமயம் வந்த குலதெய்வம் மனமகிழ்ந்து அனைத்து நன்மைகளையும் நமக்கு வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -