- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகருகருவென கருத்த சருமத்தை கூட மூன்றே நாளில் பால் போல பளிச்சென்று மாற்ற இது மட்டும்...

கருகருவென கருத்த சருமத்தை கூட மூன்றே நாளில் பால் போல பளிச்சென்று மாற்ற இது மட்டும் உங்க கையில் இருந்த போதும். அப்புறம் என்ன எப்பவும் நீங்க பியூட்டி குயின் தானே.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் அழகு என்பது நிறத்தை மையமாகக் கொண்டு பார்க்க ஆரம்பித்து விட்டோம். இதனாலே கருமையாக இருப்பவர்கள் எல்லாம் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி விட்டார்கள். இதனால் தான் கருமையான முக அழகை உடையவர்கள் முகம் வெள்ளையாக பார்லர் கெமிக்கல் என பல வகையில் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த அழகு குறிப்பு பதிவில் இத்தகைய கருமை நிறம் கொண்டவர்கள் கூட விரைவில் வெள்ளையாக அருமையான வழியை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கருமையாக இருக்கும் முகம் வெள்ளையாக மாற
முதலில் இரண்டு ஸ்பூன் அரிசியை முதல் நாள் இரவில் ஒரு முறை சுத்தம் செய்த பிறகு அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் இந்த அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றிய மிக்ஸி ஜாரில் நைசான பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த அரிசியை வடிகட்டியில் ஊற்றி இதன் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் காபி பவுடர் கலந்து கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் பயன்படுத்தும் எந்த பிராண்ட் காபி பவுடராக இருந்தாலும் பரவாயில்லை இது இரண்டையும் கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கிய பிறகு, ஒரு ஸ்பூன் கேரட் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். கேரட் ஆயில் இல்லாதவர்கள் அதற்கு பதில் தேங்காய் எண்ணெய் ஆலிவ் ஆயில் என எதை வேண்டுமானாலும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் குளிக்க பயன்படுத்தும் எந்த சோப்பை வேண்டுமானாலும் அதை நன்றாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு அடி கனமான பாத்திரத்தில் (சமையலுக்கு பயன்படுத்தாத) போட்டு அடுப்பில் வைத்து சூடு படுத்துங்கள். சோப்பு கொஞ்சமாக உருகி வரும் பொழுது அடுப்பை மீடியம் ஃப்ளேமில் மாற்றி விட்டு கால் கப் காய்ச்சாத பாலை ஊற்றிக் கொள்ளுங்கள். பாலுடன் இந்த சோப்பு நன்றாக கரைந்து கட்டிகள் இல்லாமல் மாறி வரும் போது நாம் ஏற்கனவே கலந்து வைத்த கலவையை இதில் சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு நல்ல கீரீம் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது உங்களிடம் சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் மோல்டு அல்லது பிளாஸ்டிக் டப்பா எதுவாக இருந்தாலும் அதில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் தடவி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை அதில் ஊற்றி வைத்து விடுங்கள். இதை வெளியே ரூம் டெம்பரேச்சர் வைத்தால் ஒரு மணி நேரத்தில் நன்றாக இறுகி நல்ல ஒரு சோப்பு பதத்திற்கு கிடைத்து விடும். பிரீசரில் வைத்தால் பத்து நிமிடத்தில் இது தயாராகி விடும்.

நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் சோப்புவிற்கு பதிலாக இந்த சோப்பை பயன்படுத்தி வரும் போது முகம் நல்ல பொலிவாக மாறி விடும். அது மட்டும் இன்றி முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பரு ஒரு சிலருக்கு வாயை சுற்றி மட்டும் கருப்பாக இருக்கும் இது போன்றவை எல்லாம் கூட மறைந்து விடும்.

இதையும் படிக்காலமே: உங்க முகம் எப்பவுமே இளமையா பளீச்சின்னு பார்க்க பிரகாசமா இருக்க பாதி தக்காளி இருந்தா இந்த பேக் டிரை பண்ணுங்க. இப்பவே இது யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னா 60 வயசுலும் 20 வயசு பொண்ணு மாதிரி ஜம்முன்னு இருக்கலாம்.

இந்த சோப்பை மூன்று நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உங்கள் நிறம் நன்றாக கூடி பார்க்க முகம் பிரகாசமாக இருக்கும். முகம் வெள்ளையாக பயன்படுத்தும் இந்த சோப்பு தயாரிக்கும் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்

சற்று முன்