பரோட்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்

parota
- Advertisement -

நகரங்களில் மட்டும் இல்லாமல் தற்போது கிராமப்பகுதிகளிலும் அதிகமாக உண்ணப்படும் உணவு வகையாக பரோட்டோ மாறியுள்ளது. அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பரோட்டா வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

parota_1

பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

மைதா மாவு – 2 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

பரோட்டா செய்முறை:

ஒரு பவுலில் மைதாமாவு போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை பிசைந்து கொள்ளவும். பிறகு அதனை 30 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவேண்டும் .

- Advertisement -

parota_2

பிறகு, தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தயார் செய்து கொள்ளவும். பிறகு ஏற்கனவே தயார் செய்த மாவினை பரவலாக விசிறி பரோட்டோ வடிவில் கையினால் அழுத்தி தயார் செய்து கொள்ளவும்.

பிறகு சூடான தோசைக்கல்லில் போட்டு பரோட்டாவின் இருபுறமும் வேகும் அளவிற்கு திருப்பி திருப்பி விட வேண்டும். இவ்வாறாக செய்தால் சுவையான பரோட்டா தயார்.

- Advertisement -

parota_3

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 2

இதையும் படிக்கலாமே:
பூரி மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Parotta recipe in Tamil. It is also called as Parotta seimurai or Parotta seivathu eppadi in Tamil or Parotta preparation in Tamil.

- Advertisement -