மூதேவி விலகி லட்சுமி கடாட்சம் பெறுக மிக எளிய வழிமுறை

mahalakshmi

பலரும் தங்கள் இல்லத்தில் ஸ்ரீ தேவி குடிகொள்ள வேண்டும் என்று நினைப்பது வழக்கம். ஸ்ரீ தேவி குடிகொண்டாள் அங்கு செல்வ செழிப்பு பொங்கும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் நம்மிடம் ஸ்ரீ தேவி குடிகொள்ள நாம் தினம் தினம் செய்யவேண்டிய சில எளிமையான விடயங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

Lakshmi

ஒரு மனிதன் குளித்து முடித்துவிட்டு வருகையில் அவன் மனதில் குடிகொள்ள ஸ்ரீ தேவியும் மூதேவியும் காத்துக்கொண்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. குளிக்கும் சமயத்தில் அவன் செய்யும் சில செயல்கள் மூலமும், குளித்து முடித்த உடன் அவன் செய்யும் செயல்கள் மூலமும் அவனிடம் குடிகொள்ளப்போவது ஸ்ரீ தேவியா இல்லை மூதேவியா என்று தீர்மானிக்க படுகிறது.

குளிக்கும் சமயத்தில் நீரை முதலில் தலையில் ஊற்றக்கூடாது. பாதங்களில் ஊற்றி படிப்படியாக தலை வரை வர வேண்டும். அதே போல வெந்நீரில் குளிப்பதற்கு பதிலாக பச்சை தண்ணீரில் குளிப்பதே சிறந்தது.

குளித்து முடித்த உடன் முதலில் நாம் தலையை துவட்ட கூடாது. ஏன் என்றால் மூதேவி மூத்தவள் என்பதால் அவளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவளே நம்மிடம் முதலில் வந்து அமரக்கூடியவள். ஆகையால் நாம் தலையை துவட்டினால் மூதேவி நம் தலையில் வந்து அமர்ந்துகொள்வாள். ஆகையால் நாம் முதலில் முதுகை துடைப்பதே சிறந்தது. இதன் மூலம் மூதேவி நம் முதுகில் வந்து அமர்ந்துகொள்வாள் என்று கூறப்படுகிறது.

lakshmi

இதையும் படிக்கலாமே:
தோஷங்களை நீக்கும் துர்கை அம்மன் போற்றி

அதே போல முதலில் நாம் முகத்தையும் துடைக்க கூடாது. அப்படி செய்தால் மூதேவி நம் முகத்தில் வந்து அமர்வாள். ஆகையில் முதுகை துடைத்து அதன் பிறகு முகத்தை துடைப்பதே சிறந்தது. இதன் மூலம் மகாலட்சுமி நம் முகத்தில் குடிகொள்வாள். இதன் மூலம் நமக்கு பல நல்ல விடயங்கள் நிறைவேறும்.