முதலில் இதை கற்றுக்கொண்டு பிறகு விளையாடுங்கள் இந்திய அணியை கடிந்த – லஷ்மண்

laxman
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 பேட்டிங் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

boult

அந்த 93 ரன்கள் இலக்கினை நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் எளிதாக எட்டியது . அந்த அணியின் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 37 ரன்களை குவித்தார், அதில் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் லஷ்மண் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் லஷ்மண் பதிவிட்டதாவது : இந்திய அணியின் இந்த தோல்வி எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி எப்படி விளையாடும் என்று நான் நினைக்கவில்லை. மேலும், இது போன்ற ஸ்விங் ஆடுகளங்களில் அதன் தன்மையை புரிந்து அதற்கு ஏற்றார் போல் மாறி ஆட கற்றுக்கொள்ளவேண்டும்.

- Advertisement -

அப்போதுதான் உங்களால் சிறப்பாக ஆட முடியும். எனவே, இது போன்ற சூழ்நிலைகளை புரிந்து கொள்ள கற்றுக்கொண்டு விளையாடுங்கள். மேலும், போல்ட் தொடர்ந்து 10 ஓவர்களையும் சிறப்பாக வீசினார். அதற்கு வாழ்த்துக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் லஷ்மண்.

இதையும் படிக்கலாமே :

ரஞ்சி போட்டியில் 77 பந்துக்கு ஒரு ரன் கூட அடிக்காமல் அவுட் ஆன என்னை . இந்த போட்டியில் அதிக ரன்கள் அடிக்க வச்சிட்டீங்களே – இந்திய வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -