கட்டி போன காபி தூளை இனி குப்பையில் தூக்கி போட வேண்டாம். கட்டிப் போன காபித்தூள் கட்டிகளை மீண்டும் புதுசு போல மாற்றுவது எப்படி?

coffee
- Advertisement -

காபி தூளை பாட்டிலில் கொட்டி காற்று புகாமல் என்னதான் டைட்டாக மூடிபோட்டு வைத்தாலும், காபி பவுடர் தீரும் சமயத்தில் அந்த காபித்தூள் கட்டி போகத்தான் செய்யும். கட்டிப் போன காபித் தூளை மீண்டும் காபி போடுவதற்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய ஒரு டிப்ஸை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ‘கட்டி போன காப்பி தோலை சரி செய்து எப்படி பயன்படுத்துவது’ என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு காபித்தூளை எப்படி கட்டி படாமல் பார்த்துக் கொள்வது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா. பெரும்பாலும் நிறைய பெண்களுக்கு இந்த குறிப்பு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தெரியாத பெண்கள் இந்த குறிப்பினை தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.

காபி தூள்

தினமும் காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் மட்டும் காபி பவுடரை பாட்டிலில் நிறைய வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். எப்போதாவது ஒரு சமயம் தான் காபி குடிப்பார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில், பாக்கெட்டில் கிடைக்கும் 2 ரூபாய் காபி பவுடர்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது ஒவ்வொரு பாக்கெட்டாக எடுத்து பயன்படுத்திக் கொண்டால் காபித்தூள் கட்டிப் போய் வீணாகாமல் இருக்கும். பாக்கெட்டில் மீதம் காப்பித்தூள் இருந்தாலும் நன்றாக சுருட்டி ஒரு ரப்பர் பேண்ட் போட்டு வைத்துவிட்டால் பாக்கெட்டில் இருக்கும் காப்பித்தூள் கட்டியாகாது.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் காபி துளை பெரிய பாட்டிலாக வாங்கி பயன்படுத்தினால், அந்த பெரிய பாட்டிலில் இருக்கும் காபித்தூளில் இருந்து, பாதிகாப்பித் துளை மற்றொரு சிறிய பாட்டிலுக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இரண்டு பாட்டிலில் காப்பித்தூள் இருக்கும். ஒரு பாட்டிலை இறுக்கமாக மூடி ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். அதை அடிக்கடி நாம் திறக்க போவது கிடையாது. மற்றொரு சிறிய பாட்டிலில் இருக்கும் காப்பி தூளை தினம்தோறும் பயன்படுத்தி வரலாம். இப்படி செய்தாலும் காப்பித்தூள் கட்டி பிடித்து வீணாகாது.

coffee1

கொஞ்சம் நறநறப்பாக இருக்கும் காப்பித்தூள் பிராண்டுகளை வாங்கி பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு கட்டிப் பிடிப்பது. ரொம்பவும் நைசாக சில பிராண்டுகள் கிடைக்கின்றன. அந்த பிராண்டுகள் சீக்கிரமே கட்டிவிடுகிறது. உங்களுடைய வீட்டில் இதை நீங்களும் டெஸ்ட் பண்ணி பாருங்க.

- Advertisement -

அடுத்தபடியாக காப்பித்தூளை சிலபேர் பாக்கெட்டில் வாங்கி எவர்சில்வர் டப்பாவின் கொட்டி வைப்பார்கள். அல்லது டப்பர்வேர் போன்ற பிளாஸ்டிக் டப்பாவில் கொட்டி வைப்பார்கள். எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்தால் காபி தூள் சீக்கிரமே கட்டி ஆகிவிடும். கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்தால் மட்டுமே காப்பித்தூள் நீண்ட நாட்களுக்கு கட்டாமல் வாசனை போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

காபி தூள்

சரி, வாங்கிய காப்பித்தூள் கட்டியாகி விட்டது. என்ன செய்வது. கட்டிப்பிடித்த காபி தூளை எடுத்து ஒரு எவர்சில்வர் கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். சுட சுட தண்ணீரை எடுத்து கொஞ்சமாக இந்த கட்டிப்பிடித்த காபி தூளில் ஊற்றி இலேசாக ஸ்பூன் விட்டு கலந்து கொடுத்தால் காபித்தூள் கரையத் தொடங்கும். இந்த காப்பித்தூள் லிக்விடை ஆறிய பின்பு ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு வைத்துக்கொண்டால் தினம்தோறும் டிக்காஷன் போல இந்த காப்பி தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். (நிறைய தண்ணீர் ஊற்றி ரொம்பவும் தண்ணீராக கரைத்துக் கொள்ள வேண்டாம். கொஞ்சமாக கொதிக்கின்ற தண்ணீரை ஊற்றி கொஞ்சம் கெட்டியான பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.)

coffee-cream1

இந்த காபித்தூளில் தண்ணீர் கலந்து இருப்பதால், பாலில் நிறைய தண்ணீர் ஊற்றி காய்ச்ச கூடாது. திக்கான பாலில், கரைத்து வைத்திருக்கும் இந்த காப்பித்தூள் தண்ணீரை ஊற்றி காபி போட்டு் குடித்தால் பில்டர் காபி யை போலவே சுவை கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் பவுடராக நாம் காபி போடும் சுவையை விட, இதன் சுவை அதிகமாக தான் இருக்கும்.

coffee2

சுடு தண்ணீர் ஊற்றி கரைத்து இருக்கும் இந்த காபி டிகாஷனை ஒரு வாரம் வரை வெளியில் வைத்து பயன்படுத்தலாம். இதை பிரிட்ஜில் வைத்து 30 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுங குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வீட்டிலும் காபித்தூள் கட்டிவிட்டால் இந்த டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -