ஒரு சொட்டு எண்ணெய் கூட சேர்க்காமல் மீதமான சாதத்தில் சிப்ஸ்.

chips
- Advertisement -

எவ்வளவுதான் தலைகீழாக நின்று யோசித்தாலும் மீதமான சாதத்தில் இப்படி ஒரு சிப்ஸ் செய்ய உங்களுக்கு யோசனையே வந்திருக்காது. அவ்வளவு புத்தம் புது ரெசிபியை தான் என்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மீதமான சாதத்தை வைத்து இப்படி சிப்ஸ் செய்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் கூட அது கெட்டுப் போகாமல் இருக்கும்‌. வெறும் சிப்ஸ் ரெசிபியை மட்டும் இன்று நாம் பார்க்கப்போவது கிடையாது.

இந்த சிப்ஸ்க்கு மேலே தூவக்கூடிய மசாலாவையும் எப்படி தயார் செய்வது என்று நாம் பார்க்க போகின்றோம். உதாரணத்திற்கு இந்த பிங்கோ, லேஸ் சிப்ஸ் இதில் மசாலா தூவி சிப்ஸ் கிடைக்கும் அல்லவா அதே சுவையில் சிப்ஸும், மசாலாவும் சேர்த்து நம் கையாலேயே செய்யப் போகின்றோம். வாங்க இந்த இன்ட்ரஸ்டிங்கான ரெசிபி எப்படி செய்வது என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

மீதமான சாதம் 2 கப்
வெண்ணெய் (unsalted butter) 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் 1/4 கப்
உப்பு 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் 1/2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் மீதமான சாதம், வெண்ணெய், தண்ணீர், உப்பு, இந்த 4 பொருட்களையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். நைஸ் ஸ்மூத்தி பேஸ்ட் ஆக இது இருக்கணும். கொரகொரப்பாக அரைக்க கூடாது. மிக்ஸி ஜாரில் அரைத்த இந்த விழுதை ஒரு அகலமான கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். இந்த மாவோடு இரண்டு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு , பேக்கிங் பவுடர் போட்டு, ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் இப்போது சிப்ஸ் செய்ய மாவு தயார்.

- Advertisement -

ஒரு பால் கவர் எடுத்து அதன் உள்ளே இந்த மாவை போட்டு மேலே ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள். கீழே கொஞ்சம் தடிமனாக ஓட்டை வரும் படி கத்திரிக்கோலால் வெட்டிக் கொள்ள வேண்டும். மருதாணி கோன் போடுவோம் அல்லவா அதே போல தான் இதுவும். மருதாணி கோன் போட மெல்லிசாக நுனியை வெட்டுவோம். இதில் கொஞ்சம் அகலமாக நுனி பகுதியை வெட்டிக் கொள்ளப் போகின்றோம். (இப்போது இந்த கோன் கவர் தேவை என்றால் கடைகளில் ரெடிமேட் ஆகவே கிடைக்கிறது.) அவ்வளவுதான்.

அடுத்து மைக்ரோ ஓவன் நமக்கு தேவை. மைக்ரோ ஓவனுக்கு உள்ளே வைக்கும் ட்ரே இருக்கும். அதன் மேலே சிலிகான் ஷீட் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது தயாராக இருக்கும் கோனை கையில் எடுத்து அந்த ட்ரேவுக்கு மேலே தள்ளி தள்ளி மாவை ஓரளவுக்கு சின்ன சின்ன புள்ளிகளாக வைத்து விடுங்கள். இந்த புள்ளிகளை வட்ட வட்ட சிப்ஸ் போல நாம் மாற்ற வேண்டும்.

- Advertisement -

வைத்திருக்கும் மாவு புள்ளிகளுக்கு மேல் ஒரு பட்டர் ஷீட்டை வைத்து, அகலமான கிண்ணத்தை அதன் மேலே வைத்து அழுத்தி லேசாக பட்டர் ஷீட்டை எடுத்தால், ரவுண்டு வடிவத்தில் மாவில் சிப்ஸ் தயாராகி இருக்கும். இதே போல எல்லா சிப்ஸ்களையும் விரைவில் தயார் செய்து கொள்ளுங்கள். ஓவனை பிரீ ஹிட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

170 டிகிரி செல்சியஸில் ஃப்ரீ ஹிட் செய்த ஓவனுக்குள் தயார் செய்து வைத்திருக்கும் சிப்ஸ் டிரைவை வைத்து விடுங்கள். 20 லிருந்து 25 நிமிடம் கழித்து ஓவன்லிருந்து டிரைவை வெளியே எடுத்தால் சூப்பரான சிப்ஸ் மொறு மொறு என்று அழகாக தயாராகி இருக்கும். இது நன்றாக ஆரிய பிறகு கண்டெய்னரில் ஸ்டோர் செய்தால் ஒரு வாரம் கெட்டுப் போகாது. இதற்கு மேலே தூவ மசாலா பொடி தயார் செய்ய வேண்டும் அல்லவா.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்யக்கூடிய வாய்ப்புகளை தரும் மந்திரம்.

காஷ்மீரி சில்லி பவுடர் 1 டேபிள் ஸ்பூன், சாதாரண மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன், கார்லிக் பவுடர் 1 டேபிள் ஸ்பூன், ஆனியன் பவுடர் 1 டேபிள் ஸ்பூன், டிரை மேங்கோ பவுடர் 1 டேபிள் ஸ்பூன், பிளாக் பெப்பர் பவுடர் 1/2 ஸ்பூன், சால்ட் 1 ஸ்பூன், சுகர் 1 ஸ்பூன், ஆர்கானோ பவுடர் (oregano power) 1 ஸ்பூன், இந்த பொடியை எல்லாம் ஒன்றாக சேர்த்து கலந்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டு ஓட்டி, இந்த சிப்ஸ் மேல் தூவினால் கடைகளில் வாங்கும் சிப்ஸ் போலவே சூப்பரான சிப்ஸ் நம்முடைய வீட்டிலும் தயார்.

- Advertisement -