மீதமான சாதத்தில் தான் இதை செய்தீர்கள் என்று அடித்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. மீதமான சாதத்தில் வெறும் 10 நிமிடத்தில் நச்சுன்னு ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி.

cutlet5
- Advertisement -

மீதமான சாதத்தில் விதவிதமாக எத்தனையோ ரெசிபிகளை செய்யலாம். கொஞ்சம் வித்தியாசமாக ரொம்ப ரொம்ப சுலபமாக இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இதை கட்லெட் என்று சொல்லலாம். அப்படி இல்லை என்றால் மீதமான சாதத்தில் செய்த வடை என்று சொல்லலாம். பெயரை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த சூப்பர் ரெசிபியை செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.

1 கப் அளவு சாதம் மீதம் ஆகிவிட்டால் பின் சொல்லக்கூடிய அளவுகள் உங்களுக்கு சரியாக இருக்கும். ஒருவர் சாப்பிடும் சாதம் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் மீதமாகி இருக்கும் சாதத்திற்கு ஏற்ப பின் சொல்லக்கூடிய அளவுகளை கூட்டிகுறைத்து சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

- Advertisement -

மீடியம் சைஸில் இருக்கும் 3 உருளைக்கிழங்குகளை குக்கரில் போட்டு வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளுங்கள். மீதமான சாதத்தை உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு கூட எடுத்து கொள்ளலாம். தண்ணீர் எதுவும் ஊற்றி அரைத்து விடாதீங்க.

ஒரு அகலமான பவுலை எடுத்து பிசைந்து வைத்திருக்கும் சாதம், வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, இந்த இரண்டையும் போட்டு முதலில் நன்றாக பிசைந்து விடுங்கள். பிறகு இதோடு மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 3/4 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் மொத்தமாக போட்டு உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைய வேண்டும்.

- Advertisement -

தேவைப்பட்டால் உங்களுடைய கையில் எண்ணெய் தொட்டுக் கூட இந்த மாவை பிசையலாம். தண்ணீர் ஊற்றக்கூடாது. மாவு நன்றாக கெட்டியாக பிசைந்து கிடைக்க வேண்டும். உருளைக்கிழங்கில் சாதத்தில் வெங்காயத்தில் விடும் தண்ணீரை நமக்கு போதும்.

நமக்கு தேவையான மாவு தயாராகிவிட்டது. இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வட்ட வடிவில் தட்டி கட்லெட் போல தயார் செய்து கொள்ளுங்கள். அப்படியே தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, தட்டி வைத்திருக்கும் கட்டளைகளை பொரித்து எடுக்க வேண்டும். அல்லது அகலமான பேன் உங்களுடைய வீட்டில் இருந்தால் அதில் எண்ணெய் ஊற்றி தட்டி வைத்திருக்கும் கட்லெட்டை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு ரொம்ப ரொம்ப இது அழகாக தெரிய வேண்டும் என்றால் வீட்டில் சிறிய மூடி வட்ட வடிவில் இருக்கும் அல்லவா. அதில் இந்த மாவை நிரப்பி கூட அழகாக வட்ட வடிவமாக அச்சு எடுத்து தோசை கல்லில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம். (ரொம்பவும் தடிமனாக மொத்தமாக தட்ட வேண்டாம். ஓரளவுக்கு கட்லெட் தடிமன் இருந்தால் போதும்.)

இந்த கட்லெட் மூழ்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது. ஓரளவுக்கு இந்த கட்லெட் பாதி மூழ்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி பொறித்து எடுத்தாலே போதுமானது. மெதுவாக 2 பக்கமும் திருப்பிப் போட்டால் இது மேலே மொறு மொறுவென கிரிஸ்பியாக சிவந்து வரும். உள்ளே சாப்டாக வெந்து கிடைக்கும். மிதமான தீயில் பக்குவமாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். சுடச்சுட இதை சாப்பிட ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். குறிப்பா மீதமான சாப்பாட்டில் தான் இதை செய்தீர்கள் என்று யாருமே கண்டுபிடிக்க மாட்டாங்க.

- Advertisement -