சின்ன உருளைக்கிழங்கு இருந்தா ரொம்ப ரொம்ப சிம்பிளான இந்த வெஜிடபிள் கறி செஞ்சி பாருங்க. சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் வெச்சி சாப்பிட்டா கறி குழம்பு கூட தோத்து போய்டும்.

potato curry
- Advertisement -

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். இதைத் தவிர்த்து குருமா வகைகள் செய்யலாம். ஆனால் அசைவ வகைகளை எடுத்துக் கொண்டால் இதற்கு பல வகையான சைடு டிஷ் களை செய்யலாம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் சப்பாத்தி, பூரி இதற்கெல்லாம் ஏற்ற ஒரு அருமையான வெஜிடபிள் கறி கிரேவியை அசைவ சுவையில் எப்படி ரொம்ப சிம்பிளா அதிக டேஸ்ட்டா செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

செய்முறை

இந்த கிரேவி செய்வதற்கு முதலில் கால் கிலோ சின்ன உருளைக்கிழங்கை வாங்கி கழுவி சுத்தம் செய்த பிறகு குக்கரில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கு சேர்த்து கால் ஸ்பூன் மட்டும் உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு உருளைக்கிழங்கில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு தோல் உரித்து உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு சிறிய குடைமிளகாய், ஒரு தக்காளி இரண்டையும் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிய பிறகு நாம் அரிந்து வைத்த உருளைக்கிழங்கு, குடைமிளகாய், தக்காளி இவை மூன்றையும் சேர்த்து அரை ஸ்பூன் காஷ்மீரின் மிளகாய் தூள் மட்டும் சேர்த்து இந்த மிளகாய் தூள் காயில் சேரும் வரை கலந்த பிறகு இதை அப்படியே ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.

அடுத்து மீண்டும் அதே கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு லவங்கம், ஒரு ஏலக்காய், அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்த பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு முறை வதக்கி விடுங்கள். அதன் பிறகு இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், ரெண்டு ஸ்பூன் தனியா தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்த பிறகு அரைக்கப் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி மீண்டும் ஒரு முறை கலந்து குழம்பை கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

இந்த கிரேவி நன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் ஏற்கனவே வதக்கி வைத்த உருளைக்கிழங்கு தக்காளி குடைமிளகாய் கலவையை இதில் சேர்த்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 5 நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். இப்பொழுது இந்த மசாலா அனைத்தும் காயில் ஊறி அருமையான உருளைக்கிழங்கு வெஜிடபிள் கறி தயார். கடைசியாக கொஞ்சமாக கொத்தமல்லி புதினா தழைகளை தூவி இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மாயவரம் ஸ்பெஷல் ‘விட்டேனா பார் இட்லி உப்புமா’ வை இப்படித்தான் செய்யனுமா? இது என்ன பெயரே வித்தியாசமா இருக்கே!

இந்த கிரேவி நல்ல கமகமவென்று வாசத்துடன் அசைவ சுவையில் சூப்பரான ஒரு சைட் டிஷ் ஆக இருக்கும் . இந்த கறியை நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் இனி சப்பாத்தி பூரி என எதை செய்தாலும் இதையே தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -