மீதமான சாதத்தில் சுவையான பாயாசம் எப்படி செய்யணும் தெரியுமா? இது தெரிஞ்சா இனி சாப்பாட்டை தூக்கி போட மாட்டீங்க!

boiled-rice-payasam_tamil
- Advertisement -

சாதம் மீந்து போனால் அதை வைத்து சுவையான பாயாசம் கூட செய்ய முடியும் ரொம்பவே டேஸ்டியான இந்த பாயாசம் செய்வது சுலபம்தான். இது தெரிந்தால் இனி சாதம் மீதமானால் அதை தெரியாமல் கூட நீங்கள் குப்பைக்கு கொண்டு செல்ல மாட்டீர்கள் சுடச்சுட சாதம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாயாசம் ரெசிபி எப்படி எளிமையான முறையில் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், சர்க்கரை – முக்கால் கப், தண்ணீர் – 250ml, பால் – ஒரு கப், மீதமான சாதம் – ஒரு கப், ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

வடித்த சாதத்தில் சுவையான பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு வடித்த சாதத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு நெய் விட்டு காய விடுங்கள். நெய் லேசாக காய்ந்ததும் முக்கால் கப் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து கரையை விட வேண்டும்.

நெய்யும், சர்க்கரையும் சேர்ந்து நன்கு கரைந்து பொன்னிறமாக மாற ஆரம்பிக்கும். அதுவரை நன்கு கரண்டியை வைத்து அவ்வபொழுது கலந்து விட்டுக் கொண்டிருங்கள். சர்க்கரை கரைந்து பொன்னிறமாக மாறி கெட்டியான பதத்திற்கு வந்ததும், அதில் ஒரு கப் அளவிற்கு சரியாக அளந்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சாதத்திற்கு ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

தண்ணீர் சேர்த்த பிறகு சர்க்கரை பாகு நன்கு கரைய வேண்டும். நன்கு கொதித்து வரும் பொழுது கெட்டியான பால் ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்கு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் சேர்த்து கொதித்து வந்த பிறகு எடுத்து வைத்துள்ள சாதத்தை அப்படியே சேர்த்து கொதிக்க விடுங்கள்.

10 லிருந்து 15 நிமிடம் நன்கு கொதித்து சுண்டி கெட்டியான பதத்திற்கு வர வேண்டும். அந்த அளவிற்கு நன்கு கொதித்த பிறகு கால் டீஸ்பூன் அளவுக்கு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். சாதம் நன்கு வெந்து மேலே மிதந்து வர வேண்டும். பாயாசம் நல்ல ஒரு பிங்க் நிறத்தில் சூப்பராக இருக்கும், இந்த சமயத்தில் நீங்கள் அடுப்பை அணைத்து சுடச்சுட அப்படியே பரிமாறி விடலாம்.

இதையும் படிக்கலாமே:
10 நிமிடத்தில் சத்து நிறைந்த கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை பஞ்சு போல மிருதுவாக எளிமையாக வீட்டில் எப்படி தயார் செய்வது?

ரொம்பவே ருசியாக இருக்கக் கூடிய இந்த பாயாசத்தை அப்படியே கொண்டு போய் நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறி சாப்பிடலாம். இரண்டு முறையிலும் நீங்கள் சாப்பிட்டாலும் உங்களுக்கு ரொம்பவே பிடித்துப் போகும். இந்த சாதம் கொண்டு செய்யப்படும் எளிமையான பாயாசத்தை நீங்களும் வீட்டில் இதே போல தயாரித்து செய்து காட்டி அசத்துங்கள். இனி சாதம் மிதமான சட்டுன்னு இது போல செஞ்சு சாப்பிடலாமே!

- Advertisement -