மீதியான சாத்தை வைத்து பத்தே நிமிடத்தில் சுவையான 2 பலகாரம் செய்லாமே!

halwa
- Advertisement -

பொதுவாக மதிய வேளைகளில் சாதத்தினை எவ்வளவு அளவாக சமைத்தாலும் சில சமயங்களில் மீதியாவது என்பது இயல்பான ஒன்றுதான். மீதமான சாதத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அதில் தண்ணீர் ஊற்றி வைப்பது என்பது பலரின் வழக்கமாக இருக்கிறது. தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சாதம் உடலுக்கு நல்லது என்றாலும் அனைவரும் இதனை விரும்புவதில்லை. எனவே பழைய சாதத்தை வைத்து எவ்வாறு சுவையான உணவு வகைகள் சமைப்பது என்பதனை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

halwa1

பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
பழைய சாதம் – 2 கப், முட்டை – 2, எண்ணெய் – கால் லிட்டர், கடலை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 2, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கொத்தமல்லி இலை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை:
மீதமான சாதத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 முட்டையை சேர்த்து உருளைக்கிழங்கு மேஷர் வைத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

halwa2

பின்னர் அடுப்பின் மீது கடாயை வைத்து கால் லிட்டர் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள கலவையிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட வேண்டும். அவை நன்றாக சிவந்து பொரிந்து வரும் வரை வேகவிட வேண்டும். பிறகு அவற்றை வெளியில் எடுத்து பரிமாற வேண்டும். அவ்வளவுதான் சீக்கிரமே சுவையான பக்கோடா தயாராகி விட்டது.

- Advertisement -

அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
பழைய சாதம் – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – 100 கிராம், முந்திரி – 10 கிராம், திராட்சை – 10 கிராம், ஏலக்காய் – 3, கலர் பவுடர் – ஒரு சிட்டிகை.

pakoda

செய்முறை:
ஒரு கப் பழைய சாதத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து சிறிதளவு நெய் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு அதனுடன் ஒரு சிட்டிகை கலர் பவுடர் மற்றும் ஏலக்காயை நசுக்கி சேர்க்கவேண்டும். பதினைந்து நிமிடங்கள் கை விடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். இடையிடையே சிறிது நெய் சேர்த்து கலந்துவிட வேண்டும்.

rice-halwa2

15 நிமிடங்கள் கழித்து அல்வா கடாயில் ஒட்டாமல் நன்றாக திரண்டு வரும். அந்த சமயத்தில் கடாயை கீழிறக்கிவிட வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து அவை நன்றாகப் பொரிந்தவுடன் அவற்றை அல்வாவில் சேர்த்து பரிமாற வேண்டும். அவ்வளவுதான் எவ்வளவு சீக்கிரத்தில் சுவையான அல்வா தயாராகி விட்டது.

rice

பழைய சாதத்தை இனிமேல் என்ன செய்யலாம் என்று எவரும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. அதனை பயன்படுத்தி இவ்வாறு சுவைமிக்க பலகாரங்கள் செய்து கொடுத்தால் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -