இவ்வளவு சுவையான ஸ்நாக்ஸ் ரெசிப்பி செய்ய முடியும் என்று தெரிந்தால் இனிமேல் யாரும் பழைய சாதத்தை வீணாக்க மாட்டீர்கள்.

leftover-rice-recepe
- Advertisement -

சாப்பிடும் சாதத்தை எப்பொழுதும் நாம் அன்னபூரணிக்கு நிகராகவே பார்க்கிறோம். இதனால் தான் நம் முன்னோர்கள் சாதத்தை வீணாக்கக்கூடாது. எந்த அளவிற்கு சாதத்தை வீணாக்குகின்றோமோ அந்த அளவிற்கு நமக்கு கஷ்டங்கள் வரும் என்று பலமுறை சொல்லி இருப்பார்கள். அதேபோல் சிறிதளவு சாதம் கீழே சிந்தினாலும் கூட வீட்டில் உள்ள பெரியவர்கள் எச்சரிக்கை செய்வார்கள். இவ்வாறு ஒரு பருக்கை கூட வீணாகக் கூடாது என்பதில் பலரும் கவனமாக இருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் எவ்வளவு கவனமாக இருந்தாலும் வடிக்கின்ற சாதம் மீதியாகதான் செய்கிறது. இந்த சாதத்தை தூக்கி எறியாமல் எப்படி சுவையான ஸ்னாக்ஸ் ரெசிப்பியாக மாற்றலாம் என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

rice

தேவையான பொருட்கள்:
பழைய சாதம் – ஒரு கப், உருளைக்கிழங்கு – 2, கடலை மாவு – 2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் 2 சீரகம் ஒரு ஸ்பூன் கரம் மசாலா – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சீரக தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

rice1

பிறகு ஒரு கிண்ணத்தில் பழைய சாதத்தை எடுத்து அதனை நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதன்பின் இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள் மஞ்சள்தூள் பெருங்காயத்தூள், சீரகத் தூள், மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இறுதியாக கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

rice3

பின்னர் ஒரு தட்டில் எண்ணெய் தடவி கொண்டு அதில் கலந்து வைத்த கலவையை சேர்த்து நன்றாக தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கத்தியைப் பயன்படுத்தி சதுர வடிவ துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலவை முழுவதையும் உங்களுக்கு வேண்டிய வடிவங்களில் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள கலவையை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக சிவந்து வருமாறு பொரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

rice4

இவ்வாறு பழைய சாதத்தை வீணாக்காமல் இது போன்ற ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டால், பழைய சாதத்தை வீணாக்கி விட்டோமே என்ற கவலையும் இருக்காது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்த திருப்தியும் இருக்கும்.

- Advertisement -