கோடை காலத்தின் உடல் சூட்டை தவிர்த்துக் கொள்ள அடிக்கடி எலுமிச்சை சாறு குடிப்பவரா நீங்கள்? அப்படியானால் இதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

lady lemon
- Advertisement -

கோடை காலம் வந்து விட்டாலே நம் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்து வேண்டும். இந்த காலக்கட்டத்தில் நம்ம உடம்பில் நீர் சத்தானது அதிக அளவில் குறைந்து அடிக்கடி உடல் சோர்வு மயக்கம் போன்றவை ஏற்படும். அதுவும் வெயிலில் அலைந்து வேலை செய்பவர்கள் இன்னும் அதிக கவனத்துடன் உடலில் இருக்கும் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக பலரும் எலுமிச்சை சாறு அருந்துவார்கள்.

எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் ஆசிட், விட்டமின் சி, உடலை சோர்வடையாமல் செய்வதுடன் உடலுக்கு புது தெம்பையும் எலும்புகளுக்கு வலுவையும் கொடுக்கும். ஆனால் எதுவும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை போல எலுமிச்சை பழச்சாறு அதிகமாக எடுத்துக் கொள்வதாலும், சில சிக்கல்கள் ஏற்படும் அதைப்பற்றிய தகவல்களை தான் இப்பொழுது நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

எலுமிச்சை சாறை நாம் பருகும் போது உடலில் இருக்கும் கொழுப்புத் தன்மையை கரைக்க உதவும் என்று அனைவருக்கும் தெரியும். இதையே அதிகபடியாக எடுத்துக் கொள்ளும் போது சில நேரங்களில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தி வயிற்று வலி, செரிமான கோளாறுகளையும் ஏற்படுத்தி விடும். எனவே எலுமிச்சை சாறு பருகும் போது, அதிகமாக தண்ணீரயும் பருக வேண்டும்.

எலுமிச்சை சாறில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளதால் இதை அடிக்கடி பருகி வரும் போது சிலருக்கு பற்களில் பற் கூச்சம் ஏற்பட்டு நாளடைவில் பற்கள் அரிக்கப்படும் அபாயம் ஏற்படும். அதிலும் சென்சிடிவ் பற்கள் உள்ளவர்கள் சிட்ரிக் அமிலம் உள்ள உணவுகளையும், டூத் பேஸ்டுகள் போன்றவற்றை தவிர்ப்பதே நல்லது.

- Advertisement -

எலுமிச்சை சாறை அடிக்கடி உட்கொள்ளும் போது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் எல்லாம் வெளியேறும் என்பது நல்ல விஷயம் தான், ஆனால் அதே சமயம் அது சிறுநீரகத்தின் அளவையும் பெரிதாக்கி விடக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தும்.

கோடையின் வெப்பத்தை தணிப்பதற்காக தான் நீங்கள் அடிக்கடி இந்த எலுமிச்சை சாறை பருகுவதாக இருந்தால் அதே அளவிற்கு உடலை குளுமையாக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளக் கூடிய வேறு சில பழங்களும் இந்த கோடை காலத்தில் அதிகமாகவே கிடைக்கிறது. அந்த வகையில் கொய்யா பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். இது வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்வதுடன், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பெரிதும் உதவும். இதிலும் விட்டமின் சி சத்து அதிகமாகவே உள்ளது.

- Advertisement -

இதே போல் வெயில் காலம் வந்தாலே முலாம் பழங்களும் அதிகமாக கிடைக்கும். இதுவும் நம்முடைய உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் காக்க பெரிதும் உதவி புரியும் என்பதோடு இதிலும் விட்டமின் சி சத்து அதிகமாகவே உள்ளது. இந்த வெயில் காலத்தின் வெப்பத்தையும் உடல் சூட்டையும் தணிக்க தர்பூசணியும் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இதுவும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: ஒன்று சேர்ந்தால் விஷமாக மாறும் அபாயம்! இந்த 2 பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட ஒன்றாக சாப்பிட்டு விடக்கூடாது.

இந்த பயனுள்ள தகவல்கள் பதிவில் உள்ள குறிப்புகள் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம். எந்த ஒரு பொருளையும் நாம் உட்கொள்ளும் போது அதன் நன்மை தீமைகளை முழுதாக அறிந்த பிறகு உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

- Advertisement -