பலவீனமான இதயத்தை, தைரியமாகவும், அடிக்கடி கோபப்படும் இதயத்தை அன்பு நிறைந்ததாகவும் எப்படி மாற்றுவது? சின்ன பயிற்சி போதுமே!

sukran

ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றாலும், வலிமையாக இருக்க வேண்டும் என்றாலும், அன்பு நிறைந்தவராக இருக்க வேண்டும் என்றாலும், அவருக்கு முக்கியம் இதயம்தான். இதயத்தின் செயல்பாடு தான். சில பேருக்கு இதயம் பலவீனமாக இருக்கும். பலவீனம் என்றால் தொட்டதுக் கெல்லாம் பயப்படுவார்கள். வலிமையோடு எதையும் எதிர்கொள்ள மாட்டார்கள். சிலபேருக்கு இதன் மூலமாகவே தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அடிக்கடி கோபம் அடைவார்கள். பலவீனமான இதயம் கூட பல நோய்களுக்கு காரணமாக இருக்கலாம். ஆகவே, இதயத்தை ஒரு சின்ன பயிற்சியின் மூலம் எப்படி தைரியமாக மாற்ற முடியும்? என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Thiyanam

இந்தப் பயிற்சியை நீங்கள் உங்களுக்காகவும் செய்துகொள்ளலாம். அல்லது உங்கள் உறவுகளை மனதில் வைத்தும் செய்யலாம். அதாவது கணவனாக இருந்தால் மனைவிக்காகவும், மனைவியாக இருந்தால் கணவருக்கும் அல்லது உங்களுடைய குழந்தைக்காகவும், அந்த குறிப்பிட்ட நபரை மனதில் நினைத்து, இந்த பயிற்சியை மேற்கொண்டால் கூட அவர்களது இதயமானது பலமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே இதயத்தை பலப்படுத்தும் ஆற்றல் செவ்வாய்க்கு உள்ளது. அதாவது தைரியத்தை கொடுப்பது செவ்வாய் கிரகம். நம்முடைய இதயத்திற்கு அன்பை அளிக்கும் ஆற்றல் சுக்கிர பகவானுக்கு உள்ளது. முதலில் அமைதியான இடத்தில் சவுகரியமாக அமர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் இரண்டு கைகளையும் சாமி கும்பிடுவது போல் வைத்துக் கொண்டு, முதலில் மனதை அமைதிப்படுத்தி கொள்ளுங்கள். ஏனென்றால் எந்த பயிற்சியை செய்வதற்கு முன்பும் மன அமைதி அவசியம் தேவை. அஞ்சலி முத்திரை வைத்து மனதை அமைதிப்படுத்தும் போது மனக்குழப்பம் தீர்ந்து ஒரு தெளிவுக்கு வரும் நம்முடைய ஆத்ம சக்தி.

anjali-mudra

அதன் பின்பு உங்களது வலது கையை, உங்களது இதயத்தின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மூடியவாறு முதலில் சுக்கிர பகவானை நினைத்து ‘ஓம் சுக்ராய நம’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்கலாம். சுக்கிரனின் ஆற்றல் உங்கள் உடல் முழுவதும் நிறைந்திருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். சுக்கிரனின் ஆற்றலானது உங்கள் வசம் வரவேண்டும். சுக்கிரனின் ஆற்றலை உள் வாங்கியதாக உணர வேண்டும். இந்த பயிற்சி மூலம் ஏற்படும் காந்த சக்தியின் மூலம் பிரபஞ்சத்தில் இருக்கும் சுக்கிரனின் ஆற்றல் உங்கள் வயப்படும். சுக்கிரனின் ஆற்றலை முழுமையாக பெற்றுவிடலாம். உங்களது இதயம் அன்பு நிறைந்ததாக மாறும்.

- Advertisement -

இதேபோல் அடுத்ததாக செவ்வாய் கிரகத்தை மனதார நினைத்து ‘ஓம் செவ்வாய் பகவானே நம’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து, செவ்வாய் பகவானின் அனுக்கிரகத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களின் இதயமானது பல மடங்கு வலிமை பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வரும்போது நல்ல மாற்றத்தை உணர முடியும். தேவையில்லாமல் வரும் கோபமும் குறையும். அடுத்தவர்கள் விரும்பும்படி உங்களது பழக்கமானது வசீகரிக்கும் படி இருக்கும்.

sevvai

பயிற்சியை தொடர்ந்து செய்து பாருங்கள். மாற்றத்தை உங்களால் விரைவில் உணர முடியும். இந்த பயிற்சிக்கு மன கட்டுப்பாடு அவசியம் தேவை. உங்களுக்காக இந்த பயிற்சியை செய்தால் எந்த நேரத்திலும் செய்யலாம். அப்படி இல்லாமல், உங்களின் உறவினர்கள் யாருக்காவது இதயத்தை பலப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அவர்களை நினைத்து அவர்கள் உறங்கும் சமயத்தில், பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பயிற்சி செய்தால் தான் பலனளிக்கும்.

இதையும் படிக்கலாமே
தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் தரக்கூடிய சுவாரஸ்யமான வழிமுறைகள் கூறுகிறது லால் கிதாப். அப்படி என்ன தான் சொல்கிறது இந்த வடமாநில பழமை ஜோதிட நூல்?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mana valimai pera in Tamil. Mana thairiyam in Tamil. Mana thairiyam vara in Tamil. Mana thairiyam pera. Mana valimai in Tamil.