உங்க வீட்ல ஒரே ஒரு பல்லி, பூச்சி, எலி கூட வராமல் இருக்க இத மட்டும் செய்யுங்க போதும்! வேற ஒண்ணும் வேண்டாம்.

home-insects
- Advertisement -

இன்று இருக்கும் பெரும்பாலான வீடுகளில் பல்லி தொல்லை அதிகமாக இருக்கிறது. பல்லி தெய்வாம்சம் பொருந்திய ஒரு இனமாக இருந்தாலும் அதை பார்ப்பதற்கு அருவருப்பாகவும், பிடிக்காதது போலும் நாம் உணர்கிறோம். நமது வீட்டு சமையலறையில் பல்லி இருந்தால் எல்லா பொருளையும் மறுமுறை கழுவி உபயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எல்லா பாத்திரங்களிலும் போய் உட்கார்ந்து கொள்ளும். இது மிகவும் அருவருக்கத்தக்க விஷயமாகும். எப்படி தான் இந்த பல்லி தொல்லையை ஒழிப்பது என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பூச்சிகள், வண்டுகள், மூட்டை பூச்சி தொல்லைகள் தீர்வதற்கான குறிப்புகளையும் இப்பதிவில் பார்த்துவிடுவோம் வாருங்கள்.

vengaya thal

வீட்டில் இருக்கும் பல்லிகளுக்கு வெங்காய வாசனை அறவே பிடிக்காது. சிலர் வெங்காயத்தை மூலைமுடுக்குகளில் வையுங்கள் பல்லி வராது என்று கூறுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் பல்லிகள் இதையெல்லாம் சட்டை செய்வதே கிடையாது. வெங்காயத்தை அப்படியே வைக்காமல், ஒரு சின்ன பூ தொட்டியில் மண்ணை போட்டு அதில் வெங்காயத்தை ஊன்றி வைத்தால் வெங்காயத்தாள் முளைக்கும். இதை பல்லி வரும் இடங்களில் மற்றும் பரண்களில் வைத்துவிட்டால் பல்லிகள் வராது.

- Advertisement -

இதுவும் பலன் தரவில்லை என்றால் கடைகளில் விற்கும் கிருமி நாசினியான டெட்டால் வாங்கிக் கொள்ளுங்கள். சிறிதளவு தண்ணீருடன் டெட்டால் 2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு மூடி எலுமிச்சைச் சாறு ஊற்றவும், பின்னர் ஒரு வெங்காயம், நாலு பல் பூண்டு இதனை பேஸ்ட்டாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதையும் இவற்றுடன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் போதும். எங்கெல்லாம் உங்களுக்கு பல்லி தொல்லை இருக்கிறதோ அங்கெல்லாம் நன்றாக குலுக்கிவிட்டு ஸ்ப்ரே செய்து விடுங்கள். இதன் வாசனைக்கு ஒரு பல்லிக்கூட உங்கள் வீட்டில் வராது. வேறு சில பூச்சிகளும் இதனால் வீட்டிற்குள் வராது.

ant-sugar

சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க நாலு கிராம்பை போட்டு வைக்கலாம். அதன் வாசனைக்கு எறும்பு சர்க்கரை இருக்கும் பக்கம்கூட தலை வைத்து படுக்காது. இது பல பேருக்கு தெரிந்த டிப்ஸ் ஆக இருக்கலாம். அதேபோல நீங்கள் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் பொடியில் வண்டுகள் வராமல் இருக்கவும், அதிக காலம் கெட்டு போகாமல் இருக்கவும், அரை ஸ்பூன் அளவிற்கு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் மிளகாய் பொடி காலியாகும் வரை பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -

நீங்கள் மொத்தமாக அரிசியை வாங்கி வைப்பவர் ஆக இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அரிசியில் வண்டு பிடிக்க ஆரம்பிக்கும். இதிலிருந்து அரிசியை பாதுகாக்க வேப்பிலையை போட்டு வைக்கலாம். வேப்பிலை வாசனைக்கு அரிசி வண்டுகள் வராது என்கின்றனர். வேப்பிலை கிடைக்காதவர்கள், மாற்றாக வசம்பையும் போட்டு வைக்கலாம்.

rice-bugs

அலமாரிகளில், பீரோக்களில் இருக்கும் மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க பழைய காலி செண்ட் பாடல்களையும், சோப்பு கவர்களையும் போட்டு வைத்தாலே போதும். துணிகளும் வாசனையாக இருக்கும். மூட்டைப் பூச்சிகளும் அந்த வாசனைக்கு வருவதில்லை. வீணாக தூக்கி போடும் இந்த பொருட்களை துணிகளுக்கு அடியில் வைத்து விட்டால் போதும் பிரச்சனை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எலிகள் வராமல் இருக்க வீட்டில் மூளை முடுக்குகளில் புதினா இலைகளை கசக்கி போட்டுவிட்டால் போதும். அதன் வாசத்திற்கு எலிகள் வரவே வராது. நொச்சி இலைகள் கிடைத்தால் அதை வாங்கி வந்து எலி வரும் இடங்களில், எலி பொந்து உள்ள இடத்தில் வைத்துவிட்டால் போதும் ஓடியே போய்விடும்.

baking-soda

வீட்டில் அல்லது சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கும். இதுவும் பல்லியைப் போன்றே வீட்டில் இருக்கும் பொருட்களை நாசம் செய்து விடும். இதனால் உடல்நிலை பாதிப்புகள் கூட ஏற்படுவதுண்டு. கரப்பான் பூச்சிகள் பெரும்பாலும் சமையலறையில் இருக்கும் பாத்திரம் கழுவும் இடங்களில் இருந்து தான் வருகின்றன. நீங்கள் இரவு தூங்க செல்லும் முன் கழுவாத பாத்திரங்களை போட்டு வைப்பது தவிர்க்க வேண்டும். இரவு எப்படியாவது பாத்திரங்களை கழுவி விட்டு, அந்த சிங்கில் இருக்கும் ஓட்டையில் சிறிதளவு பேக்கிங் சோடா போட்டு தண்ணீரை ஊற்றி விட்டால் போதும். சிங்கிள் இருக்கும் அடைப்புகளும் நீங்கும், கரப்பான்பூச்சி தொல்லைகளும் ஒழியும். பேக்கிங் சோடாவில் இருக்கும் ஒரு வகை வேதிப்பொருள் பூச்சிகள் வருவதை தடுக்கின்றன. எனவே இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். செய்து பார்த்து பலனை கூறுங்கள்.

இதையும் படிக்கலாமே
கொரோனாவை அடுத்து நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஆபத்து! வெட்டுகிளிகளால் நமக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்படுமா? பஞ்சாங்கம் என்ன சொல்கிறது!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veetil palli thollai neenga. Lizard problem solution. Lizard problem in house. Lizard thollai. Palli thollai neenga tips.

- Advertisement -