வீட்டில் தோட்டம் வைத்து இருப்பவர்கள் மண் புழு உற்பத்தியை பெருக்க, இந்த சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதும், அதிக செலவு இல்லாமல் செடி, கொடிகளை வளர்த்து விடலாம்.

- Advertisement -

செடிகள் நன்றாக வளர அந்த மண் செழிப்பாக இருக்க வேண்டும் இது தான் முதல் காரணம். மண் சரியாக இல்லா விட்டால், அதில் எந்த செடிகள் வைத்தாலும் சரியாக வளராது. அந்த மண் நல்ல தரமானதாக இருக்க வேண்டும் என்றால் அந்த மண்ணில் நுண்ணுயிர்களும், மண்புழுவும் கட்டாயமாக இருக்க வேண்டும். இவை இருந்தால் மட்டுமே செடிகள் வளரும். இவை இல்லாமல் நீங்கள் எந்த உரங்களை கொடுத்தாலும் செடிகள் சரியாக வளராது. இப்போது இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் வீட்டில் தோட்டம் வைத்து வளர்ப்பவர்கள் மண்புழுக்களை எப்படி பெருக்கி மண்ணை வளமானதாக மாற்றுவது என்பது குறித்து சின்ன சின்ன குறிப்புகளை இதில் தெரிந்து கொள்ளுங்கள்.

மண்புழு அதிகமான வர வேண்டுமென்றால் முதலில் மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். ஈரப்பதம் இல்லாமல் மண்ணானது காய்ந்து விட்டால் மண் புழுக்கள் இறந்து போய் விடும். இதை தடுக்க மணலில் முடாக்கு போட வேண்டும். அதாவது காய்ந்த இலை தலைகளை போட்டு அதன் மீது மண்ணை போட்டு தண்ணீர் தெளிக்கும் போது மண் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்கும். அது மட்டுமின்றி நீங்கள் போடும் இந்த காய்ந்த தழைகளும் உரமாக மாறி இதுவும் மண்புழு பெருக காரணமாகும்.

- Advertisement -

அடுத்து எறும்புகள், மண்ணில் எறும்புகள் அதிகம் வரும் போது அவை இந்த மண்புழுக்களை உண்டு விடும். எனவே நீங்கள் தொட்டியில் செடிகள் வைத்திருந்தாலும் சரி, தரையில் வைத்திருந்தாலும் எறும்புகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் மண்ணில் கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கை கலந்து போட்டு விடலாம். அது மட்டும் இன்றி வாரத்தில் ஒரு நாள் ஆவது வேப்பெண்ணெய் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளித்து வர வேண்டும்.

மூன்றாவதாக கெமிக்கல் கலந்த உரங்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது. இதனால் மண்புழுக்கள் அழிந்து விடும் அபாயம் கட்டாயமாக உண்டு. அதே போல் செடிகளுக்கு எப்சம் சால்ட் உரமாக பயன்படுத்துவார்கள். இதை கொடுப்பதில் தவறில்லை ஆனால் அதிக அளவில் பயன்படுத்தினால் இதனாலும் மண் புழுக்கள் இறந்து விடும்.

- Advertisement -

அதே போல் உப்புத் தண்ணீரை அதிக அளவு பயன்படுத்தினாலும் மண்ணில் உள்ள இந்த மண்புழுக்கள் இறந்து விட வாய்ப்புகள் அதிகம். எனவே உங்கள் வீட்டு தண்ணீர் உப்பு தண்ணீராக இருந்தால், அதை நேரடியாக செடிகளுக்கு ஊற்றாமல் அதில் அரிசி களைந்த தண்ணீர், காய்கறி அலசிய தண்ணீர் போன்றவைகளை கலந்து சிறிது நேரம் கழித்து ஊற்றும் போது அதன் தன்மை மாறி விடும்.

அதே போல் மண்புழுக்களுக்கு மிகவும் பிடித்தமான உரம் என்று கொண்டால் மாட்டு சாணம். இதை பச்சையாக இருக்கும் போது எந்த காரணத்தை கொண்டும் செடிகளுக்கு போடக் கூடாது காய்ந்த சாணத்தை தண்ணீரில் ஊற வைத்து கட்டிகள் இல்லாமல் கரைத்து அதன் பிறகு தான் போட வேண்டும். பச்சை சாணத்திலும் பூச்சிகள் எறும்புகள் அதிகமாக இருக்கும் அவைகளும் இந்த மண்புழுக்களை உண்டு விடும்.

- Advertisement -

அடுத்து கரும்பு சக்கைகளை செடிகளுக்கு உரமாக போடலாம் கரும்பு சக்கைகளும் இதே போல தான் அப்படியே போடக் கூடாது. நன்றாக வெயிலில் காய வைத்து அதன் பிறகு மண்ணில் இந்த சக்கைகளை போட்டு அதன் மேல் மணல் போட்டு மூடி தண்ணீர் ஊற்றி வைத்தால் இந்த சக்கைகள் உரமாக மாறும். இந்த சக்கைகளும் மண்புழுகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

இதையும் படிக்கலாமே: செவ்வந்தி செடி செண்டு செண்டாக பூக்க, நீங்கள் தேவையில்லை என நினைக்கும் இந்த பொருள்கள் போதும், இதை வைத்து நீங்க ஒரு பூக்க கடையே வைக்கலாம்.

நீங்கள் வைத்திருக்கும் செடிகளில் மண்புழுக்கள் இருந்தாலே போதும் உங்கள் செடிகள் மிகவும் ஆரோக்கியமாக, அதிக உரங்கள் கொடுக்கவில்லை என்றாலும் கூட நல்ல முறையில் வளரும்.

- Advertisement -