செவ்வந்தி செடி செண்டு செண்டாக பூக்க, நீங்கள் தேவையில்லை என நினைக்கும் இந்த பொருள்கள் போதும், இதை வைத்து நீங்க ஒரு பூக்க கடையே வைக்கலாம்.

- Advertisement -

பூக்கள் என்றாலே அழகு தான், அதுவும் நம் வீட்டில் ஆசையாய் வாங்கி வளர்க்கும் செடிகளில் அதிகமாக பூத்து இருக்கும் போது அதை பார்ப்பது பேரானந்தம். இப்போது இந்த பதிவில் நம்ப வீட்டில் வளர்க்கும் செவ்வந்தி செடியில் பூக்கள் அதிகமாக பூக்க எந்த உரத்தை கொடுக்க வேண்டும், அதை எப்படி கொடுக்க வேண்டும், என்பதை பற்றிய ஒரு தகவலை தான் இந்த வீட்டுத் தோட்டம் பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

செவ்வந்தி பூக்களை பொறுத்த வரையில் நடுவதற்கு முன்னே மண்ணை தண்ணீர் ஊற்றி நல்ல பக்குவப்படுத்திய பின் நட வேண்டும். நட்டு வைத்து மூன்று நாட்களுக்கு பிறகு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் கொடுத்தால் போதும். இது அதிகபட்சம் ஆறு மாதத்திற்குள் பூத்து விடும். செடிகள் வளரத் தொடங்கும் போது நுனி கிளை நறுக்கி விட வேண்டும். அப்போது தான் பக்க கிளைகளை வைத்து அதில் அதிக பூக்கள் இருக்கும்.

- Advertisement -

செவ்வந்தி பூக்கள் நன்றாக பூக்க வீட்டிலே உரம் தயாரித்து கொடுத்த ஒரு கடையை வைக்கும் அளவிற்கு பூக்களை பூக்க வைக்கலாம். அதற்கு எந்த உரம் எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்பதையும் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதை தயாரிக்க தேவைப்படும் மூன்று பொருட்களில் இரண்டு நாம் பயன்படுத்தி தேவையில்லை என்று தூக்கிப் போடும் பொருள் தான் ஒன்று வாழைப்பழ தோல், இன்னொன்று முட்டையின் தோல் இவை இரண்டையுமே நாம் செடிக்கு உரமாக பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே ஆனால் இந்த முறையில் அப்படி நேரடியாக பயன்படுத்தாமல் இரண்டுடன் இன்னொரு பொருளையும் சேர்த்து செடிக்கு உரமாக பயன்படுத்தலாம்.

வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊற வைத்து உரமாக செடிகளுக்கு கொடுக்கும் ஆனால் இந்த முட்டையின் ஓட்டை நாம் அப்படியே செடிகளுக்கு கொடுப்பதால் இதில் உள்ள ஈரத்தன்மைக்கு கட்டாயமாக பூச்சிகள் வந்து செடிகள் வீணாகும் வாய்ப்பு அதிகம் எனவே எப்போதும் செடிக்கு முட்டை தோலை உரமாக கொடுக்கும் போது காய வைத்த பிறகு தான் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இதற்கு வாழைப்பழ தோள்களை சின்ன சின்னதாக நறுக்கி அதை நல்ல வெயிலில் ஒரு நாள் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் முட்டையின் ஓட்டையும் ஈரத்தன்மை இல்லாமல் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த இந்த இரண்டு பொருட்களையும் தனித் தனியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு பாக்ஸில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழ தோல் பவுடர் 5 ஸ்பூன், முட்டை ஓட்டின் பவுடர் 4 ஸ்பூன், இத்துடன் உங்களுக்கு எப்சம் சால்ட் கிடைத்தால் அது 3 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள் (இதை அதிகமாக செடிகளுக்கு கொடுக்க கூடாது) இல்லை என்றால் இவை இரண்டையும் மட்டும் ஐந்து லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை செடியின் வேர் பகுதிகளில் ஊற்றி விடுங்கள். இதே போல் வாரம் ஒரு முறை இந்த உரத்தை கொடுத்து வந்தால் உங்கள் அதிகமாக பூக்கும் இதை மற்ற பூச்செடிகளுக்கும் கூட கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்லையும் கீரை செடியை வளர்க்க ஆசையா இருக்கா? அப்ப இதை செய்தா போதும், பத்தே நாளில் கீரை தள தளன்னு வளர ஆரம்பிச்சிடும்.

வீட்டில் இப்படி வேண்டாம் என தூக்கிப் போடும் இரண்டு பொருள்களை வைத்து செடிகளின் பூக்களை அதிகமாக பூக்க வைக்க முடியும். நீங்களும் உங்கள் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு இந்த பொருட்களை பயன்படுத்தி அதிக பூக்களை பெறுங்கள்.

- Advertisement -