இந்த தவறை நீங்கள் செய்தால் குலதெய்வம் உங்கள் குடும்பத்தை மறந்து விடும். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்காமல் போக இதுவும் ஒரு காரணம் தான்.

kula-dheivam
- Advertisement -

குலதெய்வ வழிபாடு தான் நம் குலத்தைக் காக்கும் என்று சொல்லுவார்கள். நாமும் குலதெய்வ வழிபாட்டை மறக்கக்கூடாது. நம்முடைய குலதெய்வமும், நம் குடும்பத்தை மறக்கக்கூடாது. இந்த இரண்டில் எந்த ஒரு தவறு நடந்தாலும் நிச்சயம் குடும்பத்தில் தீர்க்க முடியாத தொடர் கஷ்டங்கள் வரும். குலதெய்வ வழிபாட்டை முறையாக எப்படி மேற்கொள்வது. குலதெய்வக் கோவிலில் செய்யக்கூடாத தவறு என்ன என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பதிவு இதோ உங்களுக்காக.

குலதெய்வ கோவிலுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு:
நம்மில் பெரும்பாலானோர் குலதெய்வ கோவிலுக்கு வருடா வருடம் சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வோம். சில பேரால் குலதெய்வ கோவிலுக்கு வருடா வருடம் செல்ல முடியாது. குழந்தைக்கு திருமணம் வைத்திருக்கின்றோம், காது குத்து வைத்திருக்கின்றோம். வீட்டில் ஏதோ நல்ல விசேஷம் நடக்கப்போகிறது என்றால் குடும்பத்தோடு சென்று குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருவது வழக்கமாக இருக்கும்.

- Advertisement -

நீங்கள் குலதெய்வத்தை எந்த நாளில் சென்று, எந்த பண்டிகைக்காக வழிபாடு செய்தாலும் சரி, குலதெய்வத்திற்கு மாவிளக்கு போடக்கூடிய வழக்கம், உங்கள் குடும்பத்தில் இருந்தால், நிச்சயமாக அந்த கோவில் வாசல் படியை மிதித்தால் மாவிளக்கு போடாமல் வீடு திரும்பவே கூடாது. அம்மன் கோவிலாக இருந்தாலும் காவல் தெய்வமாக இருந்தாலும் சில குடும்பங்களில் மாவிளக்கு போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். பெருமாள் வழிபாடு செய்பவர்கள் கூட மாவிளக்கு போட்டு பெருமாள் வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

இப்படி உங்களுடைய குடும்பத்தில் உங்கள் குலதெய்வத்திற்கு மாவிளக்கு ஏற்றக்கூடிய வழக்கம் இருந்தால் வருடத்தில் ஒரு நாள் குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த மாவிளக்கை, குலதெய்வ கோவிலில் ஏற்றி வைத்துவிட்டு அந்த மாவிளக்கை உங்கள் கையில் ஏந்தி கொண்டு குலதெய்வ கோவிலை ஒரு முறை வலம் வந்து, நீங்கள் என்ன கோரிக்கையை ஆண்டவனிடம் வைக்கிறீர்களோ அந்த கோரிக்கை உடனடியாக பலிக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

வீட்டிலிருந்தே மாவிளக்கை தயார் செய்து எடுத்து சென்று அந்த மாவிளக்கில் நெய் விட்டு திரி போட்டு விளக்கு ஏற்றி குலதெய்வத்திற்கு முன்பாக வைத்து வழிபாடு செய்யலாம். இந்த மாவிளக்கை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து உண்ணுவார்கள். சில பேர் இதை பசு மாட்டிற்கு கொடுத்து விடுவார்கள். அது உங்கள் வீட்டு வழக்கப்படி என்ன செய்வீர்களோ அதை செய்து கொள்ளுங்கள்.

குடும்ப சூழ்நிலை காரணமாக குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டிலேயே உங்கள் குலதெய்வத்தை நினைத்து மாவிளக்கு போட்டு குலதெய்வ பூஜை செய்வது குடும்பத்திற்கு நல்ல பலனை கொடுக்கும். சில பேருடைய குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடும் பழக்கம் இருக்காது. ஆனால் அவர்கள் அம்மன் கோவிலுக்கு சென்று மாவிளக்கு போடும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அப்படி ஒரு வழக்கம் உங்களுடைய வீட்டில் இருந்தால் அதையும் நீங்கள் மறக்கக்கூடாது. வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் அருகில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு சென்று மாவிளக்கு போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சகல சௌபாக்கியத்துடன் வாழ வீட்டில் வைக்கவேண்டிய ஒரு பொருள்

குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக நம்முடைய தலைமுறை செய்து வந்து கொண்டிருக்கும் பழக்கத்தை திடீரென்று நம் தலைமுறையில், நாம் கைவிடக்கூடாது. அப்படி கைவிடும் போது சில தெய்வங்களின் ஆசிர்வாதத்தை நம்மால் பெற முடியாமல் போய்விடும். தெய்வக்குத்தம் ஏற்பட்டுவிடும். உங்களுடைய குலவழக்கம் உங்களுக்கு தெரியாது என்றால் இன்றே உங்கள் வீட்டில் இருக்கும் முன்னோர்களைக் கேட்டு குல வழிபாட்டை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய சந்ததியினரை பாதுகாக்கும் என்று இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -