அட்டகாசமான சுவையில் நம்ப வீட்டிலேயே மதுரை ஸ்பெஷல் கழனி ரசம் செய்வது எப்படி

kalani-puli-charu-rasam_tamil
- Advertisement -

கழனி புளிச்சாறு | Kalani puli charu recipe in Tamil

மதுரை ஸ்பெஷல் கழனி புளிச்சாறு பாரம்பரிய முறையில் அந்த காலங்களில் செய்யப்படுவது உண்டு. இன்று அது பலருக்கு தெரியாமலேயே போய்விட்டது. ரொம்பவே ருசியாக புளிப்பும், காரமும் கொண்ட இந்த கழனி புளிச்சாறு ஆரோக்கியம் மிகுந்ததும் கூட! அரிசி களைந்த தண்ணீரை கொண்டு செய்வார்கள். மேலும் தொண்டைக்கு இதமாகவும், சளி பிடிக்காமல் இருக்கவும் செய்யும் இந்த மதுரை கழனி புளிச்சாறு எப்படி நம் வீட்டிலும் ஈசியாக செய்யலாம்? என்பதை இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

அரிசி கழுவிய தண்ணீர் – 4 டம்ளர், புளி – எலுமிச்சை பழம் அளவு, இடித்த பூண்டு பல் – 4, சின்ன வெங்காயம் – ஏழு, பச்சை மிளகாய் – இரண்டு, கருவேப்பிலை – இரண்டு இணுக்கு, கல் உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – ஒரு கைப்பிடி, தாளிக்க: நல்லெண்ணெய் – ரெண்டு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், பெருங்காய தூள் – கால் ஸ்பூன், வரமிளகாய் – ஐந்து, பச்சை மிளகாய் – ஐந்து, சின்ன வெங்காயம் – ஐந்து, வெந்தயத்தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

அரிசி கழுவிய தண்ணீர் 4 டம்ளர் அளவிற்கு உங்களுக்கு தேவையான ரசம் வைக்க எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் கழுவிய தண்ணீரை ஊற்றி விட வேண்டும், இரண்டாவதாக கழுவிய தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தண்ணீரில் ஊற வைத்து கரைத்த, புளி தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் புளி கொஞ்சம் கூடுதலாக சேர்க்க வேண்டும் அப்பொழுது தான் காரம் தெரியாது.

பின்னர் இதனுடன் இடித்த பூண்டு பல், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மல்லித்தழை, தேவையான அளவிற்கு கல் உப்பு போட்டு நன்கு கைகளால் கூட்டிக் கொள்ள வேண்டும். ரசத்தை கூட்டி வைத்த பிறகு இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வெந்தயம், பெருங்காயத்தூள் அல்லது கட்டி சேர்த்து லேசாக வதக்குங்கள். பின்னர் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து எண்ணெயிலேயே நன்கு சிவக்க வறுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உருளைக்கிழங்கு 65 தம் பிரியாணி செய்ததுண்டா? இப்படி மட்டும் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் செஞ்சு பாருங்க கறி பிரியாணி கூட தோத்துப் போயிடும்!

பொடிப்பொடியாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இது ரொம்பவே ருசி தரக்கூடியது. நன்கு சுருள வதங்கி வரும் பொழுது நீங்கள் கூட்டி வைத்துள்ள கழனி புளிச்சாறை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்கு கொதிக்க விட வேண்டும். ரெண்டு கொதி வந்த பிறகு கால் ஸ்பூன் அளவுக்கு வெந்தயத்தூளை மேலே தூவி ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். இந்த ரசத்தை நன்கு கொதிக்க விட்டால் தான் புளியின் பச்சை வாசம் போகும், எனவே நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து சுடச்சுட சாதத்துடன் பரிமாற வேண்டியதுதான். இந்த புளிச்சாறு குழைந்த சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டால் ரொம்பவே ருசியாக இருக்கும். மதுரை ஸ்பெஷல் கழனி புளிச்சாறு ரெசிபி இப்படித்தான் எளிதாக நாமும் செய்யணும், செஞ்சு பார்ப்போமா?

- Advertisement -