Potato 65 biryani : ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் உருளைக்கிழங்கு 65 தம் பிரியாணி செய்வது எப்படி

- Advertisement -

விதவிதமான பிரியாணி வகைகளில் சைவ பிரியாணிக்கு மவுசு குறைவுதான் ஆனால் இது போல நீங்கள் உருளைக்கிழங்கு 65 செய்து ஒரு முறை பிரியாணி செஞ்சு பாருங்க, உங்க வாழ்க்கையில் இந்த சுவையை கொஞ்சம் கூட மறக்கவே மாட்டீங்க. ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ரொம்பவே சுவையான சைவ உருளைக்கிழங்கு 65 தம் பிரியாணி எப்படி வீட்டில் செய்வது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

ஊற வைக்க: வினிகர் – அரை கப் அல்லது எலுமிச்சை சாறு – நாலு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பெரிய வெங்காயம் – ஒன்று, உப்பு. 65 மசாலா: உருளைக்கிழங்கு – 300 கிராம், கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன், மைதா மாவு – இரண்டு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன், உப்பு, கரம் மசாலா – கால் ஸ்பூன், வெறும் மிளகாய் தூள் – அரை ஸ்பூன்.

- Advertisement -

சாதம் வைக்க: தண்ணீர் – இரண்டு லிட்டர், அண்ணாச்சி பூ – ரெண்டு, கிராம்பு – ஆறு, பட்டை – இரண்டு, ஏலக்காய் – நாலு, மராத்தி மொக்கு – மூன்று, பிரியாணி இலை – ஒன்று, ஜாதி பத்ரி – ஒன்று, உப்பு – இரண்டு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், ஊற வைத்த பாசுமதி அரிசி – ஒன்றரை கப்.

மசாலா தயாரிக்க: சமையல் எண்ணெய் – 50ml, நறுக்கிய – பூண்டு பல் 4, பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் 3, கறிவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், வறுத்தரைத்த சீரகத்தூள் – அரை டீஸ்பூன் – ஒரு டீஸ்பூன், வெறும் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், உப்பு, தயிர் – அரை கப், தண்ணீர் – 50ml, ஃபுட் கலர் – அரை ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, எலுமிச்சை சாறு – அரை மூடி, வறுத்த முந்திரிப் பருப்பு – 20.

- Advertisement -

செய்முறை

முதலில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு வெங்காயத்தை நறுக்கி போட்டுக்கொள்ளுங்கள். அதனுடன் பச்சைமிளகாயும் போட்டு கொஞ்சம் போல உப்பு சேர்த்து ஊற வைத்து விடுங்கள். பிறகு 300 கிராம் அளவிற்கு உருளைக்கிழங்குகளை பெரிய பெரிய கியூபுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு 80% நன்கு வேகவைத்து எடுத்து வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஈரப்பதம் இல்லாத இந்த உருளைக்கிழங்குடன் இப்போது கான்பிளவர், மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது, தேவையான உப்பு, கரம் மசாலா, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு கோட்டிங் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் எண்ணெயை சூடேற்றி மீதமான தீயில் வைத்து ஒவ்வொரு உருளைக்கிழங்குகளாக சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு மூடி போட்ட பாத்திரம் ஒன்றை வைத்து அதில் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த தண்ணீரில் அன்னாச்சி பூ, கிராம்பு, பட்டை, ஏலக்காய், மராட்டி மொக்கு, பிரியாணி இலை, ஜாதிபத்திரி, பச்சை மிளகாய், தேவையான உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சீரகம் ஆகியவற்றை மேற்கூறியபடி அப்படியே போட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதித்து வரும் பொழுது அரை மணி நேரம் நன்கு ஊற வைத்த பாசுமதி அரிசியை வடிகட்டி இதில் சேர்த்து 70% சாதம் நன்கு வேகுமாறு வேக வைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வேறொரு முடி போட்ட பாத்திரத்தில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பொடிப்பொடியாக நறுக்கிய பூண்டு பல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பின்னர் வரமிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், காஷ்மீரி தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு மசாலா வாசம் போக வதக்க வேண்டும்.

பின்னர் 50ml அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஃபுட் கலர் சேர்த்து கொதிக்க விடுங்கள். இது கொதித்து வந்த பின்பு எலுமிச்சை சாறு, நறுக்கிய மல்லித்தழை தூவிக்கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து பின்னர் உருளைக்கிழங்குகளை மட்டும் பிரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இனி வாழைப்பூ வடை சுடும் போது இந்த மாதிரி செய்து பாருங்க. நீங்க எவ்வளவு வடை சுட்டு போட்டாலும் பத்தவே பத்தாது. ரொம்பவே சூப்பரா மொறு மொறுன்னு இருக்கும்.

பின்னர் கிரேவியில் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்து வடித்த சாதத்தையும் சேர்த்து பிரட்டி விடுங்கள். பின்னர் எடுத்து வைத்த உருளைக்கிழங்குகளை மேலே சேர்த்துக் கொள்ளுங்கள். பின் முதலில் வினிகரில் ஊற வைத்தவற்றை வடிகட்டி இதில் சேருங்கள். இதன் மீது நறுக்கிய மல்லி தழை, கொஞ்சம் போல எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் நெய் ஆகியவற்றை மேலே ஊற்றி அப்படியே கிளறாமல் ஒரு வாழை இலை அல்லது தையலை கொண்டு மூடி போட்டு மிதமான தீயில் வைத்து 8 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பின்னர் குறைந்த தீயில் வைத்து 7 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு 20 நிமிடங்கள் அப்படியே ஆவியிலேயே வேகட்டும். அவ்வளவுதாங்க, இப்போது திறந்து பார்த்தால் ஆகா!! அவ்வளவு அருமையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பொட்டேட்டோ 65 தம் பிரியாணி ரெசிபி ரெடி! ஃப்ரீயா இருக்கும் போது செஞ்சு பாருங்க இப்படி ஒரு பிரியாணியை சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

- Advertisement -