மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்பெஷல் காரச்சட்னியை இனி நம்ம வீட்டிலேயே சுலபமா இப்படி செய்யலாங்க. இந்த சட்னி மட்டும் அரைச்சுட்டீங்கன்னா இன்னைக்கு எல்லாம் நீங்க இட்லி ஊத்திக்கிட்டே இருக்க வேண்டியது தான்.

kara chutney
- Advertisement -

இட்லிக்கு எப்பொழுதுமே பெஸ்ட் காம்பினேஷன் என்றால் அது சட்னி தான். இந்த சட்னி வகைகளை எடுத்துக் கொண்டால் பல உண்டு. இந்த சட்னியிலும் ஒவ்வொரு ஹோட்டலில் செய்யப்படும் சட்னிக் என தனியான ஒரு சுவையை உண்டு. அதே போல் ஒவ்வொரு ஊரில் செய்யப்படும் சட்னியும் வெவ்வேறு விதமான சுவையில் இருக்கும் அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் ஒரு அருமையான காரச் சட்னியை நம் வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை 

இந்த சட்னி செய்ய முதலில் ஒரு பெரிய வெங்காயம் ஒரு சின்ன வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஐந்து பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னி செய்ய முதலில் சில பொருட்களை நாம் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

முதலில் அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் பூண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஐந்து காய்ந்த மிளகாய் மூன்று காஷ்மீரில் மிளகாய் இரண்டையும் சேர்த்த பிறகு ஒரு முறை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரிந்த வெங்காயத்தில் ஒரு பெரிய வெங்காயத்தை மட்டும் நீளவாக்கில் நறுக்கியதை இதில் சேர்த்து ஒரு கொத்து கருவேப்பிலை ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி அனைத்தையும் சேர்த்து வெங்காயத்தை நன்றாக நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் உடைத்த கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். இது இரண்டையும் சேர்த்த பிறகு அரை டீஸ்பூன் கல் உப்பையும் சேர்த்து நன்றாக அனைத்தும் வதங்கும் வரை வதக்கி அடுப்பை அணைத்து விட்டு இதை அப்படியே ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த சட்னியை மிக்ஸி ஜாரில் சேர்த்து பைன் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த சட்னிக்கு ஒரு தாளிப்பை தயார் செய்ய வேண்டும். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்து விடுங்கள். கடுகு பொரிந்ததும் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஒரு கொத்து கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்த பிறகு மீதம் இருக்கும் வெங்காயத்தை இதில் சேர்த்து நன்றாக வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் சரவண பவன் ஸ்டைல் தக்காளி சட்னியை அதே சுவையில் வீட்டில் செய்ய இந்த முறையில் தான் செய்யணும் தெரியும்மா?. அட்டகாசமான தக்காளி சட்னி ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

இப்போது நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் சட்னியை இதில் ஊற்றி இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பிறகு ஒரு கொதி வரும் வரை காத்திருந்த பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். நல்ல கம கம பாசத்துடன் மதுரை முனியாண்டி விலாஸ் காரச் சட்னி நம் வீட்டிலே தயாராகி விட்டது. சுட சுட இட்லியுடன் இந்த சட்னி வைத்து கொடுத்து பாருங்கள் இன்னைக்கு முழுவதும் நீங்கள் சமைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் அவ்வளவு ருசியாக இருக்கும்.

- Advertisement -