உங்கள் வீட்டில் நான்கு வெங்காயம் இருந்தால் போதும். இப்படி வீடே மண மணக்கும் சுவையில் சூப்பரான வெங்காய சட்னி செய்திடலாம்.

chutni
- Advertisement -

தினமும் இட்லி தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏதேனும் ஒரு சைடிஷ் செய்ய வேண்டி இருக்கிறது. அதிலும் நிறைய வீடுகளில் சாம்பார் அல்லது சட்னி தான் செய்வதுண்டு. இந்த சட்னி தேங்காய் சட்னி அல்லது பொட்டுக்கடலை சட்னியாகத் தான் இருக்கும். ஏனென்றால் இதை தான் வேலை குறைவாகவும் சட்டெனவும் செய்ய முடியும் ஆனால் வெங்காய சட்னி தக்காளி சட்னி அல்லது காரச் சட்னி இவற்றை செய்யும் பொழுது இதன் சுவைக்கு எப்போதும் சாப்பிடும் அளவை விட இன்னும் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள் அப்படி அனைவருக்குமே இந்த சட்னி களின் சுவை மிகவும் பிடிக்கும் அப்படி வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் மிகவும் அற்புதமான வெங்காய சட்னியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 4,தனியா – ஒரு ஸ்பூன், காஷ்மீரி சில்லி – 10, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, பூண்டு – 6 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வெல்லம் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 7 பல் பூண்டை தோலுரித்து வைக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை சுத்தமாக கழுவி, தோல் நீக்கி, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் காஷ்மீரி சில்லி சேர்த்து நன்றாக வறுத்து, அதனை தனியாக ஒரு நாட்டிற்க்கு மாற்றி கொள்ள வேண்டும். பிறகு அதே எண்ணெயில் ஒரு ஸ்பூன் தனியா சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் 7 பல் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் ஒரு கொத்து கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு எட்டிக்காய் அளவு புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.பின்னர் இதனையும் வேறு தட்டிற்க்கு மாற்றி ஆற வைக்க வேண்டும். பிறகு இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் வதக்கி வைத்துள்ள மிளகாயையும் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வெங்காய சட்னி தயாராகிவிடும்.

- Advertisement -