உங்கள் வீட்டின் தரித்திரம் நீங்க இந்த சிறு சிறு மாற்றங்களை செய்தாலே போதும். மகாலட்சுமி உங்கள் வீடு தேடி வந்து உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய துவங்கிவிடுவாள்.

latchumi kadaacham
- Advertisement -

தரித்திரம் என்பது யாரோ ஒருவர் மூலம் வீட்டிற்கு வருவதில்லை. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நம்மை அறியாமலே நமக்கு நாமே வரவழைத்து கொள்ளுவது தான். தரித்திரம் என்பது பெரும்பாலும் வறுமையை தான் குறிக்கும். பொதுவாக நம் சொல், செயல், எண்ணம் இவையனைத்தும் நல்ல முறையில் இருந்தாலே தரித்திரம் நம்மை நெருங்காது. தேவிகளில் முக்கியமாவர்கள் இரண்டு பேர் அது மூதேவி, ஸ்ரீதேவி இவர்கள் தான் நாம் நல்ல செழிப்பான வாழ்வு வாழ்வதற்கும், நிம்மதி இழந்து வாடும் வாழ்க்கை வாழ்வதற்கும் காரணம். ஆம் நாம் செய்யும் செய்கையை பொறுத்தே நம்மிடம் எந்த தேவி வாசம் செய்வாள் என்பது முடிவாகிறது.

சரி தரித்திரத்திற்கும் மூதேவிக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? மூதேவி எங்கு வாசம் கொண்டு இருக்கிறாளோ அங்கு தான் தரித்திரம் தாண்டவமாடும். நமக்கு தெரிந்த வகையில் எப்போதும் தூங்கி கொண்டே இருப்பவர்களை தான் மூதேவி பிடித்து விட்டது என்று கூறுவோம். அதுவும் சரி ஒருவர் எப்போதும் தூங்கி கொண்டு இருந்தால் என்னவாகும்? படிப்பவர்களாக இருந்தால் படிப்பில் ஆர்வம் இருக்காது, வேலைக்கு செல்பவராக இருந்தால் வேலைக்கு செல்ல பிடிக்காது, எதுவுமே செய்யாமல் ஒருவர் இருந்தால் அவர்கள் வாழ்கையில் முன்னேற்றம் இருக்குமா? நிச்சயம் இருக்காது. அப்படி முன்னேற்றம் இல்லாதவர் வாழ்க்கை எப்படி இருக்கும்? வறுமையும் துன்பமுமாகத்தான் தான் இருக்கும். இதை தான் மூதேவி வாசம் செய்யும் இடத்தில் தரித்திரம் இருக்கும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

தரித்திரம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்றால் நம் வீட்டில் ஸ்ரீதேவி வாசம் செய்ய வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். நாமும் நம்மை சுற்றியும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவ்வளவு தான் எங்கு அகம், புறம் இரண்டும் தூய்மையாக இருக்கிறதோ அங்கு ஸ்ரீதேவி அதாவது மகாலட்சுமி வாசம் செய்ய ஆரம்பித்து விடுவாள்.

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சமையலறையும் முக்கியம் தான். காலையில் சமையலை துவங்கும் முன்பே நன்றாக துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். இதை முதல் நாள் இரவே செய்து விட்டாலும் நல்லது அப்போது தான் அடுத்த நாள் காலையில் சமையல் வேலையை துவங்கும் போதே ஒரு விதமான நல்ல மனநிலையில் துவங்க முடியும். அப்படி அரம்பிக்கும் சமையல் முதலில் பால் அல்லது சாதம் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை செய்ய துவங்க வேண்டும். இந்த நேரத்தில் நம் வீட்டில் எப்போதும் அன்னத்திற்கு குறையில்லாமல் இருக்க வேண்டும் என்றுஅன்னலட்சுமியை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக பழைய குழம்பு வாடை வரும் வரையில் வைத்திருக்க கூடாது. சமயலறையில் இருக்கும் பொருட்கள் எல்லாம் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பொருட்களை ஒழுங்கான முறையில் அடுக்கி வைக்க வேண்டும். பாத்திரங்களை தேய்காமல் அப்படியே போட்டு வைத்தால் அதில் இருந்து வாடை வர ஆரம்பித்து விடும். இந்த துர்வாடை வந்தாலே அங்கு தரித்திரம் வர தொடங்கி விடும்.

அடுத்ததாக படுக்கை அறையில் பொதுவாக பகலில் படுக்கையை விரிக்க கூடாது என்று பெரியவர்கள் கூறி யிருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் பெட் உபயோகிப்பதால் அப்படி சுருட்டி வைக்க முடியாது. ஆகையால் காலை எழுந்ததும் முதலில் பெட்சீட், தலையனை போன்றவைகளை ஒழுங்கு படுத்தியபின் தான் நாம் அடுத்த வேலைக்கே செல்ல வேண்டும்.

- Advertisement -

சிலர் வீட்டுக்கு உள்ளேயே துணி காய வைக்கும் வழக்கம் இருக்கும். அப்படி காயும் துணி நம் முகத்தில் உரசும் வாய்ப்பு அதிகம். அப்படி செய்தாலும் தரித்திரம் வரும். ஏனெனில் நம் முகத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் இப்படி ஈர துணியும் அதே போல் சில வீடுகளில் அழுக்கு துணி கூட இப்படி தான் ஆங்காங்கே தொங்கி கொண்டு இருக்கும். அப்படி இருந்தால் அங்கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்யவே மாட்டாள் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். இதிலும் முக்கியமான ஒன்று வாசல் கதவுகளில் துணியை தொங்க விடுவது, இதை கண்டிப்பாக செய்யவே கூடாது.

பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும். அப்போது பழைய காய்ந்த மலர், தண்ணீர் ஆகியவற்றை தினமும் மாற்ற வேண்டும். நல்ல நறுமணம் மிக்க ஊதுபத்தி, சாம்பிராணி போட வேண்டும். இந்த வாசங்களில் தான் மகாலட்சுமி ஆனந்தமாக ஆட்சி செய்வாள்.

இதையெல்லாம் எப்படி சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அதே போல் தான் கழிவறையையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நம் வீடுகளில் வீட்டிற்கு உள்ளேயே கழிவறை வைத்து கட்டி விடுகிறோம். இதை சுத்தமாக வாடை இல்லாமல் பார்த்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த கழிவறை வாடை வரும் இடத்தில் நிச்சயம் தரித்திரம் வரும்.

வீட்டை எந்தளவிற்கு தூய்மையாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு நாமும் சுத்தமாக இருக்க வேண்டும். எந்த வீட்டு நல்ல வாசத்துடன் சுத்தமாகவும், எந்த ஒரு நாற்றம் எந்தவித அழுக்கும் இல்லாமல் தூய்மையாக இருக்கிறதோ அது தரித்திரம் நீங்கி மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக மாறிவிடும் என்பது உறுதி.

- Advertisement -