மகா சிவராத்திரி அன்று வீட்டில் ஏற்ற வேண்டிய வில்வ தீபம்

sivan3
- Advertisement -

வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த மகா சிவராத்திரி தினத்தில், சிவபெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு செய்த பாவங்கள் தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. செய்த பாவங்கள் கழிந்து, புண்ணியத்தை சேர்க்கக்கூடிய ஒரு வாய்ப்பை, இந்த நாளில் கடவுள் நமக்கு கொடுத்திருக்கின்றான். ஆகவே இந்த சிவராத்திரி நாளை யாரும் தவற விடாதீங்க.

இந்த வருட மகா சிவராத்திரி ஆனது நாளைய தினம் 8.3.2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வரவிருக்கின்றது. சும்மா இல்லைங்க இந்த சிவராத்திரி அன்று பிரதோஷமும் சேர்ந்து வந்திருப்பதால், நமக்கு இதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கும். கட்டாயம் கோவிலுக்கு சென்று எல்லோரும் சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். அதை தவிர்த்து உங்களுடைய வீட்டில் இந்த ஒரு விளக்கையும் ஏற்றி வையுங்கள். அந்த சிவபெருமானின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். சிவ பக்தர்கள் யாரும் இந்த வழிபாட்டை தவறவிட்டாதிங்க.

- Advertisement -

வில்வ தீபம் ஏற்றும் முறை

இந்த வருடம் மார்ச் மாதம் 8ஆம் தேதி இரவு 8.20 மணி அளவில் தான் தேய்பிறை சதுர்த்தசி பிறக்கின்றது. மாதம் தோறும் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தசி திதியை மாத சிவராத்திரி என்று சொல்லுவார்கள். இந்த மாசி மாதம் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தசி திதியில் தான் மகா சிவராத்திரி ஆனது கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் இந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8:20 மணிக்குத்தான் தேய்பிறை சதுர்த்திசி பிறக்கிறது. மகா சிவராத்திரி வழிபாட்டை இந்த நேரத்தில் தான் தொடங்க வேண்டும். மார்ச் 9ஆம் தேதி காலை 6:00 மணி வரை இந்த சிவராத்திரி வழிபாடானது தொடரும். இதுதான் சிவபெருமானை வழிபாடு செய்யக்கூடிய நேரம். இந்த நேரத்தில் நீங்கள் கோவிலுக்கு சென்று 4 ஜாம பூஜையில் கலந்து கொண்டு வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

இது தவிர உங்களுடைய வீட்டிலேயே மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிவராத்திரி நேரத்தில், விளக்கு போட்டும் சிவபெருமானை வழிபாடு செய்யலாம். பாவங்கள் நீங்க சிவராத்திரி நாளில் வீட்டிலிருந்தே விளக்கு போட்டு சிவபெருமானை வழிபாடு செய்வது எப்படி ஆன்மீகம் சார்ந்த தகவல் இதோ உங்களுக்காக. இந்த வழிபாட்டிற்கு உங்களுக்கு மிக மிக முக்கியமாக தேவைப்படும் பொருட்களை முதலில் பார்த்து விடுவோம்.

வில்வ இலைகள், அகல் விளக்கு, நல்லெண்ணெய் அல்லது நெய், ருத்ராட்சம் மஞ்சள் திரி, சிகப்பு திரி. மஞ்சளில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து திரியை அதில் போட்டு பிசைந்து நிழலிலேயே உலர வைத்திருங்கள். குங்குமத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இந்த வெள்ளை திரியை அதில் போட்டு, பிசைந்து நிழலிலேயே அதையும் உலர வையுங்கள். இரண்டு திரியும் தயார்.

- Advertisement -

ஒரு அகலமான தாம்பூல தட்டை எடுத்துக்கோங்க. அதில் வில்வ இலைகளை பரப்பி வைத்து விடுங்கள். அதன் நடுவே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் சிகப்பு திரியை ஒன்றாக திரித்து அந்த விளக்கில் போடவும். இந்த தட்டில் வில்வ இலைகளுக்கு மேலே ஒரு ருத்திராட்சத்தை வைத்து விடுங்கள்.

பூஜை அறையில் பூக்களால் அலங்காரம் செய்து இந்த தட்டை பூஜை அறையில் வைத்து, சிவபெருமானுக்கு ஏதாவது ஒரு இனிப்பு பிரசாதம் நிவேதியமாக வைத்து விளக்கை ஏற்றி சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து சிவ பாடல்களை பாடி, சிவ மந்திரத்தை உச்சரித்து உங்களுடைய பிரார்த்தனையை வையுங்கள்.

சிவபெருமானுக்கு உரிய வில்வ இலை இருக்கிறது, சிவபெருமானுக்கு உகந்த ருத்ராட்சம் இருக்கிறது, மஞ்சள் நிறத்தில் போடப்பட்டிருக்கும் திரி சக்தி தேவியை குறிக்கிறது. சிவப்பு நிறத்தில் போடப்பட்டிருக்கும் திரி சிவபெருமானை குறிக்கிறது, இருளை விளக்கக்கூடிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. மகா சிவராத்திரி நாளில் இதைவிட சிறப்பாக சிவபெருமானை வீட்டில் இருந்தபடி வேறு யாராலும் வழிபாடு செய்ய முடியாது.

பாடல்கள் பாடி மந்திரத்தை உச்சரித்து வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை வீட்டில் நிறைவு செய்து கொள்ளுங்கள். குறைந்தது 1/2 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரம் வரை நீங்கள் இந்த வழிபாட்டை வீட்டில் மேற்கொள்ளலாம். நாளைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணிக்கு மேலாக, சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு முன்பாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த வழிபாட்டை நீங்க உங்க வீட்டில செய்யலாம்.

பூஜை முடிந்த பிறகு அந்த ருத்ராட்சத்தை கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். ருத்ராட்சம் போட வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் நாளைய தினம் இந்த பூஜையை செய்து விட்டு அந்த ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை கொடுக்கும். வீட்டில் எல்லோருக்கும் ருத்ராட்சம் கட்டி விட வேண்டும் என்றால் பூஜையில் எத்தனை ருத்ராட்சம் தேவையோ, அத்தனை ருத்ரம் ருத்ராட்சத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

எல்லா சிவபக்தர்களுக்கும் இந்த பூஜை சமர்ப்பணம். நாளை மகா சிவராத்திரி அன்று இந்த விளக்கை ஏற்றி வைத்து, வீட்டில் இருந்தபடியே ஈசனை வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் அவன் பாதத்தில் முத்தி கிடைக்கும். செய்த பாவங்கள் தீரும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -