பணப்பிரச்சனை தீர மகாலட்சுமி தாயார் வழிபாடு

mahalakshmi panam
- Advertisement -

இந்த கார்த்திகை மாதமே சிறப்பு வாய்ந்த ஒன்று தான். கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் மிக விசேஷமானது கார்த்திகை மாத பௌர்ணமி எப்படி விசேஷமானது. அதே போல் இந்த கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசையும் மிகவும் விசேஷமானது. மகாலட்சுமி தாயார் பாற்கடலில் இருந்து அவதரித்த நாள் இந்த கார்த்திகை அமாவாசை என்று சொல்லப்படுகிறது.

வீட்டில் பண பற்றாக்குறை இன்றி செல்வ வளத்துடன் வாழ அருள் செய்யும் மகாலட்சுமி அவதரித்த நாளில் அவரை நல்ல முறையில் பூஜை செய்து வழிபட்டால், நம்முடைய வீட்டில் இருக்கும் பணப்பிரச்சனை அனைத்தும் நீங்கி செல்வ வளம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பூஜை எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணப் பிரச்சனை தீர மகாலட்சுமி தாயார் வழிபாடு

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை 12.12. 2023 அன்று செய்ய வேண்டும். இந்த வழிபாடு செய்வதற்கு செவ்வாய்க்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து முடித்துப் பிறகு விரதத்தை தொடங்கலாம். விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள் எளிமையான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அசைவத்தின் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதே போல் அன்றைய தினத்தில் அமாவாசை இருப்பதால் இந்த வழிபாடு செய்பவர்கள் முன்னோர் வழிபாட்டை தாராளமாக செய்யலாம் தவறில்லை.

இந்த வழிபாடு செய்வதற்கு காலை 6 லிருந்து 7.30 மணிக்குள்ளாக செய்து விடுங்கள் அல்லது 9.15 லிருந்து 10.15 வரை செய்யலாம். பகல் 10.45 மணி முதல் 11.45 வரை செய்யலாம் அல்லது மாலை 5.30 மணி முதல் 8 மணிக்குள்ளாக செய்யலாம். இந்த பூஜையை எப்போது செய்தாலும் விரதம் இருப்பவர்கள் மாலை வரை விரதம் இருப்பது நல்லது. மாலையில் தான் பூஜையை செய்யப் போகிறோம் என்றால் பூஜை முடித்த பிறகு சாப்பிடலாம்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்கு முன்பாக பூஜை அறையில் மஞ்சளால் முதலில் விநாயகரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மகாலட்சுமி தாயார் படத்திற்கு வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து தயாராக வைத்து விடுங்கள். இந்த பூஜைக்கு நெய்வேதியமாக மூன்று வகை இனிப்பு மூன்று வகை காரம் பலகாரம் மூன்று விதமான சாதம் இவை அனைத்தையும் தயார் செய்து வாழை இலையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

இதைத் தவிர வேறு நெய்வேத்தியங்கள் செய்வதாக இருந்தாலும் செய்யலாம் ஆனால் இது தான் முக்கியமானது. அதன் பிறகு பூஜை அறையில் ஐந்து அல்லது மூன்று நெய் தீபத்தை பஞ்சுத் திரி போட்டு ஏற்றி வைத்து விடுங்கள். நல்ல வாசம் மிக்க ஊதுபற்றிகளை ஏற்றி வைத்து விட்டு இப்பொழுது இந்த தீபத்தின் முன் நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் கையில் கொஞ்சம் வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு மகாலட்சுமி தாயாருக்கு மலர்களால் அர்ச்சனை செய்வது போல ஒவ்வொரு மலராக போடுங்கள். அந்த நேரத்தில் ஓம் மகாலட்சுமி தாயே போற்றி ஓம் என்ற இந்த நாமத்தை 108 முறை சொல்ல வேண்டும். இப்படி அர்ச்சனை செய்து மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

மகாலட்சுமி தாயாருக்கு படைத்த இந்த நெய்வேத்தியத்தை வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் முதலில் அவர்களுக்கு கொடுங்கள். அதன் பிறகு விரதம் இருப்பவர்களும் வீட்டில் இருப்பவர்களும் பேசாததை உண்ணலாம். கார்த்திகை மாதத்தில் சிறப்பு வாய்ந்த அமாவாசை செவ்வாய்க்கிழமை நாளில் வந்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே: செய்வினையை செயலிழக்க செய்யும் பரிகாரம்

இந்த நாளில் மகாலட்சுமி தாயார் இப்படி வழிபாடு செய்தால் என்றென்றைக்கும் வீட்டில் பணப் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -