மகாலட்சுமியின் வசிய முத்திரை! இந்த முத்திரையை கையில் பிடித்துக்கொண்டு, நீங்கள் என்ன கேட்டாலும் மகாலட்சுமி உடனே தந்து விடுவார்கள்.

mahalakshmi-selvam-gold-coins

சித்தர்கள் நமக்கு சொல்லி விட்டுச் சென்ற முத்திரைகளை அவ்வளவு சுலபமாக நினைத்து விடக்கூடாது. நம்முடைய விரல்களை இணைத்து, கோர்த்து, வைக்கக்கூடிய முத்திரைகள், நம்முடைய தலையெழுத்தை கூட மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தவை. சில சமயம் கிரக சேர்க்கையின் மூலம், நமக்கு எப்படி நன்மை நடக்கின்றதோ, அதே போல் தான் நம்முடைய விரல்களின் சேர்க்கையினாலும் நமக்கு அபரிவிதமான நன்மை நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நம்முடைய விரல்களிலும், பஞ்ச பூதங்களும், நவ கிரகங்களும் வாசம் செய்கின்றது. ஆகவே, விரல்களை சேர்த்து நாம் செய்யக்கூடிய முத்திரைகளின் மூலம் நம்முடைய ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கைகள் தவறாக இருந்தால் கூட, அதை சரியான முறையில் மாற்றும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது.

mahalakshmi

சரிங்க, முத்திரைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த முத்திரையாக சொல்லப்படும், மகாலட்சுமி தேவியை நம் வசப்படுத்த கூடிய மகாலட்சுமி வசிய முத்திரையை பற்றிதான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த முத்திரையை எப்படிப் பயன்படுத்தலாம், எதற்காக பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய தெளிவான விவரங்களையும் சேர்த்து தெரிந்து கொள்வோமா.

முதலில் முத்திரையை எப்படி பிடிப்பது என்று பார்த்துவிடுவோம். உங்களது முதுகுத் தண்டுவடத்தை நேராக வைத்து, சம்மணம் போட்டு தரையில் ஒரு பாயை விரித்து, அதன் மேல் அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பின்பும் இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து அஞ்சலி முத்திரையை பிடியுங்கள். அஞ்சலி முத்திரை என்பது இரு கைகளையும் சாமி கும்பிடுவது போல் வைத்துக் கொள்வதுதான் அஞ்சலி முத்திரை.

mahalashmi-mudra

அடுத்தபடியாக வலது கையில் இருக்கும் ஐந்து விரல்களையும், இடது கையில் இருக்கும் ஐந்து விரல்களையும் ஒன்றாக கோர்த்து மடக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். மெதுவாக இரண்டு கைகளில் இருக்கும் நடு விரல்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். இரு கைகளில் இருக்கும் ஆள்காட்டி விரலின் முனைகளை சேர்க்கும்படி வைக்க வேண்டும். இரண்டு கட்டை விரல்களும் உங்களது நெஞ்சுக்குழி மத்தி பகுதியை பார்த்தவாறு இருக்க வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து அதே போல் நீங்களும் செய்து பழகிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் முத்திரையை பிடித்துவிட்டு மகாலக்ஷ்மியை மனதார நினைத்து, நேர்மறை வார்த்தைகளை உச்சரித்து மகாலட்சுமிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அதன் பின்பாக உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான வரங்களை மனமுருகி வேண்டுங்கள். 5 நிமிடங்கள் இந்த முத்திரையை படித்து மனதார ஏதேனும் ஒரு குறிக்கோளை வைத்து வேண்டிக் கொண்டால், அதற்கான பலனை உங்களால் கூடிய விரைவில் அடைந்துவிட முடியும்.

mahalakshmi

ஏதாவது ஒரு புதிய தொழில் தொடங்கப் போகிறீர்கள் அல்லது காண்ட்ராக்ட் உங்கள் பக்கம் கையொப்பம் ஆகவேண்டும் நீண்டநாள் குறிக்கோள் நிறைவேற வேண்டும், தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும், இத்தனை நாட்களில், இவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் இவ்வாறாக வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எந்த தேவை இருந்தாலும் சாதாரணமாக வேண்டிக் கொள்வதைவிட, இந்த முத்திரையைப் பிடித்து நம் வேண்டுதல் வைக்கும்போது, அந்த வேண்டுதலுக்கு பலன் இரட்டிப்பாகும் என்பது சந்தேகமே கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையோடு செய்யப்படும் எந்த முயற்சியும் தோல்வியில் போய் அடைந்ததே கிடையாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் இதை மட்டும் செய்தால் வருமானம் பலவழிகளில் வந்து சேரும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.