மகாலட்சுமியை வரவேற்கும் நிலை வாசல்

mahalakshmi nilai vasal
- Advertisement -

வீடு என்ற ஒன்று இருந்தால் அந்த வீட்டிற்குள் செல்வதற்காக கதவுகள் என்று இருக்கும். இந்த கதவுகள் தானாக இயங்காது. இந்த கதவுகள் இயங்குவதற்கு நிலை வாசல் என்ற ஒன்று வேண்டும். அப்படிப்பட்ட நிலை வாசலின் வழியாக தான் நம்முடைய வீட்டிற்குள் நன்மைகளும் தீமைகளும் அடி எடுத்து வைக்கும். நன்மைகள் மட்டும் வீட்டிற்குள் வந்தால் மகாலட்சுமி தாயாரின் வருகையும் இருக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நன்மைகளோடு மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் வருவதற்கு நிலை வாசலில் செய்யக்கூடிய எளிமையான வழிமுறைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

மஹாலக்ஷ்மி வீட்டிற்கு தேடி வர

ஒரு வீட்டை கட்ட ஆரம்பிக்கிறோம் என்றால் ஆரம்பிக்கும் பொழுது பூமி பூஜை என்று போடுவோம். பிறகு நிலை வாசலை வைக்கும் பொழுது ஒரு பூஜை போடுவோம். அடுத்ததாக தளம் போடும் பொழுது ஒரு பூஜை போடுவோம். வேறு எதுக்கும் பூஜை போடுவது கிடையாது. அப்படி நாம் நிலை வாசலில் பூஜை செய்யும்பொழுது மட்டும் சுமங்கலி பெண்களை அழைத்து நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அந்த நிலை வாசலுக்கு கீழே நவதானியங்களையோ அல்லது நவரத்தினங்களையோ அல்லது பஞ்சலோகங்களையோ வைத்து வழிபாடு செய்து பிறகுதான் நிலை வாசலை வைப்போம்.

- Advertisement -

நிலைவாசலை வைக்கும் பொழுதே இவ்வளவு வழிமுறைகளை பின்பற்றும் நாம் அந்த வீட்டிற்கு குடி சென்ற பின் அந்த நிலை வாசலை கவனிப்பதே கிடையாது. இதனால் தான் பலரது இல்லங்களிலும் மகாலட்சுமியின் அருள் என்பது கிடைக்காமல் இருக்கிறது. மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் நிலை வாசலில் என்னென்ன செய்ய வேண்டும் என்று இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

முதலில் நிலை வாசலின் உள்புறம் அதாவது வீட்டிற்குள் நிலை வாசலை பார்த்தவாறு ஒரு பெருமாளின் படத்தை நாம் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் பெருமாளை பார்ப்பதற்காக மகாலட்சுமி தாயார் வருவார் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக நிறை வாசலில் எந்தவித ஆணிகளையும் அடிக்கக் கூடாது. நிலை வாசலில் எந்தவித விரிசல்களோ ஓட்டைகளோ இருக்க கூடாது. இப்படி இருந்தால் மகாலட்சுமி தாயாரின் வருகை என்பது இருக்காது.

- Advertisement -

அதையும் தாண்டி ஆணி அடித்து விட்டோம் என்ன செய்யலாம் என்று கேட்டால் ஆணியை எடுத்து விடுங்கள். ஆணி இருந்த அந்த ஓட்டையை மஞ்சளால் மூடி விடுங்கள். இதேபோல் நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைப்பது நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்த பழக்கமாகும். நிலை வாசலின் இரண்டு புறமும் மஞ்சளை தடவி அதில் குங்குமத்தை வைப்பார்கள். இது ஆன்மீக ரீதியாக எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.

ஆனால் இன்றைய காலத்தில் பலரும் மஞ்சள் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பெயிண்டை அடித்து விடுகிறார்கள். இதனால் எந்த பிரயோசனமும் இல்லை. ஒரு வேளை நிலை படி இல்லை என்பவர்கள் தங்களுடைய நிலை வாசலின் மேலே மஞ்சளை தடவி குங்குமம் வைக்கலாம். எப்பொழுதெல்லாம் நமக்கு வாய்ப்புகள் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் வீட்டு நிலை வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். இது எப்பொழுது காய்கிறதோ அப்பொழுது எடுத்து போட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர சதாசிவாஷ்டமி வழிபாடு

இந்த எளிமையான நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறைகளை நாமும் பின்பற்றினோம் என்றால் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் வருகை நம் வீட்டில் இருக்கும் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது

- Advertisement -