மகாலட்சுமியின் அம்சம் கொண்ட பொருட்கள்

mahalashmi
- Advertisement -

சில வீடுகளில் இருக்கும் பெண்கள், சில பொருட்கள் வீட்டிற்குள் வந்தாலே, அதை உதாசீனப்படுத்துவீர்கள். அதாவது ‘தேவையில்லாமல் இந்த பொருளை எதற்கு வாங்கி வந்தீர்கள். இந்த பொருள் இப்போது நமக்கு தேவையே கிடையாது. இதை எப்படித்தான் பயன்படுத்த போகின்றோமோ தெரியவில்லை’ என்று சலித்துக் கொள்வார்கள். அது தவறு.

நம் வீடு தேடி தானாக வரக்கூடிய பொருட்கள் எல்லாம் நம் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியவை. அந்த வரிசையில் மகாலட்சுமியின் அம்சம் கொண்ட பொருட்கள் சில உள்ளது. அது என்ன என்னன்னு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் எதிர்பாராமல் உங்கள் வீட்டிற்கு வந்தால், உங்களுக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் தான். அந்த பொருளின் வழியாக உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமியின் நுழைந்ததாக அர்த்தம். சரி, வாங்க அது என்னென்ன பொருட்கள் நாமும் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

- Advertisement -

மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்கள்

குங்குமச்சிமிழ், நந்தி சிலை, கோ மாதா சிலை, மல்லிகைப்பூ, குத்து விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு, சங்கு, கோமதி சக்கரம், நிறைய இனிப்பு பலகாரங்கள், அரிசி பருப்பு, இவைகளில் எது வந்தாலும் அது லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருட்களாக தான் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க உங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து உங்களிடம் கொடுக்கிறார்கள் என்றால், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய பொருளாக இருக்கும்.

வாடி போகக் கூடிய பூ வகைகள், கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்கள் என்றால் உங்கள் கைக்கு வந்த மகாலக்ஷ்மி அம்சம் பொருந்திய அந்த பொருட்களை மனதார வாங்கி, நீங்கள் உடனடியாக பயன்படுத்த வேண்டும். பூக்களாக இருந்தால், வாடுவதற்க்கு முன் பெண்கள் தலையில் சூடிக்கொள்ளவும். வீட்டில் இருக்கும் சுவாமி படங்களுக்கு போடுங்கள்.

- Advertisement -

இனிப்பு பலகாரங்கள் என்றால் வயிறார மனதார அதை சாப்பிடுங்கள். அப்படியும் அதிகமாக இருக்கிறதா. உடனடியாக அதை வீட்டில் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு தானம் செய்யுங்கள். நந்தி, சங்கு, குங்குமச்சிமிழ் போன்ற தெய்வீக கடாட்சம் நிறைந்த பொருட்கள் வந்தால் அதை பூஜை அறையில் வைத்து பூஜியுங்கள். அந்த பொருளை பூட்டு வைக்காமல் பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களை நீங்கள் பார்க்க செல்லும் போது உங்களால் முடிந்த மகாலட்சுமி அம்சம் பொருத்திய பொருட்களை வாங்கிக் கொண்டு போய் அவர்களுக்கு கொடுங்கள். திருமணம் காதுகுத்து போன்ற நல்ல காரியங்களுக்கு பரிசு கொடுப்பதாக இருந்தால் இப்படி மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களை வாங்கி கொடுங்க.

- Advertisement -

இதனால் உங்களுக்கும் செல்வ செழிப்பு அதிகரிக்கும். அந்த பொருளை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கும் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதோடு சேர்த்து, மனநிறைவு அதிகரித்து அதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கத் தொடங்கும். அதை விடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் பரிசாக வாங்குவது, அலங்காரப் பொருட்கள், டீ கப் வாங்குவது, கடிகாரமாக வாங்கி பரிசளிப்பது, பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்குவது, இந்த பொருட்களை எல்லாம் பரிசாக வாங்கி கொடுத்தால் அட்டை பெட்டியல் போட்டு பரண்மேல் தேக்கி வைப்பதில் எந்த உபயோகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: சனி பகவானின் தாக்கம் குறைய தானம்

அடுத்தவர்களுக்கு பரிசளிக்கும் போது கொஞ்சம் சிந்தித்து காசை செலவு செய்யணும். நாம் வாங்கித் தரும் பொருளை அவர்கள் தினம் தினம் பயன்படுத்தும் படி வாங்கிக் கொடுக்கவும். மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த குறிப்பு நிச்சயம் அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -